சில நேரத்துல ஏன் அம்மா எதுக்கெடுத்தாலும் பயந்து பயந்து இப்டி கவல பட்டுக்குறாங்கன்னு தோணும். அதுக்கெல்லாம் அனுபவமிக்க அப்பா அழகா ஒரு பதில் வெச்சிருப்பாரு.
“அவ வீட்ட விட்டு வெளில எங்கயும் போகாம இருக்கால்ல அதான் டா”ன்னு.
அம்மாக்கு கோயில் தெரியும், மார்கெட் தெரியும், தன் புருஷன் தெரியும், என்னைத் தெரியும்.
இவ்ளோதான் அவங்க.
இவ்ளோதான் அவங்க.
அப்பா Typically அப்பா. ஹி காட் வி.ஆர்.எஸ். அப்புறம் அந்த பணத்துல சென்னைல ஒரு வீடு வாங்கிக்கிட்டு “நாங்களும் உன் கூடவே வந்தடறோம்ப்பா”ன்னு இங்க வந்துட்டாங்க. நான் final year ஸ்டூடென்ட். சில பேர் படிப்புல அந்த அளவு இஷ்டம் இல்லனாக்கூட அம்மா அப்பாக்காக நல்லா படிச்சு நல்ல Rank வாங்குவாங்க இல்லையா? நான் அந்த Type.
Placements நடந்துட்டிருந்த சமயம். அம்மா வழக்கத்த விட நெறைய விரதம் இருக்க ஆரம்பிச்சாங்க. எனக்கு சாமி மேல அவ்ளோ இஷ்டம் கெடயாது. அப்பா மாதிரியே. ஆனா அம்மாவோட நம்பிக்கைய மோசம் பண்ணமாட்டோம்.
உண்மையா ஒத்துக்கணும்ன்னா ஒரு தனிப்பட்ட மனுஷனோட தீர்க்கமான நம்பிக்கைய சிதைக்கிற அளவு எனக்கு ஷக்தி இருந்தாலும் அதுக்கு மாற்று நம்பிக்கை குடுக்க முடிஞ்சா மட்டும் தான் நான் அத செய்வேன். இல்லன்னா விட்டிருவேன். தேவ இல்லாம அந்த நம்பிக்கை மேல விளையாட மாட்டேன்.
பேச்சு திறமைய வெச்சோ அறிவ வெச்சோ ரொம்ப Scientifical-ஆ Practical-ஆ பேசி அம்மாவ என்னால மாத்திட முடியும்.ஆனா அவங்களுக்கு வேற நம்பிக்கைய என்னால தர முடியாது.
நான் அண்ணா யுனிவர்சிட்டில படிச்சேன். ரொம்ப பெரிய கம்பனீஸ் பிளேஸ்மென்ட்ஸ்க்கு வருவாங்க. அம்மாக்கு என் ஸ்கூல் கதை காலேஜ் கதை கேக்க அவ்ளோ பிடிக்கும். நானும் ஒரு ஃப்ரென்ட் மாதிரி எல்லாத்தையும் அம்மாக்கிட்ட சொல்லுவேன்.
ஐக்ரியேட்டிவ் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்(iCreative Software Solutionஸ்) ரெக்ரூட் பண்ண வராங்கன்னு நோட்டீஸ் போர்டுல போட்டிருந்துச்சு. ஆனா என்னோட ஃபேவரைட் கம்பெனி ஒன்னு இருந்துச்சு அதும் போட்டிருந்தாங்க. சோ.. நான் அம்மாக்கிட்ட சொன்னேன் “ம்மா. இந்த கம்பெனி நான் அட்டென்ட் பண்ணலம்மா. எனக்கு இத விட அடுத்து வரப் போற கம்பெனில தான் ம்மா இண்ட்ரெஸ்ட்ன்னு.”
அம்மா சொன்னாங்க “நீ இதும் அட்டென்ட் பண்ணு. அதும் அட்டென்ட் பண்ணு”ன்னு.
