வில் வளைத்த விநாயகர்
உடையார் பாளையத்திற்கு பத்ராண்யம், முற்கபுரி என்ற பெயர்கள் உண்டு.
இங்கே உள்ள “திரு பயறணீசுவரர் ஆலயம்” தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் ஒன்று.
சுவாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசுவரர் எனவும் தமிழில் பயறணீநாதர் எனவும் மற்றும் அம்பிகையின் திருநாமம் தமிழில் நறுமலர்ப் பூங்குழல்நாயகி எனவும் வடமொழியில் சகுந்தளாம்பிகை எனவும் அழைக்கப்படுகிறது
வணிகன் ஒருவன் மிளகு மூட்டைகளை எடுத்துக் கொண்டு இவ்வூர் வழியே சென்றான்.
சுங்கச்சாவடியில் அவற்றை பயறு மூட்டைகள் எனக்கூறி குறைந்த வரியை செலுத்திவிட்டு தன்னுடைய ஊர் சென்று பார்த்தபொழுது மிளகு மூட்டைகள் அனைத்தும் பயறு மூட்டைகளாக காட்சி அளித்தது.
இவ்வூர் இறைவனை வேண்ட மீண்டும் அவை மிளகு மூட்டைகளாக மாறியதாகவும் இதன் காரணமாக இறைவனுக்கு பயறணிநாதர் என்று பெயர் வழங்கப்படுவதாக தல
வரலாறு கூறுகிறது.
பயறணீசுவரர் கோயிலுக்கு முன்பாக பிள்ளையார் சந்நிதி உள்ளது.
மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது முற்கபுரி என்றழைக்கப்பட்ட இந்நாளைய உடையார்பாளையத்தில் தங்கியிருந்தனர்.
அப்போழுது தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்ட போது விநாயக பெருமானை வேண்டி கொண்டனர்.
விநாயக பெருமான் அர்ஜூனனுடைய காண்டிப வில்லை வளைத்து அந்த இடத்தில் ஏரியை உண்டாக்கினார்.
இதனால் திருக்குளம்
வில் வடிவத்திலேயே அமைந்துள்ளது.
அவ்வாறு வில்லை வளைத்த நிலையிலேயே இந்த ஆலய வாசலில் ’வில் வளைத்த விநாயகராக’ காட்சி தருகிறார்.
பிள்ளையார் வடிவம் சிறிய வடிவம்தான்.
தனது நான்கு கைகளில் மேற்கைகளில் அங்குசம்
பாசம் ஏந்தியும்,
தனது கீழ் இரு கைளில் வில்லை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
எங்குமே காண இயலாத அரிய வடிவம்விநாயகர்: உடையார்பாளையம் விநாயகர் சன்னதியில் கோயில் கொண்டிருக்கும் விநாயகர்
