சிதம்பரம்
- நடராசர் கோயில்
- ஆகாயம் - ஆகாச
லிங்கம்
அருள்மிகு
உமையபார்வதி உடனுறை
ஆதிமூலநாதர் அருள்மிகு
சிவகாமி உடனுறை
நடராசர்
கோயில்:
கோயில் என்பது எல்லா ஆலயத்திற்கும் பொதுப்பெயர். அதுவே சிறப்புப் பெயராகக் குறிப்பிட்ட ஒரு தலத்தைக் குறிக்குமானால் அது அதனுடைய மிக்க உயர்வைக்குறிக்கும். அங்ஙனம் உயர்வுபற்றிய காரணத்தால் இத்தலம் கோயில் என்னும் பெயர் பெற்றது.
கோயில் என்பது எல்லா ஆலயத்திற்கும் பொதுப்பெயர். அதுவே சிறப்புப் பெயராகக் குறிப்பிட்ட ஒரு தலத்தைக் குறிக்குமானால் அது அதனுடைய மிக்க உயர்வைக்குறிக்கும். அங்ஙனம் உயர்வுபற்றிய காரணத்தால் இத்தலம் கோயில் என்னும் பெயர் பெற்றது.
இத்தலத்திற்கு வழங்கும்
வேறு
பெயர்கள்:
(1) பெரும்பற்றப்
புலியூர்:
பெரும்பற்றினால்
புலிப்பாதன்
பூசித்த
ஊராதலால்
இப்பெயர்
பெற்றது.
(2) சிதம்பரம்:
(சித்
+ அம்பரம்)
சித்
= அறிவு,
அம்பரம்
= வெட்டவெளி.
ஞானகாசம்
ஆதலால்
இப்பெயர்பெற்றது.
(3) தில்லைவனம்:
தில்லை
என்னும்
மரமடர்ந்த
காடாயிருந்ததால்
இப்பெயர்
பெற்றது.
இவைகளன்றி, வியாக்கிரபுரம்,
புண்டரீகபுரம், பூலோக கைலாசம்
என்னும்
வேறு
பெயர்களும்
உண்டு.
கோயிலிலுள்ள ஐந்து
சபைகள்:
பேரம்பலம்
சிற்றம்பலம்
கனகசபை
நிருத்தசபை
இராஜசபை
பேரம்பலம்
சிற்றம்பலம்
கனகசபை
நிருத்தசபை
இராஜசபை
திருமுறை- பதிகம்
- 1-80-01
கற்றாங் கெரியோம்பிக்
கலியை
வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
பொழிப்புரை :
வேதம் முதலிய நூல்களைக்
கற்று
அவற்றின்கண்
ஓதிய
நெறியிலே
நின்று,
வேள்விகளைச்
செய்து,
இவ்வுலகில்
வறுமையை
வாராமல்
ஒழிக்கும்
அந்தணர்கள்
வாழும்
தில்லையிலுள்ள
சிற்றம்
பலத்தில்
எழுந்தருளியவனும்
இளமையான
வெள்ளிய
பிறை
மதியைச்
சூடியவனும்
ஆகிய
முதல்வனது
திருவடிகளைப்
பற்றுக்கோடாகக்
கொண்டு
வாழ்பவர்களைப்
பாவம்
பற்றா.
நன்றி இணையம்