புரட்டாசி மாதம் பெருமாளுக்கு என்ன சிறப்பு?…..

மணக்கால் அய்யம்பேட்டை | 2:33 PM | Best Blogger Tips

பெருமாளை வணங்க புரட்டாசி மாதம் சிறப்பு என்றும் முக்கியமாக சனிகிழமை விரதம் இருந்து அவரை தரிசனம் செய்தால் மிகவும் ல்லது என்று நம்பிக்கை இருக்கிறது . சில குடும்பம்களில் அசைவம் தவிர்த்து 3 அல்லது 5 தாவது சனிகிழமை அன்று பெருமாளுக்கு தளிகை என்னும் படையல் போட்டு வழிபாடு செய்வார்கள் இதன் காரணம் என்ன என்று பார்போம் ….
பொதுவாக நம்முடைய சமயம் நமக்கு இயற்கையோடு வாழும் நெறி முறைகளை சொல்லி வாழ்கையில் நாம் நோய்கள் இல்லாமலும் இயற்கைளை அழிக்காமல் அவைகளோடு நாமும் நன்றாக வாழ சில பழக்க வழக்கங்களை நமக்கு சொல்லி உள்ளதுபுரட்டாசி மாதத்தைக் கவனித்திருக்கிறீர்களா?
வெய்யில் குறைந்து, மழை அவ்வப்போது தலைகாட்டி, இரவில் குளிரும், பகலில் உஷ்ணமும், இருக்கின்ற ஒரு மாதம். அதாவது பயிர், பச்சைகளுக்கு நல்ல நீர் கிடைத்து, பூக்கத் துவங்கி வெய்யிலை ஜீரணித்துச் செழித்து வளருகின்றன மாதம். இந்த மாதத்தில் வளர்ச்சி என்ற விஷயத்தை நாம் பயிர்களிடம் பார்க்கலாம் .
உணவுக்காகவும் நல்ல உணவுக்காகவும் மனிதன் பாடு படுகிறான் . உணவு என்பது பசியை மட்டும் நிரப்புவது இல்லை . மனிதனின் குணத்தையும் நிரப்புகிறது . பசி எடுத்தவுடன் உணவுகள் இல்லை என்றால் மனிதனின் நிலை என்ன யோசித்து பார்த்தால் எதையாவது எடுத்து உண்பான் அல்லது பிற உயிர்களை அடித்து கொலை செய்து தின்று விடுவான் . முடிவாக அவன் மனித நிலை மாறி மிருக நிலையுடன் இருப்பன் . இப்படி மனிதன் மாற கூடாது என்று நம் சமயம் பூமியில் உள்ள நீர் ,மண்,காற்று ,நெருப்பு ,ஆகாயம் என்னும் பஞ்ச பூதசக்திகளை நாம் எப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று வரையறுக்க நமக்கு இவைகளை தெய்வமாக பாவித்து அதில் இருந்து உணவுகளை உண்டாக்கும் நெறிகளை அற்புதமாக சொல்லி வைத்தார்கள்
எல்லா நாடுகளிலும் உணவுகளுக்க ஏதோ செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் நாம் மட்டும் தான் உணவு உண்டாக காரணமான விவரங்களை வணங்கி வருகிறோம் . நமது வேதத்தில் .. மாதத்தின் முதல் பகுதியில் பித்ரு வணக்கத்தை ஆரம்பிக்கிறது.
பயிர் பச்சைகள் வளருகின்றன.