“இல்லம்மா. இந்த கம்பெனில நான் பிளேஸ் ஆயிட்டா எனக்கு அடுத்த ஆப்பர்ச்சூனிட்டி கெடைக்காது. உனக்கு புரியலம்மா. நான் கண்டிப்பா என் ஃபேவரைட் கம்பனில வேலைக்கு போவேன்ம்மா”
“ஆமா ப்பா. எனக்கு புரில.உனக்கு என்ன தோனுதோ செய்ப்பா. flaskல பால் வெச்சுருக்கேன். குடிச்சிட்டு படி”
அம்மா கோச்சுக்கிட்டாங்களோன்னு இருந்துச்சு.
சோ. நான் ஐக்ரியேட்டிவ் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் அட்டென்ட் பண்ணலாம்ன்னு முடிவு செஞ்சேன். லாஸ்ட் ரவுண்டு வரைக்கும் போய்ட்டா கூட வேணாம்ன்னு சொல்லிட்டு வந்துரலாம். நெக்ஸ்ட் கம்பெனில பாத்துக்கலாம்ன்னு இருந்துச்சு.

நான் டே ஸ்காலர்.
கொஞ்ச நாள் Friends கூட ஹாஸ்டல்ல தங்கினேன். அம்மாக்கும் நான் க்ளியர் பண்ணினா போதும்ன்னு இருந்துச்சு. அப்பா ஒரு நாள் கேண்டீன் வரைக்கும் வந்து ஃப்ரூட்ஸ்லாம் தந்து பாத்துட்டு போனார்.
iCSS வந்தாங்க.
iCSS வந்தாங்க.
Aptitude க்ளியர் ஆச்சு. 2nd ரவுண்டு க்ளியர் ஆச்சு. அம்மாக்கு ஃபோன் பண்ணினேன். ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.
எங்கம்மா இருக்கீங்கன்னு கேட்டேன். அப்பாவும் நானும் திருவான்மியூர் மருந்தீஷ்வர் கோயிலுக்கு வந்திருக்கோம்ன்னு சொன்னாங்க.
நான் பேசிட்டு வெச்சிட்டேன்.
நான் பேசிட்டு வெச்சிட்டேன்.
அடுத்த நாள் டெக் அண்ட் ஹெச்.ஆர். டெக்லயே வெளில வந்திரணும். ஹெச்.ஆர் போச்சுன்னா டெப்பனைட்டா ஆப்பர் கன்பார்ம் ஆயிடும்.
நெனச்ச மாதிரி டெக்ல சரியா பண்ணாம வெளில வந்துட்டேன். அம்மாவ எப்படியாவது கன்வின்ஸ் பண்ணணும். ஹாஸ்டல்ல தங்கி இருந்த நாளெல்லாம் நான் என் ஃபேவரைட் கம்பனிக்காக தான் ப்ரிப்பேர் பண்ணிருந்தேன்.
நெனச்ச மாதிரி டெக்ல சரியா பண்ணாம வெளில வந்துட்டேன். அம்மாவ எப்படியாவது கன்வின்ஸ் பண்ணணும். ஹாஸ்டல்ல தங்கி இருந்த நாளெல்லாம் நான் என் ஃபேவரைட் கம்பனிக்காக தான் ப்ரிப்பேர் பண்ணிருந்தேன்.
அம்மாக்கிட்ட iCSS கெடச்சிடும்ன்னு தைரியம் சொன்னேன். இன் ஃபேக்ட் பொய் சொன்னேன். வீட்டுக்கு வர சொன்னாங்க. எனக்கும் அம்மாவ பாத்தா நல்லாருக்கும் போல இருந்துச்சு. ஏதோ ஒன்னு உறுத்துனிச்சு. சரின்னு கெளம்பிட்டேன்.
திருவான்மியூர்.
ஏதோ சென்டிமென்ட் இந்த ஏரியா மேல. ஆர்.டி.ஓ சிக்னல் லெப்ட் எடுத்து திரும்பறப்போவே பீச் காத்து கைய பிடிச்சு கூட்டிட்டு போதும்.
ஏதோ சென்டிமென்ட் இந்த ஏரியா மேல. ஆர்.டி.ஓ சிக்னல் லெப்ட் எடுத்து திரும்பறப்போவே பீச் காத்து கைய பிடிச்சு கூட்டிட்டு போதும்.
