தியானம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:33 PM | Best Blogger Tips
உ
                                      தியானம்
ஐந்து புலன்களுக்கும் மேலாக ஆறகவதாக இருப்பதுவே மனம் ஆகும்.பல்வேறு விதமாக எப்போதும் அலை பாய்ந்து கொண்டிருப்பதுவே  இம் மனம் ஆகும். 

இவ்வாறு அலை பாய்ந்து திரியும் இம் மனத்தினை ஒரு கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து மன மற்ற இடத்தில் இருக்கச் செய்வதற்கான முறைகளே தியானமாகும்.இம் மனமானது மனித உடம்பினுள் வெகு சூட்சுமப் பொருளாக இயங்குகிறது.

இதனை பல்வேறு நிலைகளில் சிதற விடாமல் ஒருமுகப்பட்டு நிறுத்துகின்ற போது அதி அற்புதமான ஆற்றல் மிகுந்த சக்திகளை மனிதன் அடைகிறான் என்பதனை இன்றுவரை முன்னோர்கள் காலம் தொட்டு நமது அநுபவப் பூர்வமாக கண்டு வருகிறோம்.இந்த மனதம் அடங்க முதலில் ஆசைகளை அடக்க வேண்டும்.ஆசைகளானது கட்டுப் படப்பட மனமடங்கும்.

     இதையே திருமூலர் என்ற மஹரிஷி தமது நூலில் கூறி உள்ள பாடலைக் கவனிக்கவும்.
     பாடல்:-“ஆசை அறுமின் ஆசை அறுமின்
           ஈசனோடாயினும் ஆசையறுமின்
           ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம்
           ஆசை விடவிட ஆனந்தந்தானே.”----எனவே இத்தகைய ஆசைகளை அடக்க வல்ல வழி முறைகளையும் அதனால் கட்டுப் பாட்டிற்குள் வரும் மனதிற்கும் உள்ள பயிற்சி முறைகள் எட்டு நிலைக்களங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

          இவை யோக சாதனங்களுக்கு உரிய எட்டு விதமான அங்கங்களாகும்.

    அவைகள் முறையே---1;இயமம்,2.நியமம்,3.ஆசனம,;4.பிராணாயாமம், 5.பிரத்தியாகாரம்,6.தாரணை,
7.தியானம்,8.சமாதி-என்பனவாகும்.

1.இயமம்:-மனத்தை தீயவற்றுள் செல்ல விடாது கட்டுப்பாடுடன் இருத்தல்.

2.நியமம்:-மனத்தை நல்வழிக்குச் செலுத்தி அதன்படி நடத்தல்.

3.ஆசனம்:-யோகாப்பியாசம் செய்வதற்குறிய இருக்கை.

4.பிராணாயாமம்:-மூச்சுக் காற்றையும்,பிராண சக்தியையும் ரேசக,ப+ரக,கும்பகத்தால் கட்டுப் படுத்தி மனத்தை ஒரு நிலைப் படுத்துதல்.

5.பிரத்தியாகாரம்:-மனமானது ஐம்புலன்களின் சாராம்சமான சத்த,ஸ்பரிச,ருப,ரஸ கந்தாதிகள் வழியாக வெளியே புறவுலகில் செல்லவிடாது ஆமையைப் போல் அடங்கி நிற்றல்.

6.தாரணை:-பஞ்சேந்திரியங்களின் வழியாகப் புறவுலக நாட்டம் தவிர்த்து மனதை ஒரு குறியில் நிற்கச் செய்தல்.

7.தியானம்:-குறிப்பிட்ட ஒரு இடத்தில் மனம்,புத்தி மற்றும் புலாதிகளை நிற்கச் செய்தல்.

8.சமாதி:-மனமும்,உயிரும்,96 தத்தவங்களும் இறை வாழுமிடமாகிய சகஸ்ரதள கமலத்தில் இறைவனோடு இரண்டரக் கலந்து நிற்கப் பெறுவதாம்.

இங்ஙனம் அட்டாங்க யோக நெறியிற் செல்ல தன்னை வழி நடத்திச் செல்ல வேண்டும்.
           தொடரும்! ஐந்து புலன்களுக்கும் மேலாக ஆறகவதாக இருப்பதுவே மனம் ஆகும்.பல்வேறு விதமாக எப்போதும் அலை பாய்ந்து கொண்டிருப்பதுவே இம் மனம் ஆகும்.

தொடரும்!