ஆரோக்ய வாழ்விற்கு ஆரோக்ய வழிமுறைகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:27 | Best Blogger Tips

தினம் இரண்டு,
வாரம் இரண்டு,
மாதம் இரண்டு,
ஆண்டுக்கு இரண்டு.

Photo தினம் இரண்டு:

தினமும் இரு வேலையும் மலஜலம் கழிக்க வேண்டும்.
காலை, மாலை என இருமுறை மல ஜாலம் கழிப்பதால் நோய்கள் அணுகாது.
நல்ல பசியும் எடுக்கும்.
பசித்துப் புசி என்று கூறுவது பசி எடுத்து ஜீரணமாகக் கூடிய சத்து உணவுகளையே உண்ணவேண்டும்.
தினசரி மலஜலம் சரியாக கழியாவிட்டால், பசி எடுக்காது, மலச் சிக்கல் ஏற்படும்.
பெரும்பாலான நோய்களுக்கு மலச் சிக்கலும் தவறான உணவு முறைப் பழக்கங்களுமே தான் காரணமாக உள்ளன.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
அற்றது போற்றி யுணின்
என்கிறார் திரு வள்ளுவர்.


உடலுக்கு ஏற்ற உணவுகளை அதுவும் ஜீரணம் அடையக்கூடிய உணவுகளினை விருப்பத்தோடு, உண்டு வந்தால், மனித உடலுக்கு மருந்தே தேவையில்லை .


நோய்க்குத் தான் மருந்தே ஒழிய, உடலுக்கு மருந்து என்பது தேவையில்லாதது.
நோய்க்கு ஏற்றமருந்தினை, ஏற்ற உணவு உண்டபிறகு மனித உடல் இயக்கத்தினால் நோய்களைக் குணப்படுத்து கின்றன.
எந்த மருந்தும், நேரடியாக நோய்களை அழிப்பதில்லை.


A to Z வரையான சத்து மாத்திரைகளை சாப்பிட்டாலும், வைட்டமின் A & D தவிர
அனைத்து சத்து மாத்திரைகளின் சத்துக்களும் மிகும்போது, மலத்திலும் சிறுநீரிலும் வெளியேறிவிடுகின்றன. மேலும், இந்த சத்து மாத்திரைகள் செயற்கை தயாரிப்புகள் என்பதனால், தற்காலிக நிவாரணம் அளிக்குமே தவிர பரிபூரண குணம் கிடைப்பதில்லை.
நோயற்ற வாழ்வின் அடிப்படை மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது தான். இது முதல் படியாகும்.


வாரம்இரண்டு ;


வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையே ( புதன் மற்றும் சனிக்கிழமை) குறிப்பிட்டனர்.
வைத்தியனுக்கு கொடுப்பதை வாநியனுக்குக் கொடு என்று ஒரு பழமொழி உண்டு.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதனால் உடலில் சூடு அதிகம் ஆகாது.
கண்களில் எரிச்சல் ஏற்படாமல் பார்வை தெளிவாக இருக்கும்.


மாதம்இரண்டு:


மாதத்தில் இரண்டு நாட்கள் உபவாசம் இருக்க வேண்டும்.
ஒன்று கிருத்திகை மற்றொன்று ஏகாதசி .
கிருத்திகை முருகருக்கும், ஏகாதசி அன்று நாராயணனுக்கும் விரதம் இருக்க வேண்டும்.


திருமணம் ஆனவர்கள், தாம்பத்ய உறவு மாதம் இருமுறை வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிகம் போகம் கொள்வது கூடாது.


விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்று ஒரு பழமொழி நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். இதற்கான விளக்கம் நிறைய சொல்லலாம்.



ஆண்டுக்குஇரண்டு :

என்பது பேதிக்கு சாப்பிட வேண்டும்.
சித்த வைத்தியத்தில் இது முக்கியமாக வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது

நன்றி  ஆரோக்கியமான வாழ்வு