ஒரே தேசம் ஒரே உணர்வு திரு வேலூர் எம்.இப்ராஹிம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:39 | Best Blogger Tips

ஒரே தேசம் ஒரே உணர்வு



திரு வேலூர் எம்.இப்ராஹிம் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.


எதிலும் தவறு கண்டுபிடிக்கமுடியாத அவரது கருத்துகளுக்கு என் பாராட்டுகள்.

பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிற சில புதியவர்கள் சில விஷயங்களில் தெளிவு இல்லாமல் பேசியிருக்கலாம். அதைவைத்து பாரதிய ஜனதா கட்சியின் கருத்து இதுதான் என்ற முடிவுக்கு வருவது சரியல்ல. ‘நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்என்ற பாரதியின் பாடலுக்கு விளக்கம் சொல்லியபோது, ‘நமதுஎன்பதன் பொருள் இந்த தேசத்தில் வாழும் அனைவரும் என விளக்கம் சொல்லியிருக்கிறேன்.

இந்த தேசத்தில் பூர்விகமாக வாழும் இஸ்லாமியர்களோ கிருத்துவர்களோ அவர்கள் பரம்பரையால், பண்பாட்டால் உடலில் ஓடும் ரத்தத்தால் ஹிந்துக்களை ஒத்தவர்களே. இதை வேலூர் எம்.இப்ராஹிம் அவர்கள் தெளிவுபடப் பேசியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.



மதம் தான் ஒருவரை நல்லவழிப்படுத்துகிறது; மத நம்பிக்கை இல்லாதவர்களைவிட மத நம்பிக்கை உள்ளவர்களே மனிதாபிமானம், சமூக அக்கறை ஆகியவற்றுடன் இருக்கிறார்கள். எனவே பாஜக தன்னை ஒரு மதவாதக் கட்சி என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்கிறார் ஓரிடத்தில். மாறாக நாம் ஒரு தேசியவாதி என்று மார்தட்டிக்கொள்ளச் சொல்வதுதான் சரியானது.

காஃபிர் என்பது கெட்ட வார்த்தையொன்றும் இல்லை. நம் நாட்டில் இறை நம்பிக்கை இல்லாதவரை நாத்திகவாதி என்பார்கள் அல்லவா அப்படியான வார்த்தைதான்.

இந்துக்கள் கடவுளை மறுக்கக் கூடியவர்களா? அவர்களுக்கு அவர்களுக்கான கடவுள் நம்பிக்கை இருக்கிறது. எனவே அவர்கள் காஃபிர்கள் பட்டியலில் வரமாட்டார்கள். கடவுளை மறுக்கும் நாத்திகவாதிகள்தான் காஃபிர்கள். கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்... கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி; கடவுளைப் பிரசாரம் செய்பவன் அயோக்கியன் என்று யார் சொல்கிறார்களோ அவர்கள்தான் காஃபிர்கள்என்று புதிய விளக்கம் தந்திருக்கிறார். இது வரவேற்கத் தக்கது. இதை ஏனைய முஸ்லிம்களும் ஏற்க வேண்டும். காரணம், மதத் தீவிரவாதிகள் காஃபிருக்கு வேறு விளக்கம் தருவதால், ஒட்டுமொத்த மதத்தினர் மீது சந்தேகம் கொள்ளவைக்கிறது.

ஒரு காலத்தில் சம்ஸ்கிருதம் கற்பதற்கு எங்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது என்று பிரசாரம் செய்தவர்கள், இப்போது எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்போது எதிர்ப்பதேன் என்கிற வாதம் சிறப்பானது.

நீட் தேர்வு, டாஸ்மாக் கடைதிறப்பு, அகதிகள் குடியுரிமைச் சட்டம், அயோத்தி போன்ற விஷயங்களிலும் மிகத் தெளிவான கருத்தை முன்வைத்திருக்கிறார் ஆசிரியர்.

இறைவன் அவருக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும்.

திரு வேலூர் எம்.இப்ராஹிம் அவர்களின் தொண்டு வாழ்க... வளர்க.

அன்புடன்

இல.கணேசன்.

 

நன்றி இணையம்