உலகிற்கே வழிகாட்டியாக திகழ்ந்த பாரத தேசம்..

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:17 | Best Blogger Tips

 


*பல காலம் முன்பு.. உலகிற்கே வழிகாட்டியாக திகழ்ந்த பாரத தேசம்..*

கல்வி, கேள்வி, ஆன்மீகம், கலாச்சாரத்தில்.. உலகத்தில் உள்ள விஷயம் தெரிந்தவர்கள் அனைவரும் வியந்து பார்க்கும் அளவில் உயர்ந்திருந்தது. அந்தக் கால ஐரோப்பா உள்ளிட்ட இளைஞர்களின் கனவு தேசமாக பாரத தேசம் இருந்தது. பலமுறை தோல்வி கண்ட பிறகும் கூட கொலம்பஸ் எனும் ஐரோப்பிய மாலுமி இந்திய தேசத்திற்கு கடல் வழி கண்டுபிடிக்க.. தன் உயிரை பணையம் வைத்து புறப்பட்டு வந்தானென்றால்... அக்காலத்திய பாரத தேசத்தின் உன்னத நிலையை நாம் தற்போது விளங்கிக் கொள்ளலாம்.

செல்வச்செழிப்பில் உச்சம் தொட்டிருந்த பாரத தேசம் நோக்கி.. பாரசீக.. பாலைவன வழிபறி கொள்ளையர்களின் கவனமும் திரும்பியது.. கைபர், போலன் கணவாய் வழியாக எதிரிகள் மெல்லமெல்ல ஊடுருவினர்.. செங்கிஸ்கான், தைமூர் லாமா என்ற மங்கோலிய கொடுங்கோலர்கள் வரிசையில்.. ( மங்கோலியர்கள் போரில் கைப்பற்றிய நாடுகளை ஆள வேண்டுமென்ற எண்ணமின்றி, போரின் போது கையில் சிக்கிய எதிர் நாட்டின் படை வீரர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது வாளாள் தலைகளை வெட்டி வீழ்த்தி, விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து, பின் நாடு நகரத்தை சூறையாடி விட்டுச் செல்வதையே நோக்கமாக கொண்டிருந்தனர். ஒரு மங்கோலிய வீரன், ஒரு நாளிற்கு குறைந்தது 24 மக்களை வாளால் கொல்ல வேண்டும் என கட்டளையிடப்பட்டிருந்தனர். செங்கிஸ் கான், ஒகோடி கான் மற்றும் குப்லாய் கான் போன்ற பேரரசர்கள் காலத்தில் மங்கோலியத் தொடர் படையெடுப்புகளால், வரலாற்றில் அதிக மனித உயிர்கள், மனிதாபமற்ற முறைகளில் பலி கொள்ளப்பட்டது என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். பல நாடுகளில் மக்கள் அகதிகளாக அலைந்தனர். மங்கோலியர்கள் வந்து சென்ற நாடு, நகரங்கள் எல்லாம் பாழடைந்து போயிற்று. மக்கள் வறுமையில் வாடினர். பலர் புலம் பெயர்ந்தனர்.) பாரத தேசத்தில் மட்டும் இந்தக் கொடுங்கோலனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடி பேர்.. அதன்பின் வந்ததை மூடலாமா என்னும் மங்கோலிய கொடுங்கோல் ஆனால் பாரத தேசத்தில் கொல்லப்பட்டவர்கள் சுமார் ஒரு கோடியே 70 லட்சம் பேர்.. அதன் பின்பு பேராசை கொண்ட

பாபரும் தன் பரிவாரங்களுடன் இந்தியாவிற்குள் நுழைந்தான்.

பாரத தேசத்திற்கு ஏழரை சனி பீடிக்க ஆரம்பித்த நேரம் அது..

*கொஞ்சம் பின்னோக்கி பயணிப்போம்..*

ரகு வம்சத்தில் தசரத சக்கரவர்த்திக்கு ராம அவதாரமாக திருமால் அவதரித்தார்..

