வீர பிரமேந்திர சுவாமிகள்!
(இந்தியாவின் நாஸ்டர்தாம்ஸ்)
நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர்காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர்.
அவர் எழுதிவைத்த சம்பவங்கள் பலவும், அப்படியே அவர் சொன்ன விதமே நடப்பதைப் பார்த்து இன்று உலகம் திகைக்கிறது. அவரது புத்தகங்களில் அடுத்தடுத்து என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய ஒரு தனி ஆராய்ச்சியே நடக்கிறது.
சித்தர் உலகிலும் ஒரு நாஸ்ட்ரடாமஸ் உண்டு. ஆந்திர நாட்டைச் சேர்ந்த வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல்
பிறந்தவர். மணவாழ்வு மேற்கொண்டு மனைவியுடனும் குழந்தை களுடனும் வாழ்ந்தவர். "காலக்
ஞானம்' என்ற அரிய நூலை எழுதியவர். அந்த நூலிலில் எதிர்காலத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நடக்குமென்று தெளிவாக எழுதப்படுள்ளதுதான் ஆச்சரியம்.
பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரண ஆசாரி, பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீர பிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்துவிட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பிரகதாம்பாள். ஒரு முனிவரிடம் குழந்தையை ஒப்படைத்தஅவள், தான் வாழவிரும்பாமல் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள்.
முனிவர் அந்த அழகிய குழந்தையைக் கனிவோடு பார்த்தார். எவ்விதம் அந்த தெய்வீகக் குழந்தையை வளர்ப்பது என சிந்தனையில் ஆழ்ந்தார். இறைவன் கட்டளையேபோல,அவரைத் தேடிவந்தார்கள் இருவர். வீர போஜர், வீர பாப்பம்மா என்ற அவ்விருவரும் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக உறுதிகூறி வாங்கிச் சென்றார்கள்.
வீரபிரம்மத்தைப் பதினான்கு வருடம் மிகப் பாசத்துடன் வளர்த்தார்கள் அவர்கள். அப்போதுதான் அந்த சங்கடமான சம்பவம் நிகழ்ந்தது. வீரபிரம்மத்தின் வளர்ப்புத் தந்தை காலமாகிவிட்டார்.
பிறந்தபோதே தந்தையையும் பின் தாயையும் இழந்தது, இப்போது வளர்ப்புத் தந்தையையும் இழந்தது வீரபிரம்மேந்திரரை சிந்தனையில் ஆழ்த்தின. தத்துவ ஞானத்தில் தோய்ந்தது அவர் மனம். தம் வளர்ப்புத் தாயிடம், தமக்கு வற்றாத ஆன்மிகத் தேடல் இருப்பதால் அந்த வழியில் வாழ்க்கை நடத்தப்போவதாகக் கூறி, பிரியாவிடை பெற்று வீட்டைவிட்டு வெளியேறினார்.
கால்போன போக்கில் நடந்தார். எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியாக நெடுநேரம் தியானம் செய்தார். இந்த வாழ்வின் பொருள் என்ன என்றறியும் தீராத ஆவல் அவருக்கிருந்தது. அவர் போகாத கோவில் இல்லை.
ஒருநாள் இரவு... நடந்து நடந்து கால்கள் வலிலித்தன. வீரபிரம்மேந்திரர் பனகானபள்ளி என்ற அழகிய சிறு கிராமத்திற்கு வந்துசேர்ந்தார். அங்கே அச்சம்மா என்ப வளின் வீட்டுத் திண்ணை காலிலியாக இருந்தது. அதில் படுத்து ஆனந்தமாக உறங்கினார்.
காலை கதவைத் திறந்து வெளியே வந்து திண்ணையைப் பார்த்தாள் அச்சம்மா. யாரோ ஒரு பையன் உறங்குகிறானே? உறங் கும்போதும் அவன் முகத்தில் தென்பட்ட ஒளி அச்சம்மாவை வசீகரித்தது. அந்தப் பையன்மேல் அவளுக்குத் தாயன்பு பெருகியது.
அவன் எழுந்ததும் "யாரப்பா
நீ' என்று விசாரித்தாள் அவள். அவன் தான் ஓர் அநாதை என்றும், ஊர் ஊராகச் சுற்றி வருவதாகவும் தெரிவித்தான். "எனக்கு
நான் வளர்க்கும் மாடுகளை மேய்க்க ஒருவன் தேவை. கண்ட இடங்களில் சுற்றுவானேன்?
