இதை காப்பாற்ற ஒன்றுபடுவோம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:33 PM | Best Blogger Tips

 



இது ஒரு நீண்ட பதிவு. ஆனால் சிந்தனை தூண்டும் பதிவு. நேரம் கிடைக்கும் போது இதை படித்தால், ஒருவேளை இதில் படித்த சிந்தனையே உங்கள் வாழ்க்கையாக மாறலாம்.


இந்துத்துவா சிந்தனை இல்லாதவர்கள், நடுநிலையாளர்கள் அவசியம் படியுங்கள் :


நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரேவொருஆமாம் ஒரேவொரு உதாரணம் மட்டும்…. அவசியம் படிங்க.


மணிரத்னம் என்றொரு இந்தியப் புகழ் டைரக்டர். மதுரைக்காரர். அவரது சினிமாப் பயணத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.


கன்னத்தில் முத்தமிட்டால் வரை தேசியப் பாதை!

அதன் பிறகு முற்றிலும் வேசியப் பாதை!


அந்த மகா சதியெல்லாம், சாதாரண கண்களுக்குத் தெரியாது! ஒன்னு தேசிய நீரோட்டத்தில் பயணித்துப் பார்க்கணும், இல்லை ஹிந்துத்துவ கண்ணாடி போட்டு பார்க்கணும்! கொஞ்சம் விளக்கமா அவர் படங்களைப் பார்ப்போமா?

மௌன ராகம் : தாலி கட்டிய பின் குடும்ப உறவு பிரியக்கூடாது.

நாயகன் : என்ன தான் மக்களுக்கு உதவி செய்யும் மனநிலையுடன் இருந்தாலும், சட்ட விரோதமா நடந்து கொண்டால், கதைப் படி கூட உயிரோடு இருக்கக் கூடாது! விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்ட இளம் பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கணும்.

அக்னி நட்சத்திரம் : இரண்டு மனைவி என்பது சமூகத்தின் சங்கடமான விசயம். உயிரைக் கொடுத்தாவது லஞ்ச லாவன்யத்தை எதிர்க்கணும்.


அஞ்சலி : பிறப்பிலேயே உடல் பிரச்சினையோடு பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் காப்பாற்றும் அப்பா. அந்த வலியை தன் மனைவி அனுபவித்து விடக் கூடாது என்று மறைக்கும் கணவன். – குடும்ப உறவு

தளபதி : கர்ணன் கதைநட்பு, தாய்பாசம் சொன்னாலும், சட்டத்தை மீறினால் கொல்லப்படணும்.

பாம்பே : மத நல்லிணக்கம்.

இருவர் : எந்த சலசலப்பிற்கும் இடம் கொடுக்காமல் ஒரு வரலாற்றுப் பதிவு.

அலைபாயுதே : விரும்பிய இருவர் வீட்டிற்குத் தெரியாமல் தாலி கட்டிக் கொண்டும் எல்லை மீறாமல் நடக்கின்றனர். கணவன் மனைவிக்குள் ஈகோ கர்வம் இல்லாமல் இருக்க வலியுறுத்திய படம்.

கன்னத்தில் முத்தமிட்டால் : ஈழப் போரினால் ஏற்படும் உறவுச் சிக்கலைப் பற்றி பேசிய படம்.

இந்த காலகட்டத்தில் தான் பிரிவினைவாதிகள் அரசியல் தாண்டி கலாச்சாரத்திலும் கால்பதிக்கத் தொடங்கினர். சினிமாவில் கருப்புப் பணப் புழக்கத்தை விட்டு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தொடங்கினர்.

இதன் பிறகு மனிரத்னம் எடுத்த படங்களைப் பார்ப்போம்.

