கோந்து போன்ற பசை, இது தண்டிலிருந்து பிழியப்பட்ட வறண்ட சாற்றில்
இருந்து வருகின்றது மற்றும் வேரானது மசாலாப் பொருளாக பயன்படுகின்றது.
பசையானது புதிதாக இருக்கும் போது சாம்பல்நிற வெண்மையாக உள்ளது. ஆனால் வறண்ட
பின்னர் அடர்ந்த மஞ்சள் நிறத்திற்குச் சென்று விடுகின்றது. பெருங்காயப்
பசையானது வெப்பம் தாங்காது, மேலும் இது பாரம்பரியமாக கற்கள் அல்லது
சுத்தியல் கொண்டு உடைக்கப்படுகின்றது. இன்று, பெரும்பாலும் பொதுவாகக்
கிடைக்கின்ற வடிவமான கூட்டுப் பெருங்காயம் தூளானது, 30% பெருங்காயப்
பசையுடன் அரிசி மாவு மற்றும் அரேபிய கோந்து கலந்து கிடைக்கின்றது.
பெருங்காயம் என்பது ஒரு பூண்டுத்தாவரம், மானாசியஸ்,
அம்பெல்லிபெரேயே குடும்பத்தின் பல்லாண்டுச் செடி, அபியாசேயே என்றும்
அழைக்கப்படுகின்றது. இச்செடி சுற்றுவட்டத்தில் 30-40 செ.மீ இலைகளுடன் 2
மீட்டர்கள் வரை உயர வளருகின்றது. தண்டு இலைகள் அகன்ற அடிப்பகுதியைக் கொண்ட
காம்புகளைக் கொண்டுள்ளன. பூக்களின் தண்டுகள் 2.5–3 மீட்டர்கள் உயரம் உள்ளன
மற்றும் 10 செ.மீ கடினமாகவும் மறைவாகவும் உள்ளன. பசைநிறைந்த கோந்தைக்
கொண்டிருக்கின்ற மேற்பட்டையில் பல செல் விலகிய நாளங்கள் உள்ளன. பூக்கள்
வெளிர் பச்சை நிறத்தில் பெரிய கூட்டு குடைமஞ்சரிகளில்
உற்பத்திசெய்யப்படுகின்றன. பழங்கள் நீள்வட்ட, தட்டையாக, மெல்லியதாக சிவப்பு
கலந்த மண்ணிறத்தில் உள்ளன மற்றும் அவை பால் சாற்றைக் கொண்டுள்ளன. வேர்கள்
கடினமாகவும், மிகுதியாகவும் மற்றும் சதைப்பிடிப்பாகவும் உள்ளன. அவை
தண்டுகளைப் போன்றே பசையையும் விளைவிக்கின்றன. தாவரத்தின் அனைத்துப்
பகுதிகளும் தனிப்பட்ட துர்நாற்ற மணத்தைக் கொண்டுள்ளன
இது பெர்சியாவைஈரான் பிறப்பிடமாகக் கொண்ட பெருங்காய
இனம் ஆகும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க
மணத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இது சமைத்த உணவுகளில் மென்மையான சுவையை
வழங்குகின்றது. இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது.
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ
பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள
சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல்
பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில
நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று
வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி,
சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச்
சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின்
முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.
கசப்பும், காரமும் கலந்த சுவை கொண்டது
பெருங்காயம். வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும்.
அதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும்.
இந்த மசாலாப் பொருள் உணவில் சுவையூட்டுப் பொருளாகவும் ஊறுகாய்களிலும்
செரிமானத்திற்கு உதவும் பொருளாக பயன்படுகின்றது. சமைக்காத போது அதன்
துர்நாற்றம் கடுமையாக இருப்பதால் அதை காற்றுப்புகா கொள்கலன்களில் அடைத்து
வைக்க வேண்டும்; இல்லையெனில் அந்த மணமானது அருகில் வைக்கப்பட்டுள்ள பிற
மசாலாப் பொருட்களிலும் தொற்றிக்கொள்ளும். இருப்பினும், அதன் துர்நாற்றம்
மற்றும் சுவை ஆகியவை மிதமாகவும் மற்றும் எண்ணை அல்லது நெய்யில் சூடாக்கும்
வதக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை நினைவூட்டுகின்றது
பெருங்காயம் குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் குறைக்கின்றது. வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது
மருத்துவக் குணங்கள்:
- நம்ம தமிழ்நாட்டில் ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, கடவுளர்களின் மருந்து என்று குறிப்பிடுகிறார்கள்.
