என்னது 121 பேர சத்தமில்லாம தூக்கிட்டாங்களா.......

மணக்கால் அய்யம்பேட்டை | 6:01 PM | Best Blogger Tips

The untold story of a rescue operation: a transport aircraft, an unlit  runway and 1.5 hours | India News - The Indian Express 

 

என்னது 121 பேர சத்தமில்லாம தூக்கிட்டாங்களா.
எம்டன் களா இருக்காங்களே.

சூடானில் பாரதப் பிரதமர் அவர்கள் மோடி 7 நிமிடத்தில் செய்த சாதனை

இந்திய ராணுவம் இரு தினங்களுக்கு செய்த மிகதுணிச்சலான நடவடிக்கை மூலம் சர்வதேச புகழை பெற்றுவிட்டது, கிட்டதட்ட முன்பு இஸ்ரேல் உகாண்டாவில் செய்த மாபெரும் சாதனைக்கு இது ஈடானது.
IAF aircraft rescues 121 Indians in a 'daring night operation' in  conflict-torn Sudan | India News - Times of India
இந்திய விமானபடையின் இந்த அதிரடியால் உலகமே திகைத்து வியந்து இந்தியாவின் எழுச்சியினை பாராட்டுகின்றது. இந்திய யுகம் தொடங்கிவிட்டதாக சொல்ல தொடங்கிவிட்டன‌.

நடந்த சம்பவம அவ்வளவு திகைப்பானது, சிலிர்ப்பானது.

விஷயம் நடந்திருப்பது சூடானில் .

IAF aircraft rescues 121 Indians in a 'daring night operation' in  conflict-torn Sudan | India News - Times of India

இந்திய ராணுவபடை விமானங்கள் உக்ரைனிலும் காபூலிலும் இருந்து இந்தியர்களை மீட்டது பெரிய விஷயம் அல்ல, காரணம் முறையான விமான நிலையங்களில் வழக்கமான சம்பிரதாயத்துடன் பகலில் எந்த ஆபத்துமில்லாமல் அவை நடந்தன‌.

சூடானில் அப்படி அல்ல, சூடானின் வான்பகுதி மூடபட்டு விமானம் பறக்க தடை செய்யபட்டிருக்கின்றது , அமெரிக்கா மட்டும் துணிச்சலாக தன் ஹெலிகாப்டர்களை ராணுவ சகிதம் அனுப்பி தன் தூதர்களை மீட்டது.

வேறு எல்லா நாடுகளும் அங்கே திணறின, விமான நிலையத்தில் சண்டை நடப்பதால் விமானம் சாத்தியமில்லை இன்னும் பல வழிகளும் சாத்தியமில்லை

பல நாட்டு மக்கள் இப்படி சிக்கி கொண்டார்கள்
Most difficult of situation…” Indian Air Force Chief's two thumbs up for  daring Sudan mission - YouTube
இந்தியர்களும் 121 பேர் இப்படி சிக்கிகொண்டார்கள், இவர்களை மீட்பது பெரும் சவானாலது

பிரதமர் மோடி இந்திய விமானபடைக்கு முழு உரிமை அளித்தார், இதனால் உற்சாகததுடன் இந்திய விமானபடை களமிறங்கியது அவர்களோடு இந்திய உளவுதுறையும் வெளிநாட்டு அமைச்சகமும் இணைந்தன‌.

சூடானில் வெளிநாட்டு விமானம் பறக்க முடியாது பறந்தால் இரு தரப்பும் அச்சத்தில் தாக்கலாம், அதை தாண்டி முக்கிய விமான நிலையம் சீரழிந்து கிடக்கின்றது, இந்நிலையில் சூடானிய அனுமதி இல்லாமல் இந்தியர்களை மீட்டு வரவேண்டும்

இந்திய உளவுதுறை சூடானை ஆராய்ந்தது அப்பொழுது தலைநகரை தாண்டி 50 கிமி தொலைவில் ஒரு ஆளில்லா கைவிடபட்ட விமான நிலையம் இருப்பது தெரிந்தது

அங்கே விமானத்தை இறக்கலாம் ஆனால் சிக்கல் பலவகை

From Yemen to Sudan — Modi govt's rescue operations since 2015 | Latest  News India - Hindustan Times

முதலில் தரையில் யாருமே இல்லை, மின்சாரம் இல்லை விளக்கு இல்லை ஏர் டிராபிக் எனப்படும் வழிகாட்டுதல் இல்லை, இங்கே விமானம் இறங்கினாலும் ஏறினாலும் ஆபத்து அதிகம்

அப்படியே விமானம் வந்தாலும் சூடான் அனுமதிக்காது அவர்களை மீறித்தான் ரகசியமாக வரவேண்டும்

அப்படி வரும்பொழுது இந்திய விமானம் பறந்துசெல்ல பெட்ரோல் நிரபப வழி இல்லை

இப்படி ஏக சிக்கல்கள்

முதலில் இந்திய விமானபடை தன் கமெண்டோக்களுடன் பெரிய விமானம் ஒன்றை சவுதி ஜெட்டா நகருக்கு அனுப்பியது, அங்கிருந்து சூடான் பக்கம் என்பதால் பெட்ரோல் ஒருமுறை நிரப்பினால் போதுமானது