ஆயுத எழுத்து : அரசியலில் மாணவர்கள் வரணும். புரட்சியாள ஹீரோ ஒரு கிருத்துவர். மைகேல். வில்லன்கள் அரசியல்வாதியும் ஹிந்து! அடியாளும் ஹிந்து! அதுவும் கர்ப்பமாக இருக்கும் மனைவியை விட்டுட்டு ஓடும் ஹிந்து. இன்னொரு ஹீரோ நல்லவன் தான் ஆனால் சுகவாசி. ( மேட்டுக்குடிகள் சப்போர்ட்)

குரு : இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர் குறுக்கு வழியில் வந்தவர் என்று முதலாளித்துவத்தை எதிர்ப்பது.

ராவணன் : ஒட்டு மொத்த ஹிந்துக்களின் ஹீரோவான ராமனை வில்லனாகவும், மாற்றான் மனைவியைத் தேடுபவனை ஹீரோவாகவும் காட்டப்பட்டது. (இதன் பிறகு நான் அவன் படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்)

கடல் : கிருத்துவர்கள் மற்றும் சாத்தான்கள் பற்றிய குறியீட்டுக் கதையாம்.

ஓகே கண்மணி : கல்யாணமெல்லாம் அவசியமேயில்லை. நாய் மாதிரி தேவைப்படும் போதெல்லா புணர்ந்துக்கலாம். வேணாம்னா வேற நாயை நக்கப் போயிடலாம்னு சொல்லியிருந்தாராம்.

காற்றுவெளியிடை : எழவு அந்தக் கதை என்னனு கூட கேட்கல.

செக்க சி.வானம் : ஆங்காங்கே பார்த்தேன். கேங் ஸ்டார்கள் எல்லாரும் ஹிந்துக்கள். ஹீரோ ரசூல் என்ற இஸ்லாமியர். அரவிந்த் சாமி ஒரு கூத்தியாள் வைத்திருப்பான். அங்கே போய் அவன் பொண்டாட்டி ஜோதிகா, .சாமியின் உயிருக்கு ஆபத்தைப் பற்றி மட்டும் வேறு எந்தச் சலனமும் இல்லாமல் பேசுவாள். அதாவது, விரும்பினா எவ கூட வேணும்னாலும் தொடர்பில் இருந்துக்கலாம் அதையெல்லாம் ரொம்ப மெச்சூரான பொண்டாட்டிகாரி கண்டுக்க மாட்டா. பின், அவளே, ,சாமி வைப்பாட்டி கதையைச் சிரிச்சுக்கிட்டே சொல்வாள். கேங்க் ஸ்டாரில் ஓரளவு நல்லவன் கிருத்துவப் பெண்ணை கிருத்துவ முறைப்படி கல்யாணம் பண்ணிக்குவான். அவளையும் கொன்னுடுவான்க. இன்னொருத்தி ஈழத்துப் பெண், அவளையும் அநியாயமாக போதைப் பொருள் கடத்தலில் மாட்டி விட்டுடுவானுக. ( எவ்வளவு நுணுக்கமா காட்சியமைக்கிறார்கள் பாருங்க)

கதைகள் எல்லாம் ஒரே வரியில் கோடிட்டு தான் காட்டியிருக்கிறேன். உள்ளே ஒவ்வொரு ஃப்ரேமும் கலாச்சாரத்திற்கு எதிராக பார்ப்பவர்கள் மனதை உளவியல்ரீதியாக மாற்ற முயற்சிக்கப்பட்டது தெளிவாகத் தெரியும்.

பொறுங்க பொறுங்கஇதெல்லாம் மணிரத்னம் எதார்த்தமா பண்ணியது. ஃபாண்டஸி சினிமா என்றெல்லாம் விளக்குமாறு எடுத்துட்டு வராதீங்க!