உலகை உய்விக்க வேண்டி தோன்றிய யுக புருசன் ஸ்ரீராமனுக்கு.. நம் முன்னோர்கள் அயோத்தியில் அற்புத திருக்கோயில் எழுப்பி.. காலகாலமாக வழிபாடு செய்து வந்தனர்..

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை வடநாட்டு தெய்வமாக இன்றும் சில (கால்டுவெல் பாதிரிக்கு தப்பிப் பிறந்த..) இழி பிறவிகள் திரித்துக் கூறுவதுண்டு..

ஆனால்..

உண்மை அதுவல்ல..

*தமிழில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகநானூறு பாடல்..*

"வென்வேல் கவுரியர் தொன்முது கோடி முழங்கிருவம் பௌவம் இரங்கும் வெல்போர் இராமன் அருள் மறைக்கும்" என்ற பாடலில் ஸ்ரீ ராமனைப் பற்றிய செய்திகள் உள்ளன..

"அவித்த பல்வீல் ஆலம் போல ஒளி அவிந்தின்றால் இவ் அழுங்கல் ஊரே" *அகநானூற்றுப் பாடல் 70* என்ற பாடலிலும் ராமபிரானை பற்றி விரிவான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

"இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல் வீரசெரி மரபின் செவிதொடர் ...". என்ற 378 ஆவது *புறநானூற்றுப் பாடல்...* ராமபிரான் பற்றி விளக்கிக் கூறுகிறது..‌ ஸ்ரீராமர் வடநாட்டு கடவுளென்றால்.. நம் தமிழின் மிக முக்கிய மூத்த இலக்கியங்களான புறநானூற்றிலும் அகநானூற்றிலும் ராமர் பற்றிய பாடல்கள் இடம் பெற வேண்டிய அவசியம் என்ன..??

கிமு நான்காம் நூற்றாண்டில் *வால்மீகி முனிவரால் எழுதப்பட்ட ராமபிரான் வரலாறு..* (ராமபிரான் வேறு பாரத தேசம் வேறு அல்ல.. *ராமபிரானின் வரலாறே பாரத தேசத்தின் வரலாறும் கூட..* தவிர ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வாழ்ந்த "பாரத தேசத்தின் வரலாற்றை.." புராணம், இதிகாசம், இலக்கியம் என்று திரித்துக் கூறினர் சில கயவர்கள்) அந்தக் காலத்திலேயே உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

கெமர், தாய், லாமோ, மலாய், ஆங்கிலம் உள்ளிட்ட.. நிறைய உலக மொழிகளில் "ராம வரலாறு" மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கிலும் புகழ் பெற்றிருந்தது.

அத்தகைய ஈடு இணையில்லா புகழுக்குச் சொந்தக்காரரான ராமபிரான் அவதரித்த அயோத்தி பூமியில்.. அந்த அவதார புருஷனுக்கு கோவிலெழுப்பி.. காலம் காலமாக நம் முன்னோர்கள் வழிபட்டு வந்தனர்..

*இடைக்காலத்தில்.. நம் பாரத தேசத்தில் மெல்லமெல்ல ஊடுருவிய கொல்லைகார வழிப்பறி கும்பல்.. அக்கிரமத்தின் உச்சமாக.. இஸ்லாமிய மன்னன் பாபருக்கு ராம ஆலயத்தைச் சிதைத்து கல்லறை எழுப்பி.. மசூதி கட்டினர்..*

இந்த அக்கிரமத்தை கண்ணுற்ற ராம பக்தர்கள் பல நூற்றாண்டுகளாக ரத்தக் கண்ணீர் வடித்து வந்தனர்.

"உலகில்.. தர்மம் தாழ்ந்து அதர்மம் தலை தூக்கும் பொழுது நான் மீண்டும் அவதாரம் எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டுவேன்" என சூளுரைத்து சென்ற யுக புருஷரின் திருக்கோவிலுக்கே இப்படியொரு அவமானம் வந்துவிட்டதேயென மனம் மருகிக் கண்ணீர் வடித்தனர்..

சுமார் 600 ஆண்டுகள் தொடர்ந்த.. அசிங்கம் தற்பொழுது துடைத்தெறியப் பட்டுள்ளது.

