இராஜ இராஜ சோழனின் கட்டிட கலை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:45 | Best Blogger Tips

இராஜ இராஜ சோழனின் கட்டிட கலையை என்னவென்று சொல்வது? கும்பகோணம்தாராசுரம்கோவிலில் உள்ள இசை படிகள்.....
--------------------------------------------------------
-----------------------
கும்பகோணத்திலிருந்து 2 கிலோ மீட்டர் பயனித்தால் இந்த கலை பொக்கீசம் நம் கண்ணில் படும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.
இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.
2004-ல் ஐராவதேஸ்வரர் கோயில் உலகப்பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் அறிவிக்கப்பட்டது. வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது.
நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள் தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.
நம் முன்னோர்களின் சிற்ப கலையையும் கட்டிட கலையை என்னவென்று சொல்வது. நீங்கள் உலகெங்கிலும் தேடித் திரிந்தாலும் இத்தகை அற்புதங்களை எங்கும் காண முடியாது.
-------------------------------
--------------------------------------------------
இத்தகைய வரலாற்று கலை பொக்கீஸத்தை நாம் எந்த பாட புத்தகத்திலாவது படித்திருக்கிறோமா? நம் பெருமைகள் எங்காவது பறைசாற்றப் பட்டிருக்கின்றனவா? இது யார் செய்த குற்றம்?
நன்றி இணையம்