மார்கழி பெருமாளுக்கு உகந்த மாதம் அப்படியென்றால் சிவபெருமானுக்கு கார்த்திகை மாதம்தான் உகந்தமாதம்.
திங்கள் கிழமையை சோமன் என்று கூறுவர் அந்த சோமன் கிழமையில் சிவபெருமானை நினைத்து கார்த்திகை மாதம் விரத இருப்பதைதான் கார்த்திகை சோமவாரம் என்பார்கள்.
இந்த விரதத்தைக் கார்த்திகை மாத முதல் சோம (திங்கட்கிழமையில்) வாரத்தில் தொடங்கிக் கடைசி சோமவாரத்தன்று (திங்கட்கிழமையில்) முடிக்க வேண்டும்.
விரத நாளன்று காலையில் புனித நீராடி, தினசரிக் கடமைகளை முடித்த பிறகு சிவ பெருமானையும்,பார்வதியையும் மனமுருகி வணங்க வேண்டும்.
அன்றைய தினத்தில் காலையில் வீட்டில் தீபம் ஏற்றிச் சிவனை நினைத்து விரதம் இருந்து ஒரு வேளை சிறிதளவே உணவு எடுத்து, இரவில் உறங்கி மறுநாள் நீராடி விரதத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
இந்த விரதம் மிக அற்புதமான பலன்களை கொடுக்கக்கூடியது இந்த விரதம் இருப்பதால் தோல்வியாதிகள் குணமாகும்,நம்முடைய அனைத்து துன்பங்கள் விலகும்,வம்சம் தழைக்கும்.
கார்த்திகை மாத திங்களில் ஒரு கிழமையாவது சிவாலயங்களில் அருளும் ஸ்ரீஈஸ்வர மூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.