‘அல்வா’ கொடுப்பது

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:32 | Best Blogger Tips
Image result for ‘அல்வா’ கொடுப்பதுRelated image
புத்திசாலித்தனமாகவும், நூதனமாகவும் ஏமாற்றுவதைஅல்வாகொடுப்பது என்பார்கள்.
சிலர் பக்கத்தில் இருப்பவர்களுக்குஅல்வாகொடுப்பார்கள். சிலர் சர்வதேச அளவில்அல்வாகொடுத்துவிட்டு அப்பாவியாய் நடமாடுவார்கள்.
அப்படி உலகத்தையே முட்டாளாக்கிய சிலருடைய திறமையைப் பார்ப்போம்.
*ஹிட்லரின் டைரி:*
கோன்ராட் ஹூஜா என்பவரிடம், குட்டிக் குட்டியாய் 60 புத்தகங்கள் இருந்தது. ‘இந்தப் புத்தகங்களை தன் கைப்பட எழுதியது ஹிட்லர் என்றார் கோன்ராட். ‘ஆஹா வந்தாள் மகாலட்சுமிஎன, இந்த புத்தகங்களை 6 மில்லியன் டாலர்கள் அள்ளிக் கொடுத்து வாங்கியதுடெர் ஸ்டெயின்எனும் ஜெர்மன் பத்திரிகை.
இந்த நூற்றாண்டின் மாபெரும் கண்டுபிடிப்பு இதுஎன 1983 ஏப்ரல் 22–ம் நாள், அந்த நாளிதழ் குதூகலத்துடன் செய்தியையும் வெளியிட்டது.
இரண்டே வாரங்கள் தான், மேட்டரைப் படித்தவர்களுக்கு சந்தேகம் வர, நூல்களை பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். அப்போது தான் தெரிந்தது கோன்ராட் கொடுத்த ஆறு மில்லியன் டாலர்அல்வா’! நவீன காகிதத்தில், லேட்டஸ்ட் பேனா கொண்டு, தப்புத் தப்பாக எழுதிய புத்தகத்தை உண்மையென்று நம்பியரொம்ப நல்லவரானடெர் ஸ்டெயின் பத்திரிகைடெரர்ஆனது. அப்புறம் என்ன? கில்லாடி கோன்ராட் 42 மாதம் ஜெயிலுக்குப் போகவேண்டியதாயிற்று!
*ஏரியில் ஒரு பிரம்மாண்டம்:*
1934–ம் ஆண்டு ஸ்காட்லாந்து பகுதியிலுள்ள லாச் நிஸ் எனும் ஏரியில் ஒரு மாபெரும் உருவம் தலையை நீட்டிக் கொண்டு நீந்தியது. ராபர்ட் வில்சன் எனும் மரியாதைக்குரிய ராணுவ வீரர் அதைக்கிளிக்கினார். இந்த உருவத்துக்குசார்ஜன்ஸ் போட்டோஎன்று பெயரிட்டார்கள்.
உலகெங்கும் பரபரப்பைப் பற்ற வைத்த இந்த போட்டோவை நம்பி பலர் ஆராய்ச்சியில் குதித்தனர். திரைப்படங்கள் எடுத்தனர், நூல்கள் எழுதித் தள்ளினர். இது ராபர்ட் வில்சன் உலகுக்குக் கொடுத்த ஒரு ராட்சத அல்வா என்பது 60 வருடங்கள் வரை யாருக்கும் தெரியவில்லை.
1994–ல் மரணப் படுக்கையில் முனகிக் கொண்டிருந்த 90 வயதான கிறிஸ்டியன் ஸ்பர்லிங் என்பவர் தான்இது ஒரு டுபாக்கூர் போட்டோஎன்பதைப் போட்டு உடைத்தார். தானும் வில்சனும் சேர்ந்து இந்த தில்லாலங்கடி வேலையைச் செய்ததாக மரண வாக்கு மூலம் கொடுத்தார் அவர்.
