இரத்ததானம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:35 PM | Best Blogger Tips
Photo: இரத்ததானம்:- 

" பிறர் நலனுக்காக செய்யப்படும் இரத்ததானமும். பிராத்தனை போன்றதே. "
 
இரத்த தானத்தின் சிறப்பே நாம் தானம் செய்கின்ற இரத்தத்தைப் பெறுகின்ற மனிதர்கள் நம் முன்னில் உயிர் பெருகின்ற அதிசயத்தை கண்டு மனம் மகிழலாம். நாம் செய்கின்ற  இரத்ததானத்தின் முலம் புத்துணர்ச்சியும், உடல் நோயற்ற வாழ்வும் நமக்கே கிடைகிறது.

இரத்ததிற்கு மாற்று பொருள் இன்னும் கண்டு பிடிக்க பல ஆரா ய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் இரத்தத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிகத்து கொண்டு வருகிறது ஆதலால் மனித குலத்தை காக்க மனிதர்களாகிய நாம் அனைவருமே இரத்ததானம்செய்ய முன்வரவேண்டும்.

இரத்தம் என்பது என்ன?

இரத்தத்தில் மூன்று விதமான செல்கள் இணைந்திருக்கும். அதாவது வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், இரத்தத்தை உறைய வைக்கும் அணுக்கள் ஆகியவையாகும்.

இரத்தத்தில் இருக்கும் சிவப்பணு, நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும். பின்னர் அப்பகுதிகளில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை நுரையீரலுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

வெள்ளை அணுக்கள் படை வீரர்களைப் போன்று செயல்படுவார்கள். உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிப்பது, வேறு ஏதேனும் கிருமிகள் உடலுக்குள் நுழைந்தால் அவற்றை அழிப்பது போன்ற வேலைகளைச் செய்யும்.

இரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் என்ன செய்யும் என்று சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. நாமே உணர்ந்திருப்போம், நமக்கு ஏதேனும் சிறய காயம் ஏற்பட்டு இரத்தம் வந்தால் 5 நிமிடங்களிலேயே வெளியே வந்த ரத்தம் உறைந்து மேலும் இரத்தக் கசிவு நிறுத்தப்படுகிறது. இரத்தத்தை உறைய வைக்கும் மிக முக்கிய வேலையை செய்யும் செல்கள் பிளேட்லெட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

இரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா என்ற செல்கள் குளுகோஸ், கொழுப்பு, புரதம், நொதிப்பு மற்றும் ஹார்மோன்களை சுமந்து செல்லும் அமைப்பாக செயல்படுகின்றன.

இரத்தத்தின் வகைகள்:-

இரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, ஓ, ஏபி ஆகும். இந்த 4 வகைகளில் மனிதன் ஏதாவது ஒரு வகையாகத்தான் இருப்பான்.

அதிலும் ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய இரத்த அமைப்புகள் உள்ளன.

ஒவ்வொருவரும் தங்களது இரத்த வகையை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இரத்த தானம் பெறுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது ஏ வகை இரத்தம் கொண்டவர்கள் ஏ வகை இரத்தத்தை மட்டுமே தானமாகப் பெறலாம். இது எல்லா வகை இரத்தத்திற்கும் பொருந்தும்.

ஆனால் ஏதாவது மிகுந்த நெருக்கடியான நேரங்களில் வேண்டுமானால் எந்த ஒரு இரத்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஓ வகை இரத்தத்தை அவருக்கு செலுத்தலாம். அதேப்போன்று ஏபி இரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு எந்த வகை இரத்தத்தையும் அளிக்கலாம்.

இரத்ததானத்திற்கு தகுதியானவர்கள்:-

18வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவருமே (இருபலரும்) இரத்த தானம் செய்யலாம். நமது உடலில் உள்ள இரத்தத்தை 350 மில்லி வரை இரத்ததானம் செய்யலாம். இதன் முலம் மனித உயிர்களை காத்திடலாம். அவர்களின் உள்ளங்களிலும் நிலைத்திடலாம்.

நாம் தானமாக கொடுத்த இரத்தம் நம் உடலில் மிண்டும் ஒரு சிலநாட்களில் உற்பத்தியாகிவிடும். உடலில் மிண்டும் உற்பத்தியாகும் பொருள் நாம் தானம் செய்யும் இரத்தம் மட்டுமே!
 
அரசாங்க சட்டவிதிகளின் படி உரிமம் பெற்ற இரத்தவங்கிகளில் மட்டுமே நாம் இரத்ததானம் செய்ய முடியும். நாம் கொடுக்கின்ற இரத்தம் பல பரிசோதனைகள் செய்த பின்னரே பயனாளிகளின் உடலில் செலுத்தப்படுகிறது. இதன் முலம் நமக்கும் நம்முடைய ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ள ஏதுவாக அமைகிறது.

