வீரர்கள் ஜெய்மல் மற்றும் கல்லாஜி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:12 AM | Best Blogger Tips

 May be an image of 6 people

வீரர்கள் ஜெய்மல் மற்றும் கல்லாஜி
அக்பரின் படைகள் திடீரென சித்தூரை சுற்றி வளைத்தன. திடீர் முற்றுகையை மகாராணா உதய் சிங்குக்கு தெரிவிக்க, ஒருவரை அனுப்பிவிட்டு, மேலும் படைகள் வரும்வரை அவர்களை சமாளிக்க ஜெய்மால் மற்றும் சில வீரர்கள் தீரத்துடன் எதிர்த்தனர்.
 
எதிர்பாராவிதமாக ஜெய்மாலின் கால்கள் சேதமடைந்தன. அதனைக் கண்ட 24 வயது கல்லாஜி எனும் வீரன் அவரை தன் தோள்களில் சுமந்தவாறு போராடினான்.
 
சுழன்று சுழன்று பலரின் தலைகளை தரையில் வெட்டி வீசினர். நான்கு கைகள் கொண்ட ஏதோ ஒரு அசுர சக்தி படைகள் நடுவே பலரைக் கொன்றதைக் கண்ட அக்பர் அதிர்ச்சியில் நின்றார்.
 
அதே சமயம் மகாராணா உதய்சிங் பெரும் படையுடன் இணைய எங்கும் மரண ஓலம். அக்பரின் படை சின்னாபின்னமாகி ஓடத் துவங்கியது. அப்பரும் அதிர்ச்சியில் எதிர்க்க திறனின்றி பின்வாங்கி ஓடினார்.
 
எல்லாம் முடிந்த பின்னர், காலாஜியின் தோள்களிலேயே வீரன் ஜெய்மால் வெற்றி களிப்புடன், இறுதி மூச்சை விட்டார். இளம் வீரன் காலாஜியின் உடல் முழுக்க வெட்டுக் காயங்கள், சிறிது நேரத்தில் தன் தலைவன் ஜெய்மாலை பார்த்தபடி அவனின் மூச்சும் அடங்கியது.
மொத்த படையும் அவர்களை வணங்கி அழுதனர். இன்றும் தாய்மார்கள், இந்த கதையை ரஜபுத்ர குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கின்றனர்.
 
இந்து வீரர்கள் வீரத்துக்கு முன் யாரும் நின்றதில்லை. ஆனால் காலங்காலமாக கூடவே இருந்து குழி தோண்டிய இந்துக்களால் மட்டுமே அவர்கள் வீழ்ந்தனர். அதுவே இன்றும் தொடர்கிறது.
 
ஹர ஹர மகாதேவ்!
 
தகவல் உபயம் Ajith Gadiya
🙏🙏🙏