வில்சனுக்குபிரம்மாண்டங்களின் மீது பிரியம் அதிகம். ஒரு முறை ஒரு ராட்சத மனிதனின் காலடித் தடத்தைக் கண்டு பிடித்தேன்என உற்சாகமாய் குதித்திருக்கிறார். வந்து பார்த்தவர்கள், ‘இது நீர்யானையோட காலடிப்பாஎன நக்கலடித்தார்களாம். அந்த கடுப்பில் எல்லாரையும் முட்டாளாக்க நினைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இந்த வில்சன்!.
*ஏலியன் போஸ்ட்மார்ட்டம்:*
1947–ல் அமெரிக்காவிலுள்ள நியூ மெக்ஸிகோவில், ரோஸ்வெல் என்னுமிடத்தில் உடைந்து விழுந்தது ஒரு பறக்கும் தட்டு. அங்கே பல வித்தியாசமான பொருட்கள், வேற்றுக்கிரக வாசிகளின் உடல்கள் கிடைத்தன என்றெல்லாம் பரபரப்பு கிளம்பியது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு 1995–ல் ரே சாண்டிலி என்பவர் ஒரு டாக்குமெண்டரியை வெளியிட்டார். 1947–ல் கிடைத்த ஒரு ஏலியனின் போஸ்ட்மார்ட்டம் இது என ஒரு ஏலியனைக் காட்டினார்.
உலகெங்கும் சரசரவென தகவல் பரவரேஒரே நாளில் உலகப் புகழ் பெற்றார். ஆனால் பாவம் அது நீடிக்கவில்லை. 1947–ல் எடுத்த படம் என அவர் காட்டிய வீடியோவின் பின்னணியில், 1967–க்குப் பிறகு வந்த சில விஷயங்கள் தெரிய, ரே மாட்டிக் கொண்டார்.
*பில்ட்டவும் மண்டை ஓடு!:*
1912–ல் கண்டு பிடிக்கப்பட்டபில்ட்டவுன் மனிதனின் மண்டை ஓடுஉலகப்புகழ் பெற்றது. இங்கிலாந்திலுள்ள பில்ட்டவும் எனுமிடத்தில் கிடைத்ததால் இதற்கு இந்த பெயர் வந்தது. இது ஆதி மனிதனுடைய எலும்புக் கூடு என சிலாகித்தனர் பலர்.
குரங்கிலிருந்து மனிதன் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்தான் என்பதை அறிய உலகிற்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு என கொண்டாடினார்கள்.
நாற்பது வருடங்கள் வரை இது ஒரு அல்வா ஓடு என்பது யாருக்கும் தெரியவில்லை.
1953–ல் விஷயம் வெளியே வர அப்செட் ஆகிப் போனது கூட்டம். இந்த மண்டையோட்டின் மேல் பாகம் சுமார் 500 வருடங்களுக்கு முந்தைய மனிதனுடையது. கீழ்த் தாடை ஒராங்குட்டான் எனும் மனிதக்குரங்கினுடையது. இரண்டையும் சாமர்த்தியமாக இணைத்து ஒரு மண்டை ஓடை உண்டாக்கியிருக்கிறார்கள். இப்படி செம பிரில்லியண்டாக உலகுக்கே அல்வா கொடுத்தவன் யார் என்பது மட்டும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை!
*பீஜீ கடல் கன்னி:*
நியூயார்க் சிட்டியில் நடந்த பி.டி. பர்னம் என்பவருடைய சர்க்கஸ் சட்டென உலகப் புகழ் பெற்றது. காரணம் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பீஜீ கடல் கன்னி. வால் பாகம் மீன், தலைப்பாகம் மனிதன் என திகிலாய் இருந்தது உருவம். மோசஸ் கிம்பல் என்பவரிடம் அகப்பட்ட இந்த கடல் கன்னியை, வாரம் 12.5 டாலர்கள் எனும் கணக்கில் வாடகைக்கு வாங்கியிருந்தார் பி.டி.பர்னம்.