இனி இங்கேயே இரு!' என்று கண்டிப்பு கலந்த பிரியத்தோடு சொல்லிலி அவனுக்கு உணவளித்தாள் அச்சம்மா. இப்படியாக வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவின் மாடுகளை மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தப்பட்டார்.
வீரபிரம்மேந்திரர் மாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வட்டக் கோடு வரைந்துவிடுவார். மாடுகள் அந்தக் கோட்டுக்குள்ளிருந்து புல்மேய்ந்து கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்லாது. மாடுகள் அவரைப் பெரிதும் நேசித்தன. மாடுகள் புல்மேயும் தருணத்தில் வீரபிரம்மேந்திரர் காலக் ஞானம் என்ற எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் நூலை எழுதலானார். பனையோலையில் முட்களால் எழுதப்பட்டதே அந்த நூல். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அந்த நூலை எழுதிவந்தார் அவர்.
இப்படியாகக் காலம் போய்க்கொண் டிருந்தபோது, ஒருநாள் மாடுகளை அடித்துச் சாப்பிடும் எண்ணத்தில் காட்டிலிலிருந்து ஒரு புலிலி அங்கு வந்தது. ஆனால் வீரபிரம்மம் கிழித்த கோட்டினுள்ளே செல்ல இயலாமல் புலிலி தத்தளித்துத் திரும்பிச் சென்றது.
இதைப் பார்த்தார்கள் சில இடையர்கள். அவர்கள் அச்சம்மாவிடம் சென்று இந்தத் தகவலைச் சொன்னார்கள். அச்சம்மா வியப்படைந்தாள். ஏற்கெனவே வீரபிரம்மேந்திரரின் முகத்தில் தென்பட்ட தெய்வீக ஒளி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. தவிர அவர் ஏதோ தொடர்ந்து எழுதி வருவதையும் அவள் அறிவாள்.
அன்று வீரபிரம்மேந்திரர் வீடு திரும்பியதும், அச்சம்மா அவரிடம் தன்னைமன்னிக்குமாறு வேண்டினாள். அவர் பெரிய மகான் என்பதைத் தாம் இப்போதுதான் அறிந்ததாகவும், அவரை மாடுமேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தியது பெரும் தவறு என்றும் அவள் கண்ணீர் உகுத்தாள்.
"ஏதோ
ஒரு தொழில் செய்து எல்லாரும் வாழவேண்டியதுதான். கண்ணனே மாடு மேய்த்தவன்தான். அது ஒன்றும் இழிவான தொழில் அல்ல!' என்றுகூறி அவளை சமாதானப்படுத்தினார் வீரபிரம்மேந்திரர்.
அச்சம்மா அவர் எழுதிவரும் நூல் என்னவென்று விசாரித்தாள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைத் தான் கணித்து எழுதிவருவதாக அவர் தெரிவித்தார். "எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமென்று எனக்கு ஓரளவாவது சொல்ல இயலுமா' என்று அச்சம்மா கேட்டாள். வீரபிரம்மம் நகைத்துக்கொண்டே சில விஷயங்களைச் சொன்னார். அவற்றில் சில:
"புண்ணிய
நதிகள் வற்றிவிடும். கடல் பொங்கி நகருக்குள் நுழையும். அதனால் அதிகம்பேர் உயிரிழப்பார்கள். கணவனை மட்டுமே மணந்து வாழும் பத்தினிப் பெண்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஆண்கள்- பெண்கள் இரு தரப்பாரிடமும் ஒழுக்கம் கெடும். இந்தியா இரண்டாகவும் பின்னர் மூன்றாகவும் பிரியும். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகமாவதால் குழந்தை பிறப்பதை செயற்கை முறையில் தடுக்கப் பார்ப்பார்கள். பெரியோருக்கு அடங்கி சிறியோர் நடந்ததுபோக, சிறியோருக்கு அடங்கி பெரியோர் நடக்க நேரிடும். புண்ணியத் தலங்களில் வாழ்பவர்கள் ஆண்டவனுக்கு அஞ்சி வாழாமல், ஆண்டவன் பெயரால் மோசடி செய்து வஞ்சித்து வாழ்வார்கள்.'
இதையெல்லாம் கேட்ட அச்சம்மா மிகுந்த வியப்படைந்தாள். அவரையே தன் குருவாக ஏற்றாள் அச்சம்மா. தனக்கு உபதேசம் வழங்குமாறு வேண்டினாள்.
