இந்தியர்களின் விஞ்ஞான கண்டுபிடிப்புகள்-4

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:37 | Best Blogger Tips
----------------------------
முக்கோணம் மற்றும் பை(படத்தை பார்க்க) பற்றிய சமன்பாடுகளை கண்டுபிடித்தனர்
---------------
ஆர்யபட்டா பை என்ற எழுத்தினை தோராயமாக மதிப்பிட்டார், மேலும் பை என்பது ஒரு விகிதமுறா எண் என்ற முடிவிற்கு வந்தார். ஆர்யபட்டீயம் (gaṇitapāda 10) இரண்டாம் பாகத்தில், அவர் எழுதுகிறார் :
கணிதபதம் 6 -ல் , ஆர்யபட்டா ஒரு முக்கோணத்தின் பரப்பளவை இவ்வாறு அளக்கிறார்
த்ரிபுஜாச்ய பலஷரிரம் சமதளகோடி புஜர்தசம்வர்க
அதன் பொருளானது : ஒரு முக்கோணத்திற்கு, அதன் செங்குத்துடன் அரைப் பக்கத்தை பெருக்கினால் அதன் பரப்பளவு கிட்டும்.

ஆர்யபட்டா சைன் என்ற கருத்துப்படிவத்தை தனது படைப்பான அர்த-ஜ்யவில் விளக்கி இருக்கிறார். நேர்ச்சரியாக, அது "பாதி-நாண்" என்ற பொருள் படும். எளிதாக இருப்பதற்கு , மக்கள் அதை ' ஜ்யா'என்று கூற தொடங்கினர். அரபிக் எழுத்தாளர்கள் அவருடைய படைப்புகளை சம்ச்க்ரி்தத்தில் இருந்து அரபு மொழி பெயர்த்த போது, அவர்கள் அதை ஜிபா என்றழைத்தனர் (ஒலிப்புமுறையில் ஒப்புமை கொண்டதால்). எனினும், அரபு மொழி எழுத்துக்களில், உயிரெழுத்துக்கள் மருவியதால் அது ஜப் என்று சுருங்கியது. பிறகு வந்த எழுத்தாளர்கள் ஜப் என்பது ஜிபா என்ற சொல்லின் சுருக்கம் என்று அறிந்து கொண்டு, அதை ஜியாப், என்று திரும்ப பதிலிடுத்தார்கள், அதன் பொருளானது "சிறுகுடா" அல்லது "விரிகுடா" ஆகும்
Thanks to Swami Vidyananda