நர்மதா நதியும் நரேந்திர மோடியும் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:57 PM | Best Blogger Tips

வடமேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகள் வறட்சியில் திண்டாடின. பல லட்சம் ஹெக்டேர் விவசாய பூமி போதிய நீர்இல்லாமல் வறட்சியில் இருந்தது. அங்கிருந்த விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்தனர். இந்நிலையில் இதற்கு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கருதி குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி அவர்கள், சர்தார் சரோவர் அனையில் இருந்து தொடங்கி, குஜரத்தில் 460 கிலோமீட்டர் நீளமும்ள்ள, அதன் பின் ராஜஸ்தானில் மேலும் ஒரு 74 கிலோமீட்டருக்கும், ஒரு கால்வாயை உருவாக்கி விவசாய பகுதிகளுக்கு பாசனம் செய்ய திட்டமிட்டார்.
விட்டுவிடுவார்களா தேச துரோகிகள் ? எதிர்ப்பு என்றால் அத்தனை எதிர்ப்பு !! சமூக போராளி என்கிற பெயரில் 'மேதா பட்கர்' போன்றவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இவருக்கு ஆதரவாக புரட்சி எழுத்தாளர்கள் எனும் பெயரில் 'அருந்ததி ராய்' போன்றவர்கள் மோடியை வாய்க்கு வந்தபடி எல்லாம் சாடினார்கள். காடுகள் அழிகின்றன, சுற்று சூழல் நாசமாகிறது என்றார்கள். இந்த ஆர்பாட்டங்களை ஆவனப்படமாக எடுத்து மேற்கத்திய ஊடகங்கள் பெரும் பரப்புரையை செய்தது. அணுகுண்டை விட இந்த திட்டம் மிக ஆபத்தானது என்று பேசினார்கள். தேச துரோக கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் இதை முழு சக்தியோடு எதிர்த்தார்கள். ஆனால் "செயலின் செல்வன்" ஆகிய மோடி தன் திட்டங்களில் இருந்து துளியும் பின்வாங்கவில்லை.
விளைவு !! 1,477 சதுர கிலோமிட்டர்கள் பாசன வசதியை பெற்றது. 236 கிராமங்கள் பயன் பெற்றது. 6,10,000 ஏக்கர் விவசாய நிலம் பஞ்சத்தில் இருந்து பசுமைக்கு மாறியது. 1336 கிராமங்களில் குடி தண்ணீர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டது. இதற்கு மகுடம் சேர்க்கும் வகையில் உலகின் முதல் முன்னோடி திட்டமாக, "கால்வாய் மீது சோலார் தகடுகளை பொறுத்தி", நீர் ஆவியாவதை தடுத்து, மின்சார ஆற்றலையும் ஏற்படுத்தினார் மோடி !! இந்த திட்டத்தால் குஜராத் மட்டும் இல்லாமல் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசமும் பயனடைந்தது.
ஒரு நல்ல தலைவன் நாடாண்டால் எதுவும் சாத்தியமே !! மாநிலத்தை ஆளுகின்ற தலைவர்கள் இனைந்து, தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, எத்தனையோ சாதிக்க இயலும். கர்நாடகத்தில் ஓடும் நதிகளை இனைத்து அதை காவேரியோடு இனைத்து பல திட்டங்களை உருவாக்க இயலும். தமிழகத்தில் மழைகாலத்தில் கடலில் கலந்து வீணக்கும் பல நூறு 'டி எம் சி' நீரை பல தடுப்பனைகளை ஏற்படுத்தி, குளங்களை தூர்வாரி, ஆறுகளில் மனல் அள்ளுவதை தடுத்து, நிலத்தடி நீரை உயர்த்த இயலும். கடலோர பகுதிகளில் "கடல் நீரை குடிநீராக்கும்" திட்டத்தை அமல்படுத்தி, குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க இயலும். ஆனால் இவை எதையுமே செய்ய முனைப்பு காட்டாத தமிழக மற்றும் கர்நாடக அரசுகள், ஓட்டு வங்கி அரசியலுக்கு மட்டுமே தண்ணீர் பிரச்னையை பயன்படுத்துகின்றன.
தமிழகம் கர்நாடகத்தில் உள்ள துக்கடா கட்சிகளோ இதை வைத்து மக்களின் உணர்வுகளை தூண்டி எப்படி தங்களை உயர்த்தி கொள்ள இயலும் என்பதை மட்டுமே சிந்திக்கின்றன.
மாநிலம் தோறும் நரேந்திர மோடியின் ஆட்சியை நிலைநிறுத்தினால் மட்டுமே காவேரி போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை நாம் எட்ட இயலும். அதுவரை அடுக்கு மொழி வசனங்கள், ரயில் மறியல், போராட்டம், கொடும்பாவி எரிப்பு என்று குப்பையைதான் மாற்றி மாற்றி நாம் கிளற இயலும்.
நன்றி- மாஸ்டர் Prakash P