ரொம்ப காலத்துக்கு அப்புறம் தான் தெரிந்தது இது ஒரு பலே மோசடி என்பது!. உண்மையில் இதன் வால் பகுதி ஒரு பெரிய மீனுடையது. கழுத்து மற்றும் உடல் ஒரங்கொட்டான் எனும் மனிதக் குரங்கிற்குச் சொந்தமானது. தலை ஒரு குரங்கினுடையது. இப்படி மூன்றையும் சேர்த்துக்கட்டி காசு பார்த்திருக்கிறார் கில்லாடி கிம்பல்!
* டுர்க்:*
ஆஸ்திரியாவிலுள்ள ஷோன்பர்ன் அரண்மனையில் 1770–ல் டுர்க்காட்சிக்கு வந்தபோது எல்லோரும் வியந்து போனார்கள். உலகின் முதல்செஸ் விளையாடும் மெஷின்இது. ‘தைரியம் இருந்தால் எனது மெஷினுடன் விளையாடி ஜெயிக்கலாம்என சாவால் விட்டார் இதை உருவாக்கிய கெம்ப்லீனின். பலர் விளையாட வந்தார்கள். தோற்றுப் போனார்கள். தோற்றுப் போனவர்கள் பட்டியலில் ஆளானப்பட்ட நெப்போலியன், பெஞ்சமின் பிராங்கிளின் எல்லாம் அடக்கம்.
ஒரு மேஜை போன்ற இந்த மிஷினில் ஒரு பொம்மை உட்கார்ந்திருக்கும். அது தான் காய்களை நகர்த்தும். விளையாட ஆரம்பிக்கும் முன் மேஜையின் கதவுகளையெல்லாம் பார்வையாளர்களுக்குத் திறந்து காட்டுவார் கெம்ப்லீன். உள்ளே யாரும் இல்லை என உறுதிப்படுத்த! ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் தான் தெரிந்தது உள்ளே ஒரு செஸ் கில்லாடி உட்கார்ந்துவிளையாடியசமாச்சாரம். பலர் சந்தேகப்பட்டாலும் சுமார் 84 ஆண்டு காலம் உலகை முட்டாளாக்கியது இந்த டுர்க்.
*கோ ஆஸ்க் அலீஸ்:*
அமெரிக்காவில் இந்தப் புத்தகம் வெளியானபோது மிகப்பெரிய பரபரப்பு எல்லோரையும் தொற்றிக் கொண்டது. விழுந்தடித்துக் கொண்டு இந்த புத்தகத்தை வாங்கி வாசித்தவர்களெல்லாம் உச்சு கொட்டினார்கள். காரணம் இல்லாமல் இல்லை.
இந்த நூல் போதைக்கும், பாலியலுக்கும், மன அழுத்தத்துக்கும் அடிமையான ஒரு பதின் வயதுப் பெண்ணின் கதை. வாழ்க்கையின் வலிகளைச் சுமந்த அந்த பெண் கடைசியில் அளவுக்கு அதிகமான போதையைச் சாப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டு இறந்து போனாள் என்பதே கதை.
உண்மைக் கதை எனும் பெயரில் வெளியானதால் இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 1971–ம் ஆண்டு வெளியான இந்த நூல் உண்மை என்றே எல்லோரும் நம்பினார்கள். ஆனால் இது ஒரு டுபாக்கூர் நாவல் என்பதும், இதை எழுதியவரின் கற்பனையில் உதித்தது என்பதும் பல ஆண்டுகளுக்குப் பின்பு தான் தெரிய வந்தது.
*முதல் உலகப் போர் புகைப்படங்கள்:*
நான் ராணுவத்தில் பணிபுரிந்த போது எடுத்த புகைப்படங்கள் இவை. என்னுடைய பெயரை வெளியிட முடியாது. காரணம் இந்த புகைப்படங்களை எடுக்க ஏராளமான ராணுவ விதிமுறைகளை மீறியிருக்கிறேன். ஆள் அடையாளம் தெரிஞ்சா தூக்குல போட்டுடுவாங்க. இந்த புகைப்படங்களை உயிரைப் பணயம் வெச்சு எடுத்திருக்கேன்...’ இப்படி ஒரு அடைமொழியோடு பல புகைப்படங்கள் 1933–ம் ஆண்டு பிரசுரமானது.