" செயல்கள் மறக்கப்படுகின்றன.  ஆனால் அதன் பயன்கள் நிலைத்திருக்கின்றன . "
" பிறர் நலனுக்காக செய்யப்படும் இரத்ததானமும். பிராத்தனை போன்றதே. "

இரத்த தானத்தின் சிறப்பே நாம் தானம் செய்கின்ற இரத்தத்தைப் பெறுகின்ற மனிதர்கள் நம் முன்னில் உயிர் பெருகின்ற அதிசயத்தை கண்டு மனம் மகிழலாம். நாம் செய்கின்ற இரத்ததானத்தின் முலம் புத்துணர்ச்சியும், உடல் நோயற்ற வாழ்வும் நமக்கே கிடைகிறது.

இரத்ததிற்கு மாற்று பொருள் இன்னும் கண்டு பிடிக்க பல ஆரா ய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் இரத்தத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிகத்து கொண்டு வருகிறது ஆதலால் மனித குலத்தை காக்க மனிதர்களாகிய நாம் அனைவருமே இரத்ததானம்செய்ய முன்வரவேண்டும்.

இரத்தம் என்பது என்ன?

இரத்தத்தில் மூன்று விதமான செல்கள் இணைந்திருக்கும். அதாவது வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், இரத்தத்தை உறைய வைக்கும் அணுக்கள் ஆகியவையாகும்.

இரத்தத்தில் இருக்கும் சிவப்பணு, நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும். பின்னர் அப்பகுதிகளில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை நுரையீரலுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

வெள்ளை அணுக்கள் படை வீரர்களைப் போன்று செயல்படுவார்கள். உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிப்பது, வேறு ஏதேனும் கிருமிகள் உடலுக்குள் நுழைந்தால் அவற்றை அழிப்பது போன்ற வேலைகளைச் செய்யும்.

இரத்தத்தை உறைய வைக்கும் செல்கள் என்ன செய்யும் என்று சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. நாமே உணர்ந்திருப்போம், நமக்கு ஏதேனும் சிறய காயம் ஏற்பட்டு இரத்தம் வந்தால் 5 நிமிடங்களிலேயே வெளியே வந்த ரத்தம் உறைந்து மேலும் இரத்தக் கசிவு நிறுத்தப்படுகிறது. இரத்தத்தை உறைய வைக்கும் மிக முக்கிய வேலையை செய்யும் செல்கள் பிளேட்லெட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

இரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா என்ற செல்கள் குளுகோஸ், கொழுப்பு, புரதம், நொதிப்பு மற்றும் ஹார்மோன்களை சுமந்து செல்லும் அமைப்பாக செயல்படுகின்றன.

இரத்தத்தின் வகைகள்:-

இரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது , பி, , ஏபி ஆகும். இந்த 4 வகைகளில் மனிதன் ஏதாவது ஒரு வகையாகத்தான் இருப்பான்.

அதிலும் பாசிடிவ், நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், பாசிடிவ், நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய இரத்த அமைப்புகள் உள்ளன.

ஒவ்வொருவரும் தங்களது இரத்த வகையை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இரத்த தானம் பெறுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது வகை இரத்தம் கொண்டவர்கள் வகை இரத்தத்தை மட்டுமே தானமாகப் பெறலாம். இது எல்லா வகை இரத்தத்திற்கும் பொருந்தும்.

ஆனால் ஏதாவது மிகுந்த நெருக்கடியான நேரங்களில் வேண்டுமானால் எந்த ஒரு இரத்த வகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் வகை இரத்தத்தை அவருக்கு செலுத்தலாம். அதேப்போன்று ஏபி இரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு எந்த வகை இரத்தத்தையும் அளிக்கலாம்.

இரத்ததானத்திற்கு தகுதியானவர்கள்:-

18
வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவருமே (இருபலரும்) இரத்த தானம் செய்யலாம். நமது உடலில் உள்ள இரத்தத்தை 350 மில்லி வரை இரத்ததானம் செய்யலாம். இதன் முலம் மனித உயிர்களை காத்திடலாம். அவர்களின் உள்ளங்களிலும் நிலைத்திடலாம்.

நாம் தானமாக கொடுத்த இரத்தம் நம் உடலில் மிண்டும் ஒரு சிலநாட்களில் உற்பத்தியாகிவிடும். உடலில் மிண்டும் உற்பத்தியாகும் பொருள் நாம் தானம் செய்யும் இரத்தம் மட்டுமே!

அரசாங்க சட்டவிதிகளின் படி உரிமம் பெற்ற இரத்தவங்கிகளில் மட்டுமே நாம் இரத்ததானம் செய்ய முடியும். நாம் கொடுக்கின்ற இரத்தம் பல பரிசோதனைகள் செய்த பின்னரே பயனாளிகளின் உடலில் செலுத்தப்படுகிறது. இதன் முலம் நமக்கும் நம்முடைய ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ள ஏதுவாக அமைகிறது.

"
செயல்கள் மறக்கப்படுகின்றன. ஆனால் அதன் பயன்கள் நிலைத்திருக்கின்றன . "
 
Via ஆரோக்கியமான வாழ்வு