*கதை மாற்றத்தை தரும்*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:40 | Best Blogger Tips

 


*கதை மாற்றத்தை தரும்*

வணக்கம் கதை வாசிக்கும் உறவுகளே.

*சில நியதிகளும், கட்டுப்பாடுகளும்..*

குட்டிப் பையன் தாம்ஸன், ஒரு நாள் அப்பாவோடு தோட்டத்தை சுற்றிப் பார்க்கக் கிளம்பினான். சிறிது நேர விளையாட்டுக்குப் பின் தான் அவன் ஒரு விஷயத்தை கவனித்தான்.

அங்கிருந்த மாடுகள் கவணையில், ஒரு நீளமில்லாத கயிற்றைக் கொண்டு கட்டப் பட்டிருந்தன. அவை, உள்ளே கொட்டப்பட்டிருந்த புற்களை(Grass) சிரமப்பட்டு உண்ணுவதாய் அவனுக்குத் தோன்றியது.

" ஏன், இந்த மாதிரி நெருக்கமா மாட்டைக் கட்டி வச்சிருக்கீங்களே, அதுங்க பாவம் இல்லையா? உங்க தோட்டத்துல தான் இவ்வளோ புல் இருக்குதே. இங்கேயே ஒரு பெரிய கயிறா எடுத்து ஒரு மரத்துல கட்டி வைக்கக் கூடாதா? அதுங்க கொஞ்சம் Free யா சாப்பிடுமே " என்றான்.

அவர் சிரித்தபடி, " தம்பிக்காக ஒரு மாட்டை அப்படியே கட்டி வைக்கிறேன். கொஞ்ச நேரம் என்னாகுதுன்னு தான் பாப்பமே " என்று சொல்லிய படி ஒரு மாட்டை மட்டும் அவிழ்த்துக் கொல்லையில் இருந்த மரத்தில், ஒரு நீளமான கயிற்றில் கட்டி வைத்தார்.

வந்தவுடனேயே தாம்ஸன் கொல்லைக்குத் தான் ஓடினான். அங்கே மாடு இருந்த கோலம் அவனை அதிர வைத்து விட்டது. மாடு புல் மேயும் சுவாரஸ்யத்தில் கயிற்றுடன் மரத்தையே சுற்றிச் சுற்றி வந்து கயிறு முழுவதும் மரத்தில் சுற்றிக் கொண்டு விட்டது. இப்போது அடுத்த அடி கூட எடுத்து வைக்க முடியாமல் , மூச்சுத் திணறிய படி தவித்துக் கொண்டிருந்தது.

தோட்டக்காரர் சொன்னார், " கயிறு ரொம்ப நீளமா இருந்தா, இதுங்க இப்படித் தான் கண்ணு பண்ணும். சில நேரத்துல உயிருக்கே கூட ஆபத்தாயிடும் " சொல்லிக் கொண்டே மாட்டை அவிழ்த்துக் கொட்டிலில் கட்டினார்.

சின்னக் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பது சிறையல்ல, பாதுகாப்பு என்பது தாம்ஸனுக்குப் புரிந்தது .



*சில நேரங்களில் அதிக பட்சமான சுதந்திரம் ஆபத்தில் முடிவதுண்டு. சில நியதிகளும், கட்டுப்பாடுகளும் நம்மைக் காத்துக் கொள்ளவே ஏற்படுத்தப் பட்டவை என்று உணர்ந்து கொள்.*

*நன்றி.*

நாளை ஒரு கதையுடன்

சந்திப்போம்.

 

நன்றி இணையம்