- பச்சையாக இருக்கும் போது சகிக்க முடியாது இதனுடைய வாசனை சமையலில் சேர்த்த பிறகு ஆளை அசத்தும்.
- ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் பெருங்காயச்செடி வளருகிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இதில் இரண்டு வகை இருக்கிறது.
- காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம் சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.
- வாயுக்கோளாறை விரைவிலேயே சரி செய்யும் மருந்து இது. தசைகளுக்கு பலம் கொடுக்கும், சீறுநீரோட அளவைப் பெருக்கும் என்று ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருக்கிறது.
- தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.
பல்வலிக்கும் பெருங்காயம் நல்ல மருந்து. பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், வலி நொடியில் பறந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.
ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.
பெருங்காயம் காய்ச்சி காதில்விட காதுவலி குணமாகும். காயத்தைச் சிறிது நெய்விட்டு பொரித்துப் பொடித்து 2-3 குன்றிஎடைவீதம் வெல்லத்துடன் சேர்த்து அருந்திவர வயிற்றுவலி, வயிற்றுப்புசம், அசீரணம் முதலியன குணமாகும். பொரித்த காயத்துடன் வெள்ளைப் பூண்டும் வெல்லமும் சேர்த்து அரைத்துக் கொடுத்துவர மாதர்களுக்கு பிரசவத்திற்குப்பின்காணும் உதிரச்சிக்கலை ந்ன்கு வெளிப்படுத்தும்.
பெருங்காயத்தை நீரில் இழைத்து வயிற்றின் மீது பற்றுப் போட்டு வர வயிற்றுப் பொருமல் குணமாகும்.
பெருங்காயம் கைப்பு சுவை உடையது. பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதற்கு முக்கியக் காரணம், அஜீரணம், வாத குடைச்சல், நாக்குப் பூச்சி பிரச்சினைகள் போன்றவற்றிற்கு பெருங்காயம் மருந்தாக அமைவதே.
வயிற்று உப்பசம் ஏற்பட்டவர்கள் மோரில் சிறிதளவு பெருங்காயத்தை கலந்து குடித்தால் நன்கு ஏப்பம் விட்டு, உப்பசம் குறையும்.
செரியாமை, மந்தம், புளியேப்பம், வாய்ப்பு, வயிற்றுவலி போன்றவற்றிற்கு பொரித்த பெருங்காயம், உலர்ந்த துளசி இலை சம அளவு எடுத்து சூரணம் செய்து கொள்ளவும்.
அதில் ஒரு கிராம் அளவு வெந்நீரில் உட்கொண்டு வர மேற்கூறிய பிரச்சினைகள் எளிதாக தீர்ந்து விடும்.
பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள், தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை ஈடுகட்டலாம்.
பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது ;
உணவை செரிப்பிக்கிறது ; சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும்
ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது ;
பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின்
சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.
உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,
நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.
இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.
நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.
இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.
இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.
பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.
கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.

வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பெருங்காயம் நல்ல கை மருந்தாக விளங்குகிறது.
பெருங்காயத்தை நீரில் இழைத்து வயிற்றின் மீது பற்றுப் போட்டு வர வயிற்றுப் பொருமல் குணமாகும்.
பெருங்காயம் கைப்பு சுவை உடையது. பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதற்கு முக்கியக் காரணம், அஜீரணம், வாத குடைச்சல், நாக்குப் பூச்சி பிரச்சினைகள் போன்றவற்றிற்கு பெருங்காயம் மருந்தாக அமைவதே.
வயிற்று உப்பசம் ஏற்பட்டவர்கள் மோரில் சிறிதளவு பெருங்காயத்தை கலந்து குடித்தால் நன்கு ஏப்பம் விட்டு, உப்பசம் குறையும்.
