இரண்டிற்கும் வித்தியாசம்,

மணக்கால் அய்யம்பேட்டை | 11:08 AM | Best Blogger Tips


 

இரண்டிற்கும் வித்தியாசம்,

வயது மட்டுமே...🌹🌹🌹

35 , வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......

🌺🌺#கிருஷ்ணருக்கும்,🌺🌺

🌺🌺#கண்ணனுக்கும், 🌺🌺

என்ன வித்தியாசம் என்று...,

அதற்கு , நான் சொன்ன பதில்...,.

இரண்டிற்கும்...வயதுதான் வித்தியாசம் என்றேன்.....

சின்ன உதாரணம்...

ஒருநாள், நான் ...

முகம் முழுக்க சோப்பு தேய்த்து குளித்துக் கொண்டிருந்தேன்.

திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை. கண்ணை திறக்க முடியாமல்,

இரண்டு கையாலும்,

என்னை சுற்றி , சுற்றி, தேடினேன்.

அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது.

எனக்கு புரிந்து விட்டது.

செம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று. எனக்கு கண் எரிகிறது என்று அவளுக்கு தெரியவில்லை.

நான் , செம்பை தேடுவதில் அவளுக்கு ஒரு ஆனந்தம்.

இதுதான்....குழந்தையின் குறும்பு.

தற்போது , எனது கண்ணில் ,

ஒரு தூசி விழுந்தாலும்

அவள் கண்ணில் நீர் வடிகிறது.

இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே....

மகாபாரதத்தில், கிருஷ்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது....

கோபிகளின் ஆடைகளை மறைத்து வைத்து... அவர்கள் தேடுவதை கண்டு ஆனந்தப் பட்டான்.

அதே கிருஷ்ணன், கண்ணனாக மாறும் போது.... மேலாடை இன்றி ஒரு பெண் தவிக்கும்போது...மேலாடை கொடுத்து, அவள் மனத்தை காத்து நின்றான்..

இரண்டிற்கும் வித்தியாசம் வயது மட்டுமே.....

கிருஷ்ணன் சிறு பிள்ளையாக இருக்கும்போது....நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான். தாய் கேட்கும் போது...

நான் திருடவே இல்லை என பொய்யும் சொன்னான்...

அதே கிருஷ்ணன், கண்ணனாக மாறும் போது.....திருடுவது கூடாது....பொய் சொல்வது கூடாது என கீதை உபதேசம் செய்தார்....

இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே....

Thilaga Shiva Sivamoorthy

 






நன்றி இணையம்