கோயில்களில் வழிபடும் போது சிலர் நந்தியின் காதில் வேண்டுகோளைச் சொல்லி வழிபடுவர், இவ்வாறு சொல்லலாமா? மாலை 4,30- 6 மணிவரையிலான வேளைக்கு பிரதோஷ காலம் என்று பெயர். இதனை நித்ய பிரதோஷம் என்பர். தேய்பிறை அல்லது வளர்பிறையில் திரயோதசி கூடிய மாலை வேளையில் எல்லாரும் விரதம் இருப்பர். இந்த பிரதோஷ வேளையில் சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிவதாக ஐதீகம். இதனால், நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவனை மனக்கண்ணால் தரிசிப்பது விசேஷம். நந்தியின் கொம்புக்கிடையில் சிவனை மனதால் நினைத்து தூரத்தில் இருந்து வணங்க வேண்டுமே தவிர, நந்தியின் கொம்பில் முகத்தை வைத்துப் பார்ப்பது, காதில் வேண்டுகோளைச் சொல்வது போன்றவை தவறு.
சர்வம் சிவார்ப்பணம் !