உலகெங்கும் வாழும் ஹிந்து ஜனங்களின் மனம் குளிரும் விதமாக.. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு.. அவர் அவதரித்த அதே இடத்தில்.. இடையில் ஏற்பட்ட தீட்டை துடைத்து கழுவி.. சுத்தம் செய்து.. பாரத தேசத்தின் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடன்.. அதே அயோத்தி மண்ணில் உலகமே வியக்கும் வண்ணம் ஒரு பேராலயம் எழுப்பப்பட்டு வருகிறது.

*திரு நரேந்திர மோதி என்னும் மாமனிதரின் ஆட்சிக்காலத்தில்.. இந்த வரலாற்று நிகழ்வு நிகழ்ந்தேறியிருக்கிறது.*

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை *(Sri Ram Janmabhoomi Teerth Kshetra)* என்பது 2019 அயோத்தி சிக்கலுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்க 5, பிப்ரவரி, 2020 அன்று நாடாளுமன்றத்தில்.. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ இராமர் கோயில் கட்டுவதற்கு.. ஒரு பட்டியல் சமூக உறுப்பினர் மற்றும் இந்து சமய மடாதிபதிகள் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் கொண்ட *ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை* நிறுவப்படுவதாக அறிவித்தார். இந்த அறக்கட்டளையின் பதிவு அலுவலகம்.. தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் இல்லம் அமைந்த ஆர்- 20, கிரேட்டர் கைலாஷ், புது தில்லி 110048.. என்ற முகவரியில் செயல்படும். இந்த அறக்கட்டளையின் தலைவராக மகந்த் நிருத்திய கோபால் தாஸ், பொதுச் செயலராக சம்பத் ராய் மற்றும் பொருளாராக சுவாமி கோவிந்த்தேவ் கிரி, புனே உள்ளனர். மேலும் இராமர் திருக்கோயில் எழுப்ப.. ராம ஜென்ம பூமியில் 67 ஏக்கர் நிலம் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.

பல ஆயிரம் கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த மகா ஆலயத்தின்.. மொத்த செலவுகளையும் ஏற்க.. பல பெரிய மனிதர்கள் விரும்பிய பொழுதும்..

இந்தப் புண்ணிய கைங்கர்யம்.. பாரத தேசத்தில் வசிக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் சென்றடைய வேண்டுமென்ற உயரிய குறிக்கோளோடு..

பொதுமக்களும் இந்தப் புண்ணிய காரியத்தில் பங்கெடுக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

*பொதுமக்கள் யார் வேண்டுமானாலும்..*

*ரூபாய்..*

*நூறு, ஆயிரம், லட்சம், கோடி.. அவ்வளவு ஏன் பத்து ரூபாய்.. கொடுத்தாலும்.. அதை முறைப்படி வாங்கி.. ரசீது வழங்கி.. .. வங்கியில் செலுத்தி.. ஆலய கட்டுமான நிதி கணக்கில் சேர்த்து.. ஆலய உருவாக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அன்போடு இசைந்துள்ளனர்.*

*இந்த புண்ணிய காரியத்தில் பங்கெடுக்க.. நம் அனைவருக்கும் ஒரு நல்வாய்ப்பு.. நமக்கு முந்திய பல தலைமுறையினருக்கும் கிட்டாத பெரும்பேறு இது. நமக்கு அடுத்து வரும் தலைமுறையினருக்கும் கூட இந்த நல்வாய்ப்பு கிட்டப் போவதில்லை..*

எனவே நம்மாலான நன்கொடைகளை மனமுவந்து காணிக்கையாக்கி.. உலகின் மிக உன்னதமான இந்த ராமபிரான் பேராலயத்தில்.. ஒரு கல்ளேனும் நம் பெயரைச் சொல்லி.. காலா காலத்திற்கும் இருக்க வேண்டும்...

நல்வாய்ப்பைத் தவறவிடாமல் நன்கொடைகளை வாரி வழங்குவோம்.

*ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்.*

 


நன்றி இணையம்


நன்றி இணையம்