கரப்பான் பூச்சி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:43 | Best Blogger Tips
தெரிந்து கொள்வோமே!
***********************
மாமியாருக்கு பயப்படாத பெண்கள்கூட கரப்பான் பூச்சிக்கு பயப்படுவார்கள் என்று சொல்வதில் உண்மை இருக்கோ இல்லையோ அணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான்.

ஆம், கரப்பான் பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை தோன்றியது மனித இனம் தோன்றுவதற்கு முன். அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியவை.

அன்று முதல் இன்று வரை அதன் தோற்றத்தில் எந்த பரிணாம வளர்ச்சியும் அடையவில்லை(சுறா மீனும் இதே காலப்பகுதியில் தோன்றியவை, அவையும் நீண்ட காலம் தோற்ற மாற்றமின்றி வாழ்கின்றன). உலகின் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம் ஜேர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாகும்.

தற்போது உலகில் சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஆறு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி தலை, நெஞ்சு, வயிறு எனும் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கு மூன்று ஜோடி கால்களும்,ஒரு ஜோடி உணர்கொம்பும் உண்டு.கரப்பான் பூச்சிக்கு முதுகெலும்பு கிடையாது. இரண்டு சோடி அல்லது ஒரு சோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது.கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறமுடையது! இவற்றால் தலை துண்டிக்கப் பட்டாலும் சுவாசிக்க முடியும்!! சில கரப்பான் பூச்சிகளால் காற்றுஇல்லாமல் 45 நிமிடங்கள் வழமுடியும்.

Via உலக தமிழ் மக்கள் இயக்கம்