நெய் குடோன், கோபலண்ணே.. நல்லாயிருக்கறீங்களா? வியாபாரம் எப்படி போகுது?
எதோ இருக்கே தம்பி... சபரிமலை சீசன் அவுட் வியாபாரம் படுத்துடுச்சு..
அப்ப ஐயப்ப வழிபாடு குறைஞ்சா வியாபாரம் பாதிக்குமாணே?
தம்பி ஐயப்ப வழிபாடு மூலமா, கோடிக்கணக்கான தேங்காய், கோடிக்கணக்கான லிட்டர் நெய், இருமுடிக்கு தேவையான பூஜை பொருள், ஊதுபத்தி, சாம்பிராணி, சூடம், பூ, மாலை என ஏராளமான விவசாயம் சார்ந்த பொருட்கள், அதை சார்ந்த விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்படறாங்க ப்பா...
இந்த ஐயப்ப சீசனை நம்பி கல்யாணத்தை வச்சிருக்கிற பெற்றோர்கள் எத்தனை பேர்,
வீடுகட்ட, ஆஸ்பத்திரி செலவு, படிப்பு, வாங்குன கடனை திருப்பி கொடுக்கனும்ங்கறவீங்க,
இந்த மாதிரி எத்தனையோ பேர் எத்தனையோ தேவைகளுக்கு
இதை நம்பி இருக்காங்க பா...
பவானி முதல் பழனிவரை, தமிழகத்தில் இருக்கற எல்லா கோவில்களிலும் ஐயப்ப வழிபாட்டை நம்பி வியாபாரிகள் இருக்காங்க...
அண்ணே... அப்ப ஐயப்பனுக்கு ஒரு பாதிப்புனா, நீங்க எல்லாரும் தான முதலாளா வந்து போராடனும்.
ஏன்ணே போனவருஷம் சபரிமலை பிரச்சினையின் போது நீங்களெல்லாம் அதை எதிர்த்து போராட வரவேயில்லை?
கரெக்ட் தம்பி நீ சொல்றது. நாங்கதான் முதலாளா வந்திருக்கனும், தப்புதான் தம்பி...
அண்ணே... ஐயப்ப வழிபாடு மட்டுமல்ல நம்ம இந்துமத வழிபாடு முறை, பூஜை முறை, திருவிழாக்கள், பண்டிகைகள், விரதங்கள், இது அனைத்தையும் நம்பித்தான் பல சிறுகுறு வியாபாரிகள், விவசாய பெருமக்கள், கலைநிகழ்ச்சி நடத்துகிற கலைஞர்கள், மேளதாளம் வித்வான்கள், பந்தல் தோரணம் கட்டுகிற தொழிலாளிகள், மைக்செட் வேலை செய்பவர்கள், இந்த மாதிரி ஏராளமான தொழிலாளிகளுக்கும் அவர்கள் மூலமாக பல ஏழை எளிய மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுபவர்கள் எண்ணற்றோர்...
இந்துமத நம்பிக்கைகளுக்கு எதிராகவோ, இந்துமத விரோத செயல்களுக்கு எதிராகவோ யார் பேசினாலும், நடந்து கொண்டாலும் முதல் எதிர்ப்பு குரல் உங்ககிட்ட தான இருந்து வரனும்.
தம்பி... இந்துமதம்னு சொல்லாதீங்க, நம்ம மதம்னு சொல்லுங்க... இனி எந்த நிகழ்ச்சினாலும் சொல்லுங்க தம்பி கண்டிப்பா நாங்க வர்றோம்..
நன்றி Saktheswaran