திருக்காளத்தி - காளத்தீசுவரர் கோயில் - காற்று - வாயு லிங்கம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:33 | Best Blogger Tips

அருள்மிகு ஞானப்பூங்கோதை உடனுறை திருக்காளத்திநாதர் [] குடுமித்தேவர்
இது சீகாளத்தி எனவும் கூறப்பெறும. சிலந்தி, பாம்பு, யானை இவை மூன்றும் வழிபட்டு வீடுபேறு அடைந்த தலம் ஆதல் பற்றி இப்பெயர் எய்திற்று என்பர். (சீ = சிலந்தி, காளம் = பாம்பு, அத்தி = யானை)
இறைவன் திருமுன்பு எரியும் பல திருவிளக்குக்களில் ஒன்று காற்றினால் மோதப்பெற்றது போல் எப்பொழுதும் அசைந்து கொண்டிருப்பதே இதற்குச் சான்றாகக் காணலாம். தென் கயிலாயத் தலங்களுள் முதன்மை பெற்றது.
திருமுறை- பதிகம் - 7-26-01
செண்டா டும்விடையாய் சிவ
னேயென் செழுஞ்சுடரே
வண்டா ருங்குழலா ளுமை
பாக மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கண
நாதனெங் காளத்தியாய்
அண்டா வுன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே
பொழிப்புரை :
விரைந்து நடக்கும் இடப வாகனத்தை உடையவனே, சிவபெருமானே, செழுமையான ஒளி வடிவினனே, வண்டுகள் நிறையச் சூழும் கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் விரும்பிக் கொண்டவனே, உன்னைக் கண்டவர் பின்பு நீங்காது பேரன்பு செய்யப்படுபவனே, பூதக் கூட்டத்திற்கு அரசனே, திருக் காளத்தியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, பரவெளியில் விளங்குபவனே, அடியேன் உன்னை யல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; ஆதலின், அடியேனுக்கு அருள் பண்ணுதல் வேண்டும்.

 நன்றி இணையம்