விவசாயத்தில் இறங்குகிறேன். எல்லாம் நீ கற்றுக் கொடுத்தது. எல்லாம் உன்னுடைய ஞானம். தகப்பனே உன்னுடைய அனுபவம், இவைகளை வைத்துக் கொண்டு நான் விவசாயம் செய்கிறேன். விவசாயத்திற்கு உதவியாக இருக்கின்ற தொழில்களைச் செய்கிறேன். மனிதர்களுக்கு உதவியாக இருக்கிறேன். என்னுடைய வேலைகள் சிறப்பாக நடைபெற வேண்டும். என் குடும்பம் சந்தோஷமாக வாழவேண்டும். உன்னை நான் மனதார இந்த வேலைநாட்களில் நினைத்துக் கொள்கிறேன். கடும் வேலைகள் காத்திருக்கின்றன. ஒரு நாள் உனக்காக உட்கார்ந்து உன் மனக்கிலேசம் தீர்க்கும் பொருட்டு நீர்வார்க்கிறேன். உன்னுடைய பசியைத் தீர்க்கும் பொருட்டு பிண்டம் உருட்டுகிறேன். நீ சௌக்கியமாக இருக்க வேண்டும். என்று அறவழியில் நின்று பசித்தவருக்கு தானம் தருகிறேன். முன்னோர்களே, என் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள்!” என்று சொல்கிறது.
அதாவது முன்னோர்கள் வழிபாட்டுடன் இந்த மாதம் துவங்குகிறது .
பெருமாளுக்கு இந்த மாதத்தில் என்ன வேலை என்று பார்த்தால் உடலில் இருந்து பிரிந்த உயிர்கள் ஆவி உலகத்தில் அடைக்க படுகிறது ,பிறகு இவர்கள் பாப புண்ணிய பலன் படி இவர்களுக்கு மறு ஜென்ம பிறவி கொடுக்கப்படுகிறது . இப்படி இவர்களுக்கு மறு ஜென்ம பிறவி கொடுக்கப்பட்டதும் அவர்களை பூமிக்கு அழைத்து வந்து கருவறையில் சேர்ப்பது பெருமாளின் வேலை .
இதை போல ஆவி உலகில் உள்ள ஆன்மாக்களுக்கு உணவு வழங்கப்படும் பொழுது காக்கை ரூபம் கொண்டு அவர்கள் வருவது பெருமாளின் ஆசியால் . முன்னோர்கள் வழிபாடு நம் மதத்தில் மட்டும் அல்ல. எல்லா மதத்திலும் இருக்கிறது. முன்னோர்களைக் கொண்டாடாத, மதமே இல்லை. அதனால் தான் மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் அருகே இருப்பதை உணர்ந்து சிரார்த்தம் செய்யபடுகிறது .
சிரார்த்தம் என்றால் சிரத்தையாக இருத்தல் என்று பொருள். சிரத்தையாகச் செய்வதே சிரார்த்தம். “மனம் முழுவதும் தகப்பனையும் இறந்துபோன தாயையும் தாத்தாவையும் பாட்டியையும் நினைத்து உண்ணுங்கள். “ என்று சொல்வது ஒரு சிறந்த வழிபாடு. இப்படி பெருமாளின் துணையால் அவர்கள் பூமிக்கு வருகிறார்கள் .
புரட்டாசி மாதம் பெருமாளை வணங்கி நம் முன்னோர்களை அமைதிப்படுத்தி அவர்களின் ஆசிகளை பெறலாம் . காக்கை ரூபம் கொண்டு அவர்கள் வருவதால் சனிகிழமை வழிபாடு செய்ய படுகிறது , உண்மையில் காக்கை ரூபம் கொண்ட காக்கை சித்தர் ஒரு வைணவ சித்தர் இவர் பெருமளுடன் கலந்தவர் , இவர் ஆன்மாகளின் பிறவி ஜென்ம பாபத்தையும் ,கர்ம சாபத்தையும் அறிய வல்லவர் ,காலத்தை பின் நோக்கி அழைத்து செல்பவரும் இவரே , நம்முடைய முன் ஜென்ம சாபத்தை நமக்கு எடுத்து சொல்பவரும் இவரே . இது சோதிட ரகசியம் …. புரட்டாசியில் பெருமாளின் ஆசிகளையும் அவரருளால் முன்னோர்கள் ஆசிகளையும் பெற்று மகிழ்வோம்.
ஹரி ஓம் நமோ நாரயணா