வீடு.
காலிங் பெல் அடிச்சேன். வழக்கமா நான் அப்பா எங்கயாச்சும் வெளில போயிட்டு வந்தா அம்மா தான் வந்து கதவ திறப்பாங்க. சிரிச்ச முகமா, கதவு திறந்தோன கையில உள்ள பேக்லாம் வாங்கிக்கிட்டு, இம்மிடியேட்டா சாப்புட எதாவது ரெடி பண்ணுவாங்க. அன்னைக்கு வீடு தாழ் போடாம இருந்துச்சு. அப்பா கூட வந்து டோர் ஒப்பென் பண்ணல.

வாப்பான்னு வாய்ஸ் மட்டும் தான் கேட்டுச்சு.
உள்ள போனேன். அப்பா அம்மாக்கு கால் அமுக்கிவிட்டுட்டிருந்தார்.
உள்ள போனேன். அப்பா அம்மாக்கு கால் அமுக்கிவிட்டுட்டிருந்தார்.
போய் அம்மா பக்கத்துல உக்காந்தேன். என்னம்மா ஆச்சு.
“ஒன்னும் இல்ல கண்ணா”
அப்பா ஏதோ சொல்ல வந்தாரு.
அம்மா, அப்பா கைய அழுத்தி பிடிச்சாங்க.
அம்மா, அப்பா கைய அழுத்தி பிடிச்சாங்க.
“ம்மா சொல்ல போறியா இல்லையா ம்மா”
“ப்பா எதும் சஸ்பென்ஸ் வெக்காதிங்க. எனக்கே ஒரு மாதிரி இருக்குன்னு தான் வந்தேன். ப்ளீஸ் ப்பா”
“ப்பா எதும் சஸ்பென்ஸ் வெக்காதிங்க. எனக்கே ஒரு மாதிரி இருக்குன்னு தான் வந்தேன். ப்ளீஸ் ப்பா”
“அம்மா உனக்கு வேலை கெடைக்கனும்ன்னு நேத்து மருந்தீஷ்வர் கோயில முட்டிக்கால் போட்டு நடந்து வந்திருக்கா. வலியா இருக்காம். அதான் வாலினி போட்டு தேச்சுவிட்டுருக்கேன். சரி ஆயிடும் டா”
“ம்மா ஏம்மா நீ இப்புடி இருக்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். ஏன் நீ உன்ன இப்படி வருத்திக்கிற?”
பேச்ச மாத்தினாங்க.
பேச்ச மாத்தினாங்க.
“சரி சொல்லு எப்படி போச்சு உனக்கு. ஈசியா feel பண்ணினயா.”
“எனக்கு ரொம்ப டையர்ட்டா இருக்கு. நீ ரெஸ்ட் எடும்மா. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்”
“ஏங்க அவனுக்கு கொஞ்சம் சாப்பாடு மட்டும் போட்டு கொண்டு போய் குடுங்களேன். இல்லன்னா ஒழுங்கா சாப்புடமாட்டான்”
“சரிம்மா. நீ சாஞ்சி படுத்துக்கோ. நான் பாத்துக்கறேன்.” – இது அப்பா.

நான் என் ரூம்குள்ள போனா எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது. ட்ரெஸ் மாத்திட்டு பாத்ரூம்ல போய் கதறி கதறி அழுதேன். கிளியர் பண்ணி தொலைச்சிருக்கலாமோன்னு தோனுச்சு. ஏன் அம்மா இப்புடி இருக்காங்க. இது இல்லன்னா வேற கம்பனியே இல்லையா. கடவுள் வருத்திக்கிட்டா தான் கருணை காட்டுவானா... இது மாதிரி பழக்கமெல்லாம் அம்மாக்கு எப்புடி வந்துச்சு... அப்போ என் மேல நம்பிக்கை இல்லையான்னு என்னென்னவோ தோனுச்சு.
அப்பா கதவ தட்டினாரு.
போய் சாப்டுட்டு வந்து தூங்கிட்டேன்.
போய் சாப்டுட்டு வந்து தூங்கிட்டேன்.