வீரபிரம்மேந்திரர் அவளுக்குச் சிவ மந்திரத்தை உபதேசித்து, அதை ஓயாமல் ஜெபித்து வருமாறு பணித்தார். பொருள்மேல் உள்ள ஆசையை விட்டுவிட்டு ஆன்மிகப் பணிகளில் நாட்டம்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அச்சம்மாவின் மனம் வீரபிரம்மேந்திரரின் உபதேசங்களால் ஞானம் அடைந்தது. மெல்ல மெல்லப் பற்றுகள் அவளைவிட்டு விலகத்தொடங்கின. இல்லறத்தைத் துறந்து துறவியானாள் அவள். தன் சொத்தையெல்லாம் செலவிட்டு ஏகாந்த மடம் என்றொரு மடம் நிறுவினாள். அதில் வாழ்ந்தபடி வீரபிரம்மேந்திரரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவரலானாள்.
அச்சம்மாவின் வாழ்க்கை இனி அவ்விதமே தொடரும் என அறிவித்த வீரபிரம்மேந்திரர், அவளிடம் விடைபெற்று மீண்டும் பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்லலானார்.
போலேரம்மா என்ற புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆந்திரத்தில் உண்டு. அந்தக் கோவிலுக்குச் சென்றார் அவர். அங்கு சிலர் போலேரம்மா தொடர்பான புனித யாத்திரைக்கு அவரிடம் நன்கொடை கேட்டனர். நன்கொடை தருவது கட்டாயமென்று அவரை அச்சுறுத்தினர். இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுபவரா பிரம்மேந்திரர்? அவர் நகைத்துக் கொண்டார். "இப்போது
என்னிடம் பணம் எதுவுமில்லையே, பிறகு கிடைத்தால் தருகிறேன்' என்றார்.
பின் தன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டார் அவர்களிடம்.
அவர்கள் நன்கொடை தராத அவருக்கு நெருப்புத் தர மறுத்தனர். அவர் போலேரம்மா கோவிலுக்கு வெளியே வந்துநின்றார். உள்ளேசந்நிதியை உற்றுப்பார்த் தார். "போலேரம்மா,
என் சுருட்டுக்குக் கொஞ்சம் நெருப்பு கொடு' என்று கேட்டார். மறுநிமிடம் போலேரம்மா சந்நிதியிலிருந்து ஒரு தணல் காற்று வெளியில் புறப்பட்டு வந்தது! அவரது சுருட்டைக் கொளுத்தியது! "சரி
சரி நெருப்பு போதும்' என்று அவர் சொன்னதும் மீண்டும் கருவறைக்கே சென்று மறைந் தது அந்தத் தணல்!
இந்த அதிசயத்தைப் பார்த்தவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். அவரது காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள்.
அவர்கள் அனைவருமே அவரின் அடிய வர்களானார்கள். இப்படி மெல்ல மெல்ல வீரபிரம்மேந்திரரின் அடியவர் எண்ணிக்கை நாள்தோறும் பெருகத்தொடங்கியது.
காலப்போக்கில் அவர் தமது பொற் கொல்லர் மரபில் தோன்றிய கோவிந்தம்மா என்ற பெண்ணை மணந்தார்.
இல்லறம், துறவறம் இரண்டும் சம மதிப்புடையவைதான் என்று அவர் அடிக்கடிச் சொல்வது வழக்கம். தம் இல்லற வாழ்வில் ஐந்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். தம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஆன்மிகவாதிகளாக மாற்றினார். அனைவருடனும் இணைந்து ஆன்மிகப் பணியாற்றி வந்தார்.
தாம் ஜீவசமாதி அடைய எண்ணி குடும் பத்தாரிடம் அறிவித்தார் வீரபிரம்மேந்திரர். குடும்பத்தார் கண்கலங்கினர். "யாக்கை
நிலையற்றது; இதன் மேல் பற்று வைக்காதீர் கள்' என்று போதித்தார். பின் சமாதிக்குழியில் இறங்கி நிஷ்டையில் அமர்ந்தார். "எனக்கு
இறப்பில்லை என்பதால், என் மனைவி தன் சுமங்கலிலிக் கோலத்தை மாற்றத் தேவையில்லை' என்று அறிவித்தார். சமாதியின் மேலே பலகைபோட்டு சமாதி மூடப்பட்டது.
பத்து மாதங்கள் சுழன்றோடின. "இன்னுமா
அவர் உயிரோடிருப்பார்? அவர் மனைவிக்கேன் சுமங்கலிலிக் கோலம்?' என்று சிலர் விமர்சித்தனர். இத்தகைய விமர்சனங்கள் அந்தக் காலத்தில் எழுவது சகஜம்தானே?
மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். "மக்களுக்கு அறிவில்லை. அவர் களின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிலிக் கோலத்தில் இருந்துவருகிறேன்' என்றார் தாயார்.
மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். "மக்களுக்கு அறிவில்லை. அவர் களின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிலிக் கோலத்தில் இருந்துவருகிறேன்' என்றார் தாயார்.
மகனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை.
அவன் ஆக்ரோஷத்தோடு ஒரு கடப்பாரையை எடுத்துவந்து சமாதியை இடித்துத்திறந்துபார்த்தான். என்ன ஆச்சரியம்! அங்கே சலனமே இல்லாமல் யோக நிஷ்டையில் கம்பீரமாக வீற்றிருந்தார் வீரபிரம்மேந்திரர். சமாதியை இடித்த மூத்த மகனின் கைகள் நடுக்கத்தில் வெலவெலத்தன.
அவனை கண்திறந்து பார்த்த வீரபிரம்மேந்திரர், சமாதியைத் திறந்த தோஷம் விலகப் பரிகாரம் செய்யச் சொல்லிலி, மீண்டும் சமாதியை மூடச் சொன்னார்.
இந்த அதிசயத்தைப் பார்த்த ஊர்க்காரர்கள் வீரபிரம்மேந்திரரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டனர். மனைவி யையும் பக்தியோடு கும்பிடத் தொடங்கினார்கள்.
ஆந்திராவில் கடப்பை ரயில் நிலையத்திலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி. இன்றும் தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு அவர் சூட்சும உருவில் அருள்புரிந்து வருகிறார். நாள்தோறும் அந்த இடத்திற்குச் செல்வோர் எண்ணிக்கை பெருகிவருகிறது
பிரகதீஸ்வரர்
01ஆணுக்குப்
பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகிறது.
02 ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.
03 அரசே
பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.
04 விதவை
மறுமணம் செய்து கொள்வாள்.
05 பெண்களின்
தூய்மை, நாகரிகம் என்னும் மாயவசத்தால் அழிந்துபடும்.
06
மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.
மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.
07 கணவனை
நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.
08பெற்ற
மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்.
09அழகுடைய
மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்.
10திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.
11உயர்குலப்
பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி, நிழற்படம் என்ற மோகத்தில் கெட்டழிவர்.
12தெய்வ
நம்பிக்கை தளர்வடையும்.
தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.
தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.
13
குலத்தொழில்கள் மாறுபடும்.
ஆலயங்களில் கள்ளத்தனம் நிறையும்.
ஆலயங்களில் பிராமணர்களுக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட குலத்தோர் அர்ச்சகர்களாக மாறுவர்.
குலத்தொழில்கள் மாறுபடும்.
ஆலயங்களில் கள்ளத்தனம் நிறையும்.
ஆலயங்களில் பிராமணர்களுக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட குலத்தோர் அர்ச்சகர்களாக மாறுவர்.
14சைவர்கள்
வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.
15சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.
வேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.)
வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.
வேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.)
வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.
16திருப்பதி
ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.
17
அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.
அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.
18முஸ்லீம்களின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.
19புதுவித
அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.
20மனிதன்
பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.
நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.
21குதிரை,
மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.
22இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.
23இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.
24உண்மகள்
பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.
25நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.
26பொருளாசை
மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.
மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.
மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.
27
ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.
28சாந்தம்
குறையும்; கோபம் அதிகரிக்கும்.
கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.
கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.
29போதைப்
பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.
30உணவுப்
பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.
கண்பார்வை மிகையாக கெடும்.
கண்பார்வை மிகையாக கெடும்.
31எண்ணற்ற
ரோகங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.
32மக்களின்
சராசரி வயது குறையும்.
செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.
செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.
33முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.
34மூன்று
தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.
35நமது
பாரத தேசம் இரண்டாகப் பிளக்கப்படும்; பிறகு அது மூன்று பாகங்களாகும்.(இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்)
வங்காள தேசம் என்னும் பிரிவு, பல உயிரிழப்பிற்கும், புயலுக்கும், பெருவெள்ளத்திற்கும் ஆளாகும். மக்களின் சேதம் மிகையாகும்.
36பாரத
தேசத்தில் மக்களின் ஜனத்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடும். அப்போது ஜனத்தொகையைக் குறைக்க அரசு செயல்படும்.
37இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.
38இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.
39இயற்கை
வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.
40நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.