அன்னதானம் ஏன் செய்ய வேண்டும்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:34 PM | Best Blogger Tips


கர்ணன் பல தர்மம் செய்து வாழ்ந்தான் ,
யுத்த களத்தில் அர்ஜுனன் தொடுத்த அம்பு அவன் உயிரை பறிக்க வில்லை
தர்ம தேவதை தடுத்து நின்றாள்.
இதை புரிந்து கொண்ட கிருஷ்ணர் அவனிடம் முதியவர் கோலம் கொண்டு தர்மம் வேண்டும் என்று பிச்சை கேட்கிறார் .
யுத்த களத்தில் உங்களுக்கு கொடுக்க என்னிடம் எதுவும் இல்லையே என்று வருந்தி புலம்புகிறான் ,
அவர் சொல்கிறார் உண்ணிடம் உள்ள தர்மம்கள் அனைத்தையும் எனக்கு தரலாமே என்று சொல்லி அவனை பார்க்கிறார் ,
கர்ணன் அதை புரிந்து கொண்டு தன் ரத்தத்தில் கலந்து உள்ள மமதை என்னும் கர்வத்தை அவரிடம் தானமாக தர அவர் அவனுக்கு தேவலோக பதவி தருகிறார் ....
இப்படி தேவலோகம் சென்ற கர்ணன் அங்கு இருக்கும் பொழுது பசி எடுக்கிறது .
தேவலோகத்தில் இருக்கும் தேவர்களுகோ ,தேவலோக பதவி அடைந்தவர்களுகோ பசி தாகம் ஏற்படாது என்று நூல்கள் சொல்கிறது ..
பசித்த கர்ணன் அங்கே இருக்கும் தேவர்களில் ஒருவரிடம் உணவு கேட்டு உண்கிறான் ,
மீண்டும் பசி ,தாகம் எடுக்க மீண்டும் அவரிடம் கேட்கிறான் ,
அவர் அவனிடம் பசி எடுக்கும் பொழுது உன்னுடைய ஆள்காட்டி விரலை வாயில் வைத்து சப்பிகொள் என்றார் .
அவர் சொல்லியபடி கர்ணன் வைத்து கொண்டான் பசி நின்று விட்டது .
கர்ணனுக்கு அதிசியமாக இருந்தது எப்படி இது சாத்தியம்,இவனுக்கு குழப்பம் வரவே ,ஒரு தேவரிடம் கர்ணன் தன சந்தேகத்தை கேட்கிறான்
மேலும் அவர்களை அவன் கவனித்த பொழுது யாரும் பசிக்குது என்று சொல்லவில்லை 
..
அவர் சொல்கிறார் கர்ணா நீ பூமியில் பல தர்மம்களை செய்தாய் ,சில தானமும் செய்தாய் ,
என்னை போல யாரும் தர்மம் செய்யவில்லை என்ற மமதையால் உன் மனம் நிரம்பி இருந்தது,
ஒரு நாள் நீ கோட்டைக்கு வெளியே உலாவிய பொழுது ஒரு பெரியவர் பசியால் வருந்திய படி உன் அருகே வந்து இங்கே அண்ணதான கூடம் எங்கே உள்ளது என்று கேட்ட பொழுது 
நீ அவரிடம் அந்த இடத்தின் எல்லையில் உள்ள அண்ணதான சத்திரத்தை உன் ஆள்காட்டி விரலால் காண்பித்து அங்கே உள்ளது என்று 
என்று சுட்டி காண்பித்தால் உன் விரலுக்கு பசியை தீர்க்கும் சக்தி வந்து விட்டது ,நீ அண்ணதானம் செய்யாததால் உனக்கு பசி எடுக்கிறது செய்யும் இடத்தை காண்பித்தால் உன் விரலுக்கு பசியை போக்கும் சக்தி உண்டானது என்றார் .....

 நன்றி இணையம்