ஆபீஸ்க்கு லேட் ஆயிருச்சுனு ஊபர் வண்டி புக் பண்ணிருந்தேன்
ஒரு 65 அல்லது 70 வயது நிறைந்த ஒருவர் வந்தார் Good morning sirனு OTP சொல்லி விட்டு வண்டி கிளம்பியது நார்மலா நாஸ்டா ஆயிருச்சா சார்னு கேட்டுட்டு சார் உங்கள பாத்தா ட்ரைவர் மாதிரி தெரியலயேனு கேட்டேன் ஆமா சார் எப்படி கண்டு பிடிச்சீங்கனு கேட்டார் இல்ல சார் பெரும்பாலும் ஓலா, ஊபர் ஓட்டும் ட்ரைவர்கள் ரொம்ப டயர்டா இருப்பாங்க
ஆனா நீங்க அப்படி இல்லை ரொம்ப நேர்த்தியா உடையும் போட்டு இருக்கீங்க அதான் கேட்டேன்னு சொன்னேன்.
ஆமா சார் நான் கர்நாடக நீர்வளத்துறைல பெரிய பதவில வேலை செய்து ரிட்டைடு ஆகிட்டேன் பையன் ஆஸ்திரேலியாவுல செட்டில் ஆயிட்டார் பொண்ணு ஜெர்மன்ல செட்டில் ஆயிட்டா ஆனா கொஞ்ச நாள் அவங்க இரண்டு பேர் கூடயும் இருந்து பாத்தோம் எங்களுக்கு செட் ஆகல
பெங்களூர் பிறந்து வளர்ந்து வேற ஒரு நாடு எனக்கும் மனைவிக்கும் செட் ஆகல அதானால பெங்களூர் வந்துட்டேன் வந்து வீட்டிலே முடங்கிக் கிடக்கக எனக்கு விருப்பம் இல்லை
அதனால டைம் பாஸ்க்கு காலைல பிரேக் பாஸ்ட் முடிச்சுட்டு மனைவிக்கு மருந்து எல்லாம் கொடுத்துட்டு அப்டியே வண்டிய எடுத்துட்டு 9 மணில இருந்து 12 மணி வரை கார் ஒட்டுவேன் நிறைய மனிதர்களை பாப்பேன் நிறைய பேர்களுடன் பேசுவேன் சரியா 10.30 க்கு ஒரு காபி 1 மணிக்கு எங்க இருந்தாலும் வீட்டுக்கு போயிட்டு லன்ஞ் முடிச்சுட்டு ஒரு குட்டி தூக்கம் அப்றமா மாலை மனைவியை அழைச்சிட்டு கொஞ்சம் தூரமா இருக்குற பார்க்குக்கு ஒரு ட்ரைவ் அங்க பார்க்ல ஒரு ரவுண்டு அங்க பழைய நண்பர்களுடன் கொஞ்சம் அரட்டை அப்றமா வீட்டுக்கு வந்து நானும் மனைவியும் எங்களுக்கு தேவையானத சமைச்சுட்டு பசங்க & பேர பசங்ககிட்ட வீடியோ கால் பேசிட்டு படுக்க போயிடுவோம்னு சொன்னாரு
எவ்ளோ ஆசீர்வாதமான வாழ்க்கை இல்ல சில பேர் வாழ்க்கை ரொம்ப ஆச்சரியமா இருக்கும்
வயசானலே தனியா தான் இருக்கனும், இப்படி வயசான காலத்துல நம்ம குழந்தைகள்
நம்மள விட்டுட்டு தூரமா இருக்காங்களேனு நினைச்சி கவலை படாமல் வாழ்க்கையை
அதன் போக்கிலே வாழும் இந்த நபர் நிச்சயமா தன்னம்பிக்கையின் நாயகன் தான்...