மோடி என்ற முத்தின் வாழ்க்கை வரலாறு 1

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips

இந்தியில்மோடிஎன்றால்முத்துஎன்று அர்த்தம். ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். நரேந்திர மோடியின் பின்னாலும் இதுபோன்ற ஒரு மிகப்பெரிய சரித்திரம் அடங்கி உள்ளது. குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், 1950
செப்டம்பர் 17 இல் தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடி - ஹீராபென் தம்பதியின் 6
குழந்தைகளில் 3ஆவது குழந்தையாக பிறந்தவர்
நரேந்திர தாமோதர்தாஸ் மோடி.
ஆரம்ப வாழ்க்கை :
மோடியின் ஆரம்ப வாழ்க்கை என்பது மிக, மிக கஷ்ட ஜீவனம் என்றால், அது மிகையாகாது. வத்நகர் ரயில்வே ஸ்டேஷனில் தந்தை மூல்சந்த் நடத்தி வந்த டீக்கடையில் நரேந்திர மோடி வேலை பார்த்தார். அந்த ஒரு கடையில் இருந்து வரும் வருமானம் போதாத நிலையில், மோடியும் அவருடைய சகோதரர்கள் சற்று வளர்ந்துவிட்ட நிலையில், வத்நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே மற்றொரு டீக்கடையை திறந்தனர். இந்த கடையின் பொறுப்பு மோடியின் மூத்த சகோதரரு டையது.
கடைகளுக்கு டீ சப்ளை செய்வது, டம்ளர்களை கழுவி வைப்பது மோடியின் வேலை. வத்நகரில் உள்ள பள்ளியிலேயே அவர் படித்தார்.
18 வயதில் திருமணம் :
மோடி சார்ந்த கான்சி பிரிவில் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இதன்பேரில், மோடிக்கும் 13 வயதிலேயே, ஜசோதா பென்னுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. 18 வயதில் அவருக்கு ஜசோதா பென்னுடன் திருமணம் நடந்தது. இளம் வயது திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தார் மோடி. அவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசாரகராக வேண்டும் என்று ஆசை. அதனால், மனைவியை விட்டு பிரிந்து, ஆர்எஸ்எஸ்.சில் இணைந்தார். அன்றிலிருந்து பிரம்மச்சரியம் தான். 2
ஆண்டுகள் இமயமலைப் பகுதிக்கு சென்று கழித்தார். பின்னர் மீண்டும் வத்நகருக்கு திரும்பி, அண்ணனின் டீக்கடையில் பணியாற்றினார்.
குஜராத் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் உணவகத்தில் அவருக்கு வேலை கிடைத்த நிலையில், அங்கு சில காலம் வேலை செய்தார்.
திறமை தந்த வாய்ப்பு :
கடந்த 1970 இல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழு நேர பிரசாரகராக இணைந்தார். ஜனசங்கத்தின் மூத்த தலைவர்களான வசந்த் கஜேந்திரகட்கர், நாதாலால் ஜக்தா ஆகியோருடன் இணைந்து பணியாற்றி அரசியலை கற்க ஆரம்பித்தார். இவர்கள்தான் பின்னாளில், குஜராத் மாநில பாஜவை ஆரம்பித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் சிறந்த பேச்சாற்றல், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை பார்த்து, நாக்பூரில் அவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் சங்பரிவாரில் அதிகாரப்பூர்வ பதவி பெறுவதற்கு உதவியாக இருந்தது. அதாவது மாணவர் அமைப்பின் (ஏபிவிபி) தலைவராக அவர் உயர்ந்தார்.
நாட்டின் அவசர நிலைக்காலத்தில், துணிச்சலாக போராட்டங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வளவு வேலைகளுக்கு இடையிலும், அவர் டெல்லி பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி மூலம், அரசியல் அறிவியலில் இளங்கலை படிப்பை முடித்தார். இதே படிப்பில், குஜராத் பல்கலைக்கழகத்தில் அவர்
முதுகலை படிப்பையும் முடித்தார்.
பாரத தாயின் தவபுதல்வர் மோடியின் வாழ்க்கை வரலாறுத் தொடரும்...

 நன்றி இணையம்