தமிழ் வைத்தியம் பற்றி தேவர்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:53 PM | Best Blogger Tips

"அக்காலத்தில் வைத்தியர் ஓருவர் தெருவில் கீரை விற்கும் ஒருவனைப்பார்த்து, அவன் "கீரையோ கீரை" என்று கூறும் குரலைக் கேட்டு, பