மருத்துவ
உபகரணமான பேஸ்மேக்கர் (CARDIAC PACEMAKER)மனிதர்களுக்கு செயற்கையாக
இதயத்துடிப்பை உண்டாக்க வல்லது. ஆயிரத்துக்கும் அதிகமான உலக மக்கள்
பேஸ்மேக்கரைப் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வில்சன் கிரேட்பேட்ச்
(Wilson Greatbatch) என்பவருக்கு பேஸ்மேக்கரைக் கண்டுபிடித்த புகழ்
கிடைத்தது.
வில்சன் கண்டுபிடித்த பேஸ்மேக்கர்
உடலின் வெளியே பொருத்தும் வகையில் அமைந்திருந்தது. வில்சனின்
கண்டுப்பிடிப்பிற்கு எட்டு வருடத்திற்கு முன்னால், அதாவது 1950 - ஆம் ஆண்டு
கனடாவைச் சேர்ந்த ஜாண் ஹோப்ஸ் (John Hopps) என்பவர் முதல் பேஸ்மேக்கரை
உருவாக்கினார்.
ஹோப்ஸ் கண்டுபிடித்த பேஸ்மேக்கர் வடிவில் பெரிய அளவில் இருந்ததால் அவர்
கண்டுப்பிடிப்பு உலகிற்கு தெரியாமல் போனது. பொறியாளரான வில்சன் கிரேட்
பேட்ச் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் உலகப் போருக்குப் பின்
மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் கார்னெல்
பல்கலைக்கழகத்தில் (Cornel university)உயிரியல் துறையில் பணியில் அமர்ந்து
விலங்கு பண்ணையில் விலங்குகளின் பழக்கவழக்கங்கள் குறித்த ஆராய்ச்சியில்
ஈடுபடத் தொடங்கினார். அமெரிக்க கம்பெனி உருவாக்கிய சிலிகான்
டிரான்ஸ்சிஸ்டரை வைத்து விலங்குகளின் இதயத் துடிப்பைப் பதிவுசெய்து
கொண்டிருந்தபோது தவறுதலாக இணைக்கப்பட்ட ஒயர்களால் சமச்சீரற்ற
இதயத்துடிப்பிலிருந்த விலங்கின் இதயத்தில் சீரான ‘லப்’ ‘டப்’ தாளத்தைக்
கண்டறிந்தார்.
பின்னர் தனது முழு கவனத்தையும்
செலுத்தி இதயத்தைச் சமச்சீராக செயல்படுத்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
பின்னர் மே 7 - ஆம் தேதி 1958 - ஆம் ஆண்டு உடலினுள் பொருத்தும் சிறிய
பேஸ்மேக்கரைக் கண்டுபிடித்தார். முதல் பேஸ்மேக்கர் நாயின் உடலினுள் சார்டக்
மருத்துவமனையில் (Chardack Hospital) வைத்து பொருத்தப்பட்டது. இந்த
ஆராய்ச்சிக்கு வில்சனின் நண்பர்கள்வில்லியம் சார்டாக் மற்றும் ஆன்ட்ரு கேஜ்
முழுமையாக உதவி புரிந்தார்கள். ஆனால், இந்தக் கருவி நான்கு மணி நேரமே வேலை
செய்தது. பின்னர் பல தவறுகள் சீர் செய்யப்பட்டு லித்தியம் பேட்டரியில்
இயங்கும் பேஸ்மேக்கர் உருவாக்கப்பட்டது. வில்சனின் அயராத ஆர்வத்தால்
இக்கருவிக்கு காப்புரிமை கிடைத்தது. இன்று, இது பலராலும் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.
Thanks to FB Karthikeyan Mathan
மருத்துவ
உபகரணமான பேஸ்மேக்கர் (CARDIAC PACEMAKER)மனிதர்களுக்கு செயற்கையாக
இதயத்துடிப்பை உண்டாக்க வல்லது. ஆயிரத்துக்கும் அதிகமான உலக மக்கள்
பேஸ்மேக்கரைப் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வில்சன் கிரேட்பேட்ச்
(Wilson Greatbatch) என்பவருக்கு பேஸ்மேக்கரைக் கண்டுபிடித்த புகழ்
கிடைத்தது.
வில்சன் கண்டுபிடித்த பேஸ்மேக்கர் உடலின் வெளியே பொருத்தும் வகையில் அமைந்திருந்தது. வில்சனின் கண்டுப்பிடிப்பிற்கு எட்டு வருடத்திற்கு முன்னால், அதாவது 1950 - ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஜாண் ஹோப்ஸ் (John Hopps) என்பவர் முதல் பேஸ்மேக்கரை உருவாக்கினார்.
ஹோப்ஸ் கண்டுபிடித்த பேஸ்மேக்கர் வடிவில் பெரிய அளவில் இருந்ததால் அவர் கண்டுப்பிடிப்பு உலகிற்கு தெரியாமல் போனது. பொறியாளரான வில்சன் கிரேட் பேட்ச் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் உலகப் போருக்குப் பின் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் (Cornel university)உயிரியல் துறையில் பணியில் அமர்ந்து விலங்கு பண்ணையில் விலங்குகளின் பழக்கவழக்கங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார். அமெரிக்க கம்பெனி உருவாக்கிய சிலிகான் டிரான்ஸ்சிஸ்டரை வைத்து விலங்குகளின் இதயத் துடிப்பைப் பதிவுசெய்து கொண்டிருந்தபோது தவறுதலாக இணைக்கப்பட்ட ஒயர்களால் சமச்சீரற்ற இதயத்துடிப்பிலிருந்த விலங்கின் இதயத்தில் சீரான ‘லப்’ ‘டப்’ தாளத்தைக் கண்டறிந்தார்.
பின்னர் தனது முழு கவனத்தையும் செலுத்தி இதயத்தைச் சமச்சீராக செயல்படுத்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பின்னர் மே 7 - ஆம் தேதி 1958 - ஆம் ஆண்டு உடலினுள் பொருத்தும் சிறிய பேஸ்மேக்கரைக் கண்டுபிடித்தார். முதல் பேஸ்மேக்கர் நாயின் உடலினுள் சார்டக் மருத்துவமனையில் (Chardack Hospital) வைத்து பொருத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்கு வில்சனின் நண்பர்கள்வில்லியம் சார்டாக் மற்றும் ஆன்ட்ரு கேஜ் முழுமையாக உதவி புரிந்தார்கள். ஆனால், இந்தக் கருவி நான்கு மணி நேரமே வேலை செய்தது. பின்னர் பல தவறுகள் சீர் செய்யப்பட்டு லித்தியம் பேட்டரியில் இயங்கும் பேஸ்மேக்கர் உருவாக்கப்பட்டது. வில்சனின் அயராத ஆர்வத்தால் இக்கருவிக்கு காப்புரிமை கிடைத்தது. இன்று, இது பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.