செரியாமை, மந்தம், புளியேப்பம், வாய்ப்பு, வயிற்றுவலி போன்றவற்றிற்கு பொரித்த பெருங்காயம், உலர்ந்த துளசி இலை சம அளவு எடுத்து சூரணம் செய்து கொள்ளவும்.
அதில் ஒரு கிராம் அளவு வெந்நீரில் உட்கொண்டு வர மேற்கூறிய பிரச்சினைகள் எளிதாக தீர்ந்து விடும்.
பெருங்காயத்தை நீரில் இழைத்து வயிற்றின் மீது பற்றுப் போட்டு வர வயிற்றுப் பொருமல் குணமாகும்.
பெருங்காயம் கைப்பு சுவை உடையது. பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதற்கு முக்கியக் காரணம், அஜீரணம், வாத குடைச்சல், நாக்குப் பூச்சி பிரச்சினைகள் போன்றவற்றிற்கு பெருங்காயம் மருந்தாக அமைவதே.
வயிற்று உப்பசம் ஏற்பட்டவர்கள் மோரில் சிறிதளவு பெருங்காயத்தை கலந்து குடித்தால் நன்கு ஏப்பம் விட்டு, உப்பசம் குறையும்.
செரியாமை, மந்தம், புளியேப்பம், வாய்ப்பு, வயிற்றுவலி போன்றவற்றிற்கு பொரித்த பெருங்காயம், உலர்ந்த துளசி இலை சம அளவு எடுத்து சூரணம் செய்து கொள்ளவும்.
அதில் ஒரு கிராம் அளவு வெந்நீரில் உட்கொண்டு வர மேற்கூறிய பிரச்சினைகள் எளிதாக தீர்ந்து விடும்.
பாவப் பிரகாசர் எனும் முனிவர்
பெருங்காயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது உஷ்ணம் (சூடான வீர்யத்தைக்
கொண்டது), பாசனம் (எளிதில் தானும் ஜீரணமாகி தன்னைச் சுற்றியுள்ள மற்ற
உணவையும் விரைவில் ஜீரணம் செய்துவிடும்), ருச்யம் (வாயில் ருசியை அறியும்
கோளங்களில் படிந்துள்ள அழுக்கை அகற்றி ருசியைத் தூண்டிவிடும்).
ஸ்த்ரீபுஷ்பஜனனம் (கருப்பையைச் சார்ந்த முட்டையை நன்றாக உற்பத்தி செய்து
மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் அதனால்தான் பிரசவித்தவுடன் தாய்க்கு இதைப்
பொரித்துப் பூண்டு, பனை வெல்லம், இஞ்சிச் சாறு இவைகளுடன் கொடுப்பது உண்டு),
பவ்யம் (உடலுக்கு வலுவைக் கூட்டும் பெருங்காயத்தை நெய்யில் பொரித்துத்
தசமூலாரிஷ்டம், வில்வாதி லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம் இவைகளில் ஏதாவது
ஒன்றுடன் சிட்டிகை சேர்த்து உணவிற்குப் பின் சாப்பிட, வயிற்றில் அஜீர்ணம்,
அஜீர்ண பேதி, குடலோட்டம், பசியின்மை, ஜீரண சக்திக் குறைவு ஆகியவற்றைப்
போக்கி, உடலுக்கு வலுவைத் தரும்), மூர்ச்சாபஸ்மாரஹ்ருத்பரம் (மூர்ச்சை
எனும் மயக்கநிலை, வலிப்பு ஆகிய நோய்களில் மிகவும் உபயோகமானது) என்று
கூறுகிறா
பெருங்காயம்
கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக்
காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம்
கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில்
போட்டுக் கொள்ளலாம். கருப்பையைக் காக்கும் இந்த காயமென்பதால், பிரசவித்த தாய்மார்க்கு, காயத்தைப் பொரித்து, இஞ்சி, பூண்டு, பனைவெல்லம் சேர்த்துக் கொடுப்பது அருமருந்தாகும்.
நன்றி : மூலிகைகள்