கிரகங்கள் படுத்தும் பாடு - ( 83 )

மணக்கால் அய்யம்பேட்டை | 3:54 PM | Best Blogger Tips

சினிமாவில் சாதித்தவர்கள்
கிரகங்கள் படுத்தும் பாடு - ( 83 )
"பாட்டினைப்போல் ஆச்சர்யம் பாரின்மிசை இல்லையடா !"
என்றார் கவிஞர் பாரதியார்.
பாட்டு ஞானம் என்பது ஒரு தெய்வீக அம்சம் .அது எல்லோருக்கும் வருவதில்லை.இதற்கு அவர் பிறக்கும் நேரத்தில் வானவீதியில் உள்ள கிரகநிலைகள் அவசியமாகும்.ஒருவர் எவ்வளவுதான் முயற்சியும,பயிற்சியும் செய்தாலும் கடவுளின் அனுக்கிரகமும்,,கிரகங்களின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியமாகும்.
சினிமாவில் பின்னனி பாடல் பாடி புகழ்பெறுவதற்கு அவர்களது சாதகத்தில் வாக்குஸ்தானம் எனப்படும் இரண்டாமிடம் பலம்பெற்று இருக்கவேண்டும்.வித்தைக்கு அதிபதியான புதன்பகவான் பலம்பெற்று இருக்கவேண்டும்.மேலும் கலைக்கு அதிபதியான சுக்கிரபகவானும் நல்ல நிலையில் இருக்கவேண்டும்.
சினிமாவில் பின்னனி பாடி பெரும்புகழ்பெற்ற பிரபல பின்னனி பாடகி‪#‎லதாமங்கேஷ்கர் சாதகத்தினை உதாரண சாதகமாக எடுத்து நாம் ஆய்வு செய்து பார்த்தால் மேற்கண்ட கிரக அமைப்புகள் அவரது சாதகத்தில் தெளிவாக காணப்படுகிறது.
லதாமங்கேஷ்கர் சாதகம்;-
கிரக நிலை விபரம்.
மகர லக்கனம்
விருட்சக ராசி
4)-ல் ராகு
5)-
ல் குரு 
7)-
ல் சுக்கிரன்
8)-
ல் சூரியன்
9)-
சூரியன்,புதன்
10)-
ல் கேது
11)-
ல் சந்திரன்
12)*
ல் சனி
சாதக விளக்கம்
இவரது வித்தைக்காரகன் புதன் பகவான் வருமானத்தை தரும் பாக்கியாதிபதியாகி பாக்கியஸ்தானத்திலே உச்சம்,ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் முப்பலமடைந்து கீர்த்தி,புகழ் தரும் ஸ்தான அதிபதியான குருவால் பார்க்கப்படுதல் பாடகராகும் யோகமாகும்.
கலைக்கு காரகன் சுக்கிரன் பகவான் தொழில்காரகராகி பத்துக்கு பத்தாம் இடமான ஏழாமிடகேந்திரஸ்தானமேறியது சினிமாவில் பாடுவது தொழில் ஆனது.
மேலும் வாக்காதிபதி சனிபகவான் வாக்குஸ்தானத்திற்கு லாப இடமான குருமனையேறி ராசிக்கு வாக்குஸ்தானமேறியதாலும்,வாக்காதிபதி சனிபகவான் தனது சொந்த வீடான வாக்குஸ்தானத்தை பார்த்து பலம்பெற்றதாலும் சினிமாவில் 2500 க்கு மேற்பட்ட பாடல்களை பெயரும்,புகழும் மற்றும் செல்வாத்தையும் ஈட்டவைத்தது.
ராசிக்கு மோட்ஷ ஸ்தானமான பணிரெண்டில் ஞானக்காரகன் கேதுபகவான் அமர்ந்திருப்பதால் தெய்வீக அருளும் இவருக்கு கிடைத்துள்ளது.
மனதுகாரகன் சந்திரன் நீசமடைந்து இருந்தாலும் குருவின் பார்வையை பெற்று பலமடைகிறது.
ஒருவர் சிறந்த இசைஞானம் பெற அவரது சாதகத்தில் சூரியன்,சந்திரன்,சனி,புதன் மற்றும் சுக்கிரன் பலம்பெற வேண்டும்.இவருடைய சாதகத்தில்
சூரியன்-ஆட்சி
புதன்-உச்சம்,உச்சம்,ஆட்சி,மூலதிரிகோணம் (குரு பார்வை )
சுக்கிரன்-கேந்திரம்
சனிபகவான்-ராசிக்கு இரண்டாமிடம்
சந்திரனுக்கு -குருபார்வை
எனவே மேற்கண்ட அமைப்பை பெற்றிருந்தால்தான் பிரபல பாடகியாக திகழமுடிந்தது.
*************************************
(
தங்களது சாதக அமைப்பை விரிவாக ஆராய்ந்து போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் போன் வழியாக பலன் அளிக்கப்படும்.விவாக பொருத்தம்,ஜெனனசாதகம் கணித்து அனுப்புதல் போன்றவற்றிற்கு தொடர்புகொள்ளவும்)
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம்சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்.
தொடர்புக்கு
செல் ;97 151 89 647
செல் : 740 257 08 99
வாட்ஸ்அப்
97 151 8
9 647
வாட்ஸ்அப்பில் பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை அனுப்பினால் போதும்.