காந்தி மட்டுமா கொல்லப்பட்டார்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:52 PM | Best Blogger Tips

 


காந்தி மட்டுமா கொல்லப்பட்டார்

--------------------------------------------------------------------

திரு சாஸ்திரியின் மரணம் அவர் ரஷியா செல்வதற்கு முன்பே திட்டமிடப்பட்ட தாக தெரிகிறது .

எப்பாடு பட்டாலும் சாஸ்திரி அயூப் கானுடன் ஒப்பந்தம் செய்யவேண்டுமென்று இந்தியாவில் சிலர் விரும்பினார்கள்.

நேருவின் புதல்வி இந்திரா பிரதமராவதற்கு ஒரே தடையாக சாஸ்திரி இருந்தார் என்றும் சிலர் நினைத்தார்கள் .

அவர் பயணம் செல்லுமுன் சாஸ்திரி எழுதியதாக ஒரு கடிதம் ,தாஸ்கந்த் ஒப்பந்தத்தை கிலாகித்து மும்பை பத்திரிகை ஒன்றிற்க்கு சென்றது .

பின்னால் அது சாஸ்திரி எழுதவில்லை என்று தெரியவந்தது.

பிரதமர் அலுவலகம் ஏனோ அதை தொடர்ந்து விசாரிக்கவில்லை .

ரஷியாவில் ஒப்பந்தம் முடிந்தபின், இரவு 10:20 க்கு சாஸ்திரி " யாருடனோ" பேசினார் .

தன் மனைவியுடன் பேச விரும்பினார் . தொடர்பு கிடைக்கவில்லை

அவரது வழக்கப்படி, படுக்கும் முன் ஒரு தம்ளர் பால் அருந்தினார் .பால் கொடுத்தது அவரது சமையல்காரன் முகமது ஜேன்.

பால் அருந்தி படுத்தவர் 12 மணிக்கு இரவு உடையுடன் வந்து அவரது மருத்துவரை அழைத்தார் .

மருத்துவரிடம் அறையிலிருந்த பிளாஸ்க் கை காட்டினார் .அதிலிருந்து தண்ணீரை கொடுத்தற்கு அருந்த மறுத்தார் .

இறந்து விட்டார்...


அவரது உடலை ரசிய மருத்துவர்கள் போஸ்ட் மார்ட்டம் செய்ய முயன்றார்கள். இந்திய அதிகாரிகள் அதை அனுமதிக்கவில்லை .

அவருக்கு பால் கொடுத்த சமையல்காரர் முகமது ஜென் மற்றும் உதவியாளர்களை கைது செய்து விசாரித்த ருஷ்ய கே ஜி பின் ..தீடீரென அனைவரையும் விடுவித்து விட்டராக்ள் .

நேருவின் குடும்ப நண்பரும் காஷ்மீரை சேந்தவருமான ரஷ்யா இந்திய தூதர் கவுல்ன் கட்டளைப்படி விடுதலை நடந்தாக சொன்னார்கள்.

அந்த போரில் சரியான அடிவாங்கிய பாக்கிஸ்தானுக்கு , போர் நிறுத்தம் தவிர வேறு சில நிபந்தனைகளையும் விதிக்க சாஸ்திரி முடிவு செய்திருந்ததாகவும், அது மறைமுக கரங்களால் தடுக்கப்பட்டகாகவும் பேச்சு உண்டு.

சாஸ்திரியின் உடலைப்பார்த்த அவர் மனைவி அது நீலநிறமாக முகத்தில் ஏராளமான புள்ளிகளுடன் இருப்பதாக கதறினார் .

அவரது மகனும் அதேயே சொல்ல , இந்திய அதிகாரிகளில் ஒருவர் எங்கிருந்தோ வந்து உடனடியாக சந்தனம் பூசி அதை மறைத்தார் .

இந்திய மருத்துவர் அஜய் குமார் அவரது உடல் vegetable poison கொடுக்கப்பட் டதுபோல உள்ளதாக சொன்னார் .சாஸ்திரியின் உடலில் சில வெட்டு காயங்களையும் கண்டதாக சொன்னார் .

உடலில் சில இடங்களில் தேவை இல்லாத துளைகள் இருந்தாகவும் சொன்னார். அவரது உடல் பிற்பாடு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டால் உண்மைகளை கண்டு பிடிக்கலாமலிருக்க அவரது உடலிலிருந்து முழு இரத்தமும் குறிப்பாக தண்டு வட திரவமும் வெளியேற்றப்பட்டிக்கலாம் அதற்கான துளை அவரது பின் கழுத்திலிருந்தாக அந்த மருத்துவர் அபிப்பிராயப்பட்டார்.

காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டாலும் அது கண்டு கொள்ளப்படவில்லை ,

காங்கிரஸ் தலைவர் ஒருவரின் புகார்

பிற்காலத்தில் அவர் மனைவி லலிதா சாஸ்திரியின் சந்தேகங்கள் புலம்பல்கள்

அட்டலும், ராஜ்நாராயணம் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகள்

என்று எதுவுமே எடுபடவில்லை .

சினிமாவை போல

சாஸ்திரியின் மரணத்தை

சந்தேகிக்கப்பட்டவர்கள்

அவர் அருகே இருந்தவர்கள்

அனைவரும் அசம்பாவிதங்களில் கொல்லப்பட்டார்கள்.

மொத்தத்தில் ஏழை சொல் அம்பலமாகாது போல

எதுவுமே எடுபடவில்லை

அப்புறம்...

முக்கியமான ஓன்று

சாஸ்திரியின் உடல் இந்தியாவிற்கு வந்தபோது அதை ..உடலை சூழ்ந்து இருந்தவர்களின் கூட்டுப்படங்கள் சில பிரசுரமாகின .

அவற்றில் அதிசமாக இந்திராகாந்தி மற்றும் அவருக்குக் நெருக்கமானவர்கள் அத்தனை பேரின் முகத்திலும் சொல்லி வைத்தமாதிரி புன்னகை மிளிர்ந்ததாக படத்துடன் ஒரு writeup வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் செய்தி வெளிவந்ததாம் ..

அந்த புகை படம் கீழே

( சாஸ்திரியுடன் யாரெல்லாம் சென்றார்கள் என்பது உட்பட விபரமான 40 பக்க கட்டுரை சுருக்கி கொடுத்திருக்கிறேன் - மறுபதிவு.)

 

நன்றி இணையம்