பாராதைராய்டு நாள மில்லா சுரப்பிகளில் ஏற்படும் நோய்கள் பற்றிய தகவல்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:54 | Best Blogger Tips
பாராதைராய்டு நாள மில்லா சுரப்பிகளில் ஏற்படும் நோய்கள் பற்றிய தகவல்கள்:-

பாராதைராய்டு நாள மில்லா சுரப்பி (Para Thyroid) ( Para Thyroid Gland) இது ஒரு சிறிய நாளமில்லா சுரப்பிகள். நமது உடலில் மொத்தம் நான்கு பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை (Pth) சுரக்கின்றது. 

இந்த ஹார்மோன்கள் நமது உடலின் இரத்தில்(Calcium) கால்சியம் அளவினை கட்டுப்படுத்துகின்றது. சரியான அளவு கால்சியம் (Calcium) இரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியம், இதில் சிறுமாற்றங்கள் ஏற்பட்டாலும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம்(Culcium)  மிகவும் அவசியமானது. நமது உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில் தான் உள்ளது. பாராதைராய்டு நோயானது 750 பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு உள்ளது. 

பொதுவாக நடுத்தர வயது உள்ளவர்களையும், பெரும்பாலும் பெண்களை யுமே இந்த நோய் அதிகமாக பாதிக்கின்றது. I Hyper Para Thyroidism(Hyper Parathyroidism) இந்த நோய் பாராதை ராய்டு ஹார்மோன் (PTH) அளவு இரத்தத்தில் அதிகமாக உள்ள நிலை: இந்த வகையான நோய் மக் களிடையே  நமது இரத்தத்தில் கால்சியம் (Calcium)  அளவு  அதிகரிப்பதற்கு இந்த நோய் காரணமாக உள்ளது. 

அதிக அளவு கால்சியம்(Calcium) சத்து பல்விதமான உடல் பிரச்சனைகளை உருவாக்கு கிறது. இந்த நோய் புற்றுநோய் அல்ல. இதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். நோயின் அறிகுறிகள்:- 

1. உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி. 
2. ஞாபக மறதி, மனச்சோர்வு, மன அழுத்தம் Depression தூக்கமின்மை. 
3. எலும்பு வலி, மூட்டு வலி. 
4. வயிற்றில் புண், வயிற்று வலி, எடைகுறைதல், மலச்சிக்கல். 
5. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகுதல்

பொதுமக்களிடமும் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. நீண்டநாட்கள் கால்சியத்தின் (Calcium) அளவு இரத்தத்தில் அதிகமாக இருந்தால் இதய நோய் (Cardiac Arrythmia) வருவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

II. Hypo Para Thyrodism (Hypo Parathyroidism) இது இரத்தத்தில் கால்சியம் (Calcium)  அளவு குறைவாக உள்ள நிலை:- இதுமிகவும் அரிய வகை நோயாகும். இதற்கு வெவ்வேறு  காரணங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த நோய்க்கு பொதுவாக அறுவை சிகிச்சை முறைகள் தேவையில்லை. 

இந்த நோய்களை மருத்துவர்கள் கூறும் மருந்துகளின் மூலமே கட்டுப்படுத்திட முடியும். பாராதைராய்டு கட்டிகள்/ பாராதைராய்டு சுரப்பியில் புற்று நோய் உண்டாகும் நிலை :- இதுமிகவும் அரிய வகை நோயே ஆகும். ஆனால், இந்த நோய் கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமே இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.

Thanks to FB Karthikeyan Mathan