*வீட்டில் காமாட்சி ஏற்றும்போது டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்றினால் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
*நமது வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
*மாலை வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகளை தானம் செய்யக்கூடாது அப்படி தானம் செய்தால் செல்வம் தங்காது.
*அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெர்றால் நமக்கு குறைவில்ல செல்வம் சேரும்.
*வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்குவது மிகப்பெரிய புண்ணியமாகும்.
*பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடமும்,60-ம் கல்யாணம் செய்தவர்களிடமும்,நம் தாய் தந்தையரிடமும் ஆசி பெற்றால் நமக்கு தீர்க்காயுள் ஏற்படும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.