தூங்கி எழுந்து ஃபோன் எடுத்து பாத்தா ஃப்ரெண்ட் மெசேஜ் அனுப்பிருந்தான். நான் எய்ம் பண்ணின கம்பனி வரல. ரிசெஷன்-னால பிளேஸ்மென்ட் ஆபீஸ்ல நெறைய கம்பனீஸ் வித்ட்ரா(Withdraw) வாங்கிட்டாங்கன்னு அனுப்பிருந்தான்.
அவன் தான் பிளேஸ்மென்ட் ரெப்ரசென்டேட்டிவ்.
எனக்கு செருப்ப கழட்டி என்னையே அடிச்சுக்கலாம்ன்னு இருந்துச்சு.
எனக்கு செருப்ப கழட்டி என்னையே அடிச்சுக்கலாம்ன்னு இருந்துச்சு.
போய் அம்மா அப்பா ரூம பாத்தேன். ரெண்டு பேரும் தூங்கிட்டிருந்தாங்க. எனக்கு எப்புடி நான் க்ளியர் பண்ணலன்னு சொல்றது, சரி அவங்களே அடுத்த கம்பனி நீ எய்ம் பண்ணின கம்பனி தான பாத்துக்கலாம்ன்னு சொன்னா கூட எப்படி அந்த கம்பெனி வரலம்மான்னு சொல்றதுன்னு ஒரே கொழப்பமா இருந்துச்சு.
பக்கு பக்குன்னு அடிச்சிக்குது.
நான் கதவ மெதுவா சாத்துறப்போ லைட்டா சவுண்ட் வந்துடுச்சு. அம்மா எழுந்துக்கிட்டாங்க.
நான் கதவ மெதுவா சாத்துறப்போ லைட்டா சவுண்ட் வந்துடுச்சு. அம்மா எழுந்துக்கிட்டாங்க.
“என்னப்பா. ரிசல்ட் சொல்லிட்டாங்களா?”
“இல்லம்மா. நாளைக்கு தான் சொல்லுவாங்க”
“டீ எதா போட்டுத் தரவா?”
“நீ தூங்கு மா. நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன்”
“ஹ்ம்ம்ம்”
“இல்லம்மா. நாளைக்கு தான் சொல்லுவாங்க”
“டீ எதா போட்டுத் தரவா?”
“நீ தூங்கு மா. நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன்”
“ஹ்ம்ம்ம்”
நான் வெளில வந்து உக்காந்துட்டிருந்தேன்.
என் அப்பார்ட்மென்ட்லயே தான் என் ஸ்கூல் ஃப்ரெண்ட் ப்ரீத்தியும் இருக்கா.
என்ன நேரமோ அது கரெக்டா அவ வந்தா.
என் அப்பார்ட்மென்ட்லயே தான் என் ஸ்கூல் ஃப்ரெண்ட் ப்ரீத்தியும் இருக்கா.
என்ன நேரமோ அது கரெக்டா அவ வந்தா.
“ஹாய் டா”
“ஹாய் ப்ரீத்தி”
“என்னாச்சு. வழக்கமா வெளிலயே பாக்க முடியாது உன்ன. இங்க வந்து உக்காந்துட்டிருக்க? எனி ப்ராப்ளம்?”
“ஹாய் ப்ரீத்தி”
“என்னாச்சு. வழக்கமா வெளிலயே பாக்க முடியாது உன்ன. இங்க வந்து உக்காந்துட்டிருக்க? எனி ப்ராப்ளம்?”
எல்லாக் கதையும் அவக்கிட்ட சொல்லி முடிச்சேன்.
