தினமும் கடைபிடிக்க - சில உடல் நல குறிப்புகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:32 | Best Blogger Tips
நம் உடலில் ஏற்படும் கழிவுகளின் தேக்கமே நோயாக மாறுகிறது.

1. மலசிக்கல். 2. சளி  3. கெட்ட கொழுப்பு 4. கெட்ட சர்க்கரை 5. உப்பு.

இந்த கழிவுகளை முறையாக சுத்தம் செய்யாவிடில் அங்காங்கே தேங்கி உள்  உறுப்புகள் செயல்பாட்டில் குறுக்கிடுகிறது.
முதலில் கழிவுகளை வெளியேற்றுவதில் கவனம் வேண்டும். பிறகு கழிவு தேங்காத வண்ணம் உணவு வகைகளை மாற்றவேண்டும். 

கழிவுகள் வெளியேற : எண்ணெய் கொப்பளிப்பு - தண்ணீர் மருத்துவம் - எனிமா குவளை மூலம் மலக்குடல் சுத்தம் - மூச்சு பயிற்சி.

குறைவான கழிவுகள் உள்ள உணவு : இயற்கை உணவினால் மட்டுமே சாத்தியம்

கழிவுகள் இல்லாத தேகம் சுத்த தேகம். சுத்த தேகத்தில் நோய்கள் குடியிருக்க அனுமதி இல்லை !!

சுத்த தேகம் பெற வழிமுறைகள் :
1. எண்ணெய் கொப்பளிப்பு. (செய்முறை கீழே தரப்பட்டுள்ளது)
2. கரிசாலை ..வேம்பு ..கருவேலம். நாயுருவி வேர் போன்ற மூலிகை பல் பொடியால் பல் துலக்குவது.
3. தண்ணீர் மருத்துவம் - பல் துலக்கியபின் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் இளஞ்சூடான தண்ணீர் குடிப்பது.  
4. இயற்கை எனிமா குவளை கொண்டு மலக்குடல் தூய்மை செய்வது.
5. மூச்சு பயிற்சி. ( நுரையீரல் சுத்தம்).

6. இயற்கை உணவு உண்பது. இயற்கை உணவால் உடலில் கழிவு அதிகம் சேராது

( பசித்தபின் உண்ணவேண்டும்/ கூல்போல் மென்று உமிழ் நீருடன் உண்ணவேண்டும்) 
7. உபவாசம். (மாதம் இரண்டு நாட்கள் )
8. நல்ல உறக்கம். குறிப்பாக பிரிக்கப்பட்ட கழிவுகள் அங்கங்கே தேங்கும் நேரம். ( 1-4AM ).
9. தவம் தியானம் செய்து விருப்பு - வெறுப்பு அற்ற சாந்தமான மனநிலையில் இருப்பது.

இதெல்லாம் செய்வது சிரமம் என்று நினைத்தால் ......  பணத்தையும் நேரத்தையும் சேமிக்க ஆரம்பிக்கவும். ( மருத்துவர்கள் / மருத்துவமனை தேடி செல்ல !!!)
http://www.umm.edu/graphics/images/en/9276.jpg

நன்றி Mohan Chinnasamy