பார்த்தவர்களெல்லாம் மிரண்டு போனார்கள். இவ்வளவு தத்ரூபமாக, இவ்வளவு தெளிவாக, இவ்வளவு அபூர்வமான புகைப்படங்களை யாருமே எடுத்ததில்லை. அதுவும் வானத்தில் நடக்கும் விமானச் சண்டை மிரட்டல் ரகம் என விமர்சித்துத் தள்ளினார்கள். இதை எடுத்தவர் பெயர் ஆர்ச்சர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புகைப்படங்களை கிளாடிஸ் எனும் பெண் 20 ஆயிரம் டாலர்களுக்கு விற்றார்.
இந்த போட்டோ எல்லாம் டுபாக்கூர் என்பதை 50 வருடங்களுக்குப் பிறகு தான் கண்டுபிடித்தார்கள். கொஞ்ச நாள் ராணுவத்தில் பணி புரிந்த ஆர்ச்சர் பின்னர் சினிமா பக்கம் போனார். சினிமாவுக்கு செட் அமைக்கும் வேலை அவருக்கு. இப்போது புரிந்திருக்குமே இந்த புகைப்படங்கள் எப்படி உருவாயின என்பது?! அந்த புகைப்படங்களை விற்ற கிளாடிஸ் வேறு யாருமல்ல, இவருடைய மனைவி தான்!
*கிரைனி பறக்கும் தட்டு:*
வானத்தில் ஒரு பறக்கும் ஏலியன் தட்டு. அதை பட்டென புகைப்படம் எடுத்தார் ரஸல் என்பவர். ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றார். எடுத்த படங்களிலேயே மிக நேர்த்தியாக வந்த பறக்கும் தட்டு இது தான். ஏலியன் கைக்கெட்டும் தூரத்தில் வந்திருப்பது இது தான் முதல்முறை என கொண்டாடினார்கள்.
தங்களிடமிருந்த கேமராக்களை எல்லாம் தூசுதட்டிக் கொண்டு மக்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார்கள். பல வருடங்களுக்குப் பிறகு தான் அது ஒரு போலியான புகைப்படம் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. ரஸலின் நண்பர் ஒருவர் தொப்பியை எடுத்து வானத்தில் வீச, அதை இவர் கிளிக்க, ஏலியன் கதை உருவானதாம்.
*இறந்து வாழ்ந்தவர்:*
ஆர்தர் பென்னட் என்பவர் கடற்படையில் இருந்தவர். பாலியல் தவறுகளில் ஈடுபட்டார் எனும் காரணம் காட்டி வேலையை விட்டு கழற்றி விட்டார்கள். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. திடீரென ஒரு நாள் அவருடைய வீடு தீப்பிடித்து எரிய உடல் கருகி அவர் இறந்து போனார்.
உண்மையில் அவர் இறக்கவில்லை, தனது மரணத்தை தானே போலியாக உருவாக்கினார். குடும்பத்தினருக்கும் தெரியும். ஆனாலும் கண்ணைக் கசக்கிக் கொண்டு அவருடைய இறுதிச் சடங்கை நடத்தி முடித்தார்கள். அவர் தனது அடையாளத்தை மாற்றி, கான்டாக்ட் லென்ஸ் போட்டு, முடியை மாற்றி புது மனுஷனாக மாறினார்.
வாழ்க்கை சுமுகமாக போய்க்கொண்டிருந்தது.
அவருக்கு உள்ளே இருந்த மிருகம் வெளியே வந்தது. மீண்டும் ஒரு பாலியல் புகாரில் சிக்கினார். அவரது கைரேகை எடுத்தவர்கள் மிரண்டு போனார்கள். அப்படியே ஆர்தர் பென்னட்டோடு ஒத்துப் போனது. பிறகு தான் அவருடைய அல்வாக் கதை வெட்ட வெளிச்சமானது.

 நன்றி இணையம்