அவ ஒன்னு சொன்னா. “நீ யூஷுவலா ஒன்னு சொல்லுவியே நான் யாரு நம்பிக்கையையும் கெடுக்க மாட்டேன். அப்டி இப்டின்னு. அவங்க இந்த மாதிரி வருத்திக்கிட்டது எல்லாம் நீ இந்த கம்பனிக்குத்தான் வேலைக்கு போகனும்கறதுக்காக இல்ல. நல்ல வேலைக்கு போகனும்கறதுக்காகதான். எல்லா கம்பனியும் ஒன்னும் வித்டிரா பண்ணிடலையே. இருக்க கம்பனீஸ்ல எது பெஸ்ட்டுன்னு பாத்து பிளேஸ் ஆகு முதல்ல. அம்மா அப்பா புரிஞ்சிக்காதவங்க இல்ல. வேல கெடச்ச பின்னாடி இதான்ம்மா என் ட்ரீம்ன்னு சொல்லி ஏதாவது பேசி அவங்களுக்கு புரிய வெச்சிடு. ஒரு நம்பிக்கைக்கு இன்னொரு நம்பிக்கை. சிம்பிள்”

அவ பேசுனது கரெக்டான்னுலாம் தெரியாது. இல்ல எப்பயும் போல எதாச்சு சொல்லணும்ன்னு சொல்றாளான்னும் தெரியல. ஆனா கொஞ்சம் வெளி ஆள்கிட்ட பேசினது கொஞ்சம் ஒகேவா இருந்துச்சு.
காலேஜ் கெளம்பி போனேன். "Gold Man Sachs" ன்னு ஒரு கம்பெனி 6 days கழிச்சு வராங்கன்னு போட்டிருந்துச்சு. ரெடி ஆயிட்டேன்.
பிளேஸ்மென்ட் ஆபீஸ் எலெக்ஷன் ரிசல்ட்ஸ்க்காக லீவ்ன்னு இன்னொரு பொய் சொன்னேன்.அம்மா அதையும் நம்பினாங்க. அப்பாக்கு நல்லா தெரிஞ்சிருக்கும் நான் பொய் தான் பேசறேன்னு. அவரு காட்டிக்கல. பொதுவா தேவ இல்லாத டிடெக்டிவ் வேலையெல்லாம் செய்ய மாட்டாரு அப்பா.
கம்பெனி கிளியர் ஆச்சு. ஆறுதலா இருந்துச்சு எனக்கே.
அம்மா அப்பாக்கூட மருந்தீஷ்வர் கோயிலுக்கு போயிருந்தேன்.
அம்மா அப்பாக்கூட மருந்தீஷ்வர் கோயிலுக்கு போயிருந்தேன்.
ரம்மியமா இருந்துச்சு. அம்மாக்கும் இப்ப கொஞ்சம் கால் பரவால்ல.
திடிர்னு ஒரு குரல்.
திடிர்னு ஒரு குரல்.
“என்ன சார். என்கிட்ட கிளியர் ஆகாததெல்லாம் சொல்லுவிங்க. கிளியர் ஆனத ஒரு வரி எஸ்.எம்.எஸ் கூட அனுப்ப முடியாதா உங்களால?”
ப்ரீத்தி.
ப்ரீத்தி.
அம்மா சிரிச்சாங்க. “இந்தாம்மா பிரசாதம் எடுத்துக்கோ. நான் வருத்தப்படுவேன்னு சொல்லலம்மா அவன். மத்தபடி அவன் சொல்லி தான் தெரியனுமா என்ன? புள்ளைங்க அசைவ வெச்சே நமக்கு புரிஞ்சிடாதா?”
முழி பிதுங்கிருச்சு எனக்கு.
அப்ப எல்லாமே தெரியுமா அம்மாக்குன்னு.
எனக்கென்னவோ அந்த கோயில்ல இருந்த அம்மனும் அம்மாவும் ஒன்னு போலவே தெரிஞ்சிது. ரெண்டு பேருக்கும் நான் சொல்லி தான் தெரிய வேண்டியதில்ல போல.
எனக்கென்னவோ அந்த கோயில்ல இருந்த அம்மனும் அம்மாவும் ஒன்னு போலவே தெரிஞ்சிது. ரெண்டு பேருக்கும் நான் சொல்லி தான் தெரிய வேண்டியதில்ல போல.
லைட்டா கடவுள் நம்பிக்கை வந்துடுச்சு. அம்மா மேல.
அம்மா – எ ஜீனியஸ்.
அம்மா – எ ஜீனியஸ்.
(இது எனது இரண்டாம் புத்தகமான 'விகடகவி'யில் இடம்பெற்றிருக்கும் முதல் கதை)
நன்றி-மனோபாரதி