குருபூர்ணிமாவை சிறப்பிக்கும் சாதுர்மாஷ்யவிரதம்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:13 PM | Best Blogger Tips

இந்துயிசம் என்பது ஒரு மதமல்ல அது வாழ்வியல் முறை அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் கடை பிடித்த வாழ்க்கை முறை.இதை நாம்சொல்லவில்லை.நம் நாட் டின் உயர்ந்த நீதி பரிபாலனமான உச்ச நீதிமன்றம் இந்து யிசம் என்பது ஒரு மதம் அல்ல. அது ஒரு வாழ்வி யல் முறை.என்று கூறியுள்ளது. அதோடு இந்துயிசம் என்பது இயற்கையை அடிப்படை யா கொண்டது. இங்கே மனிதர்களின் நலன் மட்டுமல்ல அனைத்து உயிர்களின் நலனும் இந்துயிசத் தில் குறிப்பிடப்பட்டுள்ளது.என்று கூறியது.
இதை மெய்ப்பிக்கும் எத்தனையோ நிகழ்வுகளில் ஓன்று
தான் குரு பூர்ணிமா.ஆடி மாதத்தில் வரும் பவுர்ண மியில்
தான் வேதங்களை வகுத்து பகவத்கீதையை தொகுத்து 
பிரம்ம சூத்திரத்தை எழுதியவியாச பெருமான் அவதரித்த
தினம்.எனவே அவரே ஞானத்தை அருளிய முதல் குரு
வாக போற்றபட்டு குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
இந்த குரு பூர்ணிமா தினத்தில் தான் சாதுர்மாஸ்ய விரதம்
தொடங்குகிறது.நாமெல்லாம் படிக்காதவர்களை பார்த்து
அவனெல்லாம் மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியது
இல்லை என்று சர்வ சாதரணமாக சொல்வோம்.இந்த
வார்த்தைகள் எதிலிருந்து வந்தது என்று நினைத்தால்
அதற்கு சாதுர்மாஸ்ய விரதம் தான் காரணம்.அந்தக்
காலத்தில் மழைக்குஒதுங்கி இந்த விரதம் இருக்கும் சந்நி யாசிகள் மக்களுக்கு கல்வி புகட்டியுள்ளார்கள்
சன்னியாச வாழ்க்கையில் மூன்று விதம் உள்ளதாம்
குடீசகர்கள் என்கிற சந்நியாசிகள் காடுகளில்ஒரே குடிசை யில்தங்கிதுறவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தா ர்கள்.அடுத்துபஹுதகர்கள் என்கிற துறவிகள், ஆற்றங் கரை அருகில் குடில் அமைத்து வாழ்ந்து கொண்டிருப்பார் கள்.இன்னொருவிதமான பரிவ்ராஜகர்கள் என்கிற துறவி களோ ஒரு இடத்தில் குறைந்தது மூன்று நாட்கள் அதிகமா னால் ஒரு வாரம் தான் தங்குவார்களாம்..
இது எதற்கு என்றால் ஒரே இடத்தில் அதிக நாட்கள் தங்கி னால் அந்த இடத்திலோ, அங்கு வாழும் மக்களின் மேலோ மற்றும் அங்கு வாழும் மக்களுக்கு இவர்கள் மீதோ பற்று வந்துவிடும். அதனால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பிரயாணம் செய்து கொண்டே இருப்பார்கள்.
இப்படி அவர்கள் தங்கும் கிராமத்தில்பிச்சை எடுத்துதான் உணவு உட்கொள்வார்கள்.
ஆனால் மழைக் காலத்திலோ ஊர் ஊராக பிராயாணம் செய்யமுடியாது. ஏனெனில் மழைக் காலத்தில்தான் புல், காளான் செடிகள் தளிர்க்க ஆரம்பிக்கும்; புழு பூச்சிகள் மண்ணிலிருந்து வெளிவரத் தொடங்கும். துறவிகளுக்கு அகிம்சைதான் முக்கியமான குணமாகும்.இந்த புல் செடி கொடிகளையும், புழு பூச்சிகளையும் மிதியாமல் நடப்பது கஷ்டமானது என்பதால், மழைக்காலம் தொடங்கி முடி யும் வரை ஒரே இடத்தில் தங்கி விடுவார்கள்.
தர்மம் செழித்து வாழ்ந்த காலத்தில் ஆடி மாதம் மழை பெய்ய தொடங்கி ஐப்பசி மாதம் முடியும் வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்குமாம்.அதனால் அந்த நான்கு மாதங்களும் முனிவர்களும் பயணப்படாமல் ஓரிடத்தில் தங்க துவங்கி விடுவார்கள்.
இந்த சந்நியாசிகள் எந்த ஊரில் மழைக்காலம் தொடங் கும்பொழுது இருக்கிறார்களோ அதே ஊரிலேயே நான்கு மாதங்களும் தங்கிவிடுவார்கள். அப்பொழுது அந்தந்த ஊர் மக்களே அவருக்குத் தேவையான குடிசையை அமைத்து கொடுத்து உணவுக்கும்ஏற்பாடு செய்வார்கள்.இந்த மழைக்
காலத்தில் மக்களுக்கும் வேறு வேலை இல்லாது இருக்கு ம்.
இதனால் துறவி களிடம் அவ்வூரில் வாழும் மக்கள் வே தாந்த உபதேசம் செய்யுமாறு வேண்டிக் கொள்வார்கள். சன்னியாசியும் தான் பெற்ற ஞானத்தை வெளிபடுத்தும் வகையிலும், மக்களுக்கு துவங்கவிருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், ஆடிமாத பவுர்ணமியில் அவதரித்த வியாச பகவானை ஆராதித்துப் சாதுர் மாஸ்ய விரதம் தொடங்கி பூஜை செய்து மக்களுக்கு அறிவு புகட்டிவந்தார்கள்.
இப்படி மழைக்காலத்தில் மட்டுமே அறிவு வளர்க்க அந்த
காலத்தில் மக்கள் சென்றதால் இன்றைக்கும் நாம் படிக்கா தவர்களை மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கா தவன் என்று கிண்டல் செய்கிறோம்.மனித வாழ்க்கையில் நிகழ்ந்த எந்த ஒரு நிகழ்வும் வேதங்க ளையே சார்ந்து நிற்பதால் தான் இந்து மதம் என்பது மனிதனின் வாழ்விய ல் முறைஎன்று போற்றப்படுகிறது.
நன்றி இணையம்