பரபரப்பான காட்சிகளை இந்திய விமானபடை மிக ரகசியமாக செய்தது, அந்த 121 பேரும் ஓசைபடாமல் மாலை புறப்பட்டு அந்த ஆளில்லா விமான நிலையம் அருகே மறைந்திருந்தார்கள்
IAF C-17 Globemaster-III - India's daring rescue: Defining images of  Indians' evacuation from Yemen | The Economic Times
அதன் பின் தொடங்கியது இந்திய விமானபடை ஹெர்குலிஸ் ரக விமானத்தின் சாதனை

வெளிச்சமே இல்லாமல் இருளில் பறந்தது விமானம், விளக்கே இல்லாமல் பறந்ததால் சூடானியரின் பார்வைக்கு தெரியாது

அப்படியானால் பைலட்டுகள் எப்படி விமானத்தை செலுத்தினர் என்றால் இந்தியாவிடம் இப்போது இரவில் பார்க்கும் தாக்கும் உபகரணங்கள் உண்டு, மேற்கொண்டு செயற்கைகோள் வழிகாட்டலில் இந்திய விமானம் இருட்டில் சரியாக பறந்தது

விமானிகள் இரவில் சாமார்த்தியமாக விமானதை இறக்கினார்கள், என்சின் நிறுத்தபடவில்லை

விமான கதவு திறக்கபட்டு இந்திய கமெண்டோக்கள் ஓடி சென்று 121 பேரையும் மின்னல் வேகத்தில் விமானத்தில் ஏற்றி கிளம்பினார்கள்

விமானம் தரையில் நின்ற நேரம் 7 நிமிடங்கள்

மின்னல் வேகத்தில் கிளம்பிய விமானம் சவுதி ஜெட்டாவில் தரையிறங்கியது பின் இந்தியர்கள் நாடு திரும்பினார்கள்

சம்பவம் உலக அரங்கில் பெரும் திகைப்போடு பார்க்கபடுகின்றது

எந்த நாடும் இஸ்ரேலை தவிர இப்படி சவால் எடுத்ததில்லை அதிரடி காட்டியதில்லை, இந்தியா அதனை செய்திருக்கின்றது

இதை செய்தது ராணுவ விமானம் எனும் வகையில் இந்திய ராணுவம் எப்படி மேம்பட்டிருக்கின்றது என்பதை அறிந்த பாகிஸ்தான் நடுங்கி கொண்டிருக்கின்றது சீனா சத்தமே இல்லை

இந்த நடவடிக்கை சவால் அதிகம், பெரும் ஆபத்து விமானம் சிக்கினாலொ இல்லை அந்த போராளிகள் சூழ்ந்தாலோ பெரும் சொதப்பல்

ஒவ்வொரு திட்டமாக மிக நுணுக்கமாக ஆனால் தைரியமாக சவாலை மீறி வகுக்கபட்டு நிறைவேற்றபட்டிருக்கின்றது

மோடியின் இந்தியா உலகின் மாபெரும் சாகசத்தை செய்திருக்கின்றது.

ஆச்சரியம் என்னவென்றால் இது நடந்தது சனிகிழமை ஏப்ரல் 29,2023 அன்று

இதுபற்றி இந்திய ஊடகம் மூச்சுவிடவில்லை, மோடியும் பேசவில்லை
IAF C-17 Globemaster-III - India's daring rescue: Defining images of  Indians' evacuation from Yemen | The Economic Times
ஏன் பேசவில்லை?

அதுதான் ராஜதந்திரம், உலகமே இனி பேசபோகும் விஷயத்தை நாம் ஏன் முதலில் சொல்லவேண்டும்?

உலகெல்லாம் இருந்து இந்திய ராணுவத்துக்கு பாராட்டுமழை கொட்டபடுகின்றது, மோடி இஸ்ரேலிய பிரதமர்களை போல வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்

தன் மக்களை காக்க மோடி அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை பாஜக அரசு நிரூபித்து இருக்கின்றது.

இந்த சாதனையினை செய்த விமானி மற்றும் குழு தலைவர் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடபடவில்லை

நிச்சயம் விருதுகளுக்காக அவர்கள் பெயர் அறிவிக்கபடும் அப்போது தெரிந்து கொள்ளலாம்

மாபெரும் சாதனையினை இந்திய விமானபடை செய்திருக்கின்றது, ஒவ்வொரு இந்தியனும் நெஞ்சை நிமிர்த்தி  கம்பீரமாக அவர்களை பெருமையுடன் வாழ்த்த வேண்டிய நேரமிது

*"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும்
 அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே..." என சாதித்திருக்கின்றது மோடி அரசு*

இந்தியா வல்லரசு பட்டத்தை தொட்டுவிட்ட தருணமிது...

ராஜிவ் கொலையாளிகள் பெங்களூர் அருகே பதுங்கியபோது டெல்லியில் இருந்து கமோண்டோக்கள் வர இரு நாட்களானது

மும்பை தாக்குதலின் போது டெல்லியில் இருந்து கமாண்டோக்க்கள் வர ஒரு நாளானது

மோடி ஆட்சியில் 7 நிமிடத்தில் சூடானில் இருந்து இந்தியர் மீட்கபடுகின்றனர் என்பதில் தெரிகின்றது மோடி என்பவரின் ஆட்சி எத்தனைமடங்கு தேசத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றது எனும் சரித்திர சாதனை.

🇮🇳🌹🇮🇳RR🇮🇳🌹🇮🇳

தேசபக்தர் ஒருவரின் பேஸ்புக் பதிவிலிருந்து...

ஸ்ரீ கல்கருடன் 😍😍😍😍
SP