2002லிருந்து, ஏழு படங்கள் அதுவும் பன்மொழிப் படங்கள். ஒரு படத்திற்கு மனிரத்னம் சம்பளம் உட்பட ஐம்பது கோடி செலவாயிருக்கும். தோராயமாக ஐநூறு கோடிகள் செலவாயிருக்கும். எல்லாமே மனிரத்தினத்தின் சொந்தப் படங்கள். வசூலில் எல்லாமே மண்ணைக் கவ்வியது தான். இருந்தாலும், தொடர்ந்து எந்தச் சிரமமும் இல்லாமல் படம் எடுக்கிறார். அவ்வளவு பணம் எங்கேயிருந்து வந்தது? (இடையில் மகனை வைத்து இத்தாலியில் ஒரு நாடகம் நடத்தினானுக. )

ஒரு சினிமா டைரக்டருக்கே இத்தனை செலவு செய்து கலாச்சாரச் சீரழிவுக்கு உழைக்கிறார்களே…? அப்ப ஒட்டு மொத்த சினிமாத் தொழிற்சாலைக்கும் எவ்வளவு இறக்கியிருப்பார்கள்?

கேவலம் சினிமாவுக்கே அவ்வளவு என்றால், நிர்வாகத் துறைக்குள் எத்தனை ஐந்தாம் படை ஆட்களை வைத்திருப்பார்கள்?

நிர்வாக அலுவலகத்திற்குள்ளேயே அப்படின்னா, காவல்துறைக்குள்ளேயும், நீதித்துறைக்கு உள்ளேயும் எத்தனை ஆயிரம் கோடிகள் விதைத்திருப்பார்கள் ?

வெளுத்ததெல்லாம் பாலுனு நினைக்கிற அப்பாவி மக்கள் தான் அவன்களுடைய டார்கெட்.

இனி, ஹிந்துத்துவா ஆட்கள் அவசியம் படிங்க :

இப்படி கட்சி ஆட்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நீக்கமற மறைவாக நிறைந்திருக்கும் இந்தச் சூழலில் தான், நாம் கேள்வி கேட்கிறோம். இதெல்லாம் மோடிக்குத் தெரியாதா? ஏன் மனிரத்தினத்தின் பிடறியில் அடித்து ஜெயிலில் போடல? இந்து அமைப்புகள் ஏன் இன்னும் சினிமாக்காரர்களை அடித்து உதைக்கவில்லை என்று?

தடுக்க வேண்டியது மனிரத்தினம் போன்றவர்களை அல்ல! இதற்கு மூலகாரணமாக ஏழெட்டு படிநிலைகளுக்கு மேலேயிருக்கும் அந்த அமைப்பை/ அந்த நிறுவனத்தை / அந்த மனிதனை. அதை உடனே செய்ய மோடி என்ற ஒற்றை ஆளால் மட்டும் முடியாது. விழிப்புணர்வு கொண்ட மக்கள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படணும்.

நம்ம மூதாதையர் கட்டிய கோவில்களில் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது வாங்க ஒன்னா போய் தட்டிக் கேட்போம்னு ஒரு வருடத்திற்கு மேலாக ஹெச். ராஜா ஜீ கத்திக்கிட்டு தான் இருக்கார். நாம எத்தனை பேர் அவருடன் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்? அதிலும் ஆயிரம் வியாக்காணம் நொட்டைகள் சொல்லிப் பதிவு போட்டுட்டு சிரிச்சுட்டுப் போயிடுறோம். ஆனால், மோடி மட்டும் தெலுங்குப் பட அரசியல் ஹீரோக்கள் மாதிரி ரெண்டு மணி நேரத்தில் எல்லாத்தையும் மாத்திடணும். இல்லாட்டி துரோகின்னு வாய் கூசாம திட்டி எழுதுவோம்.

இத்தனை வருடங்களாகச் சீரழித்தவர்களைத் தேர்ந்தெடுத்தவர்களும் நாம் தான். அவர்களைத் தட்டிக் கேட்கத் துப்பில்லாதவர்களும் நாம் தான். இன்னிக்கு ஒரே மருந்தில் எல்லா வியாதிக்கும் மருந்து கேட்பவர்களும் நாம் தான்.

குறிப்பு : தேவையற்ற விதண்டாவாத கமாண்டு வேண்டாம்

நம் நாடு

நம் கோவில்

நம் கலாச்சாரம்

நம் பாரம்பர்யம்

நம் வரலாறு

இதை காப்பாற்ற

ஒன்றுபடுவோம்

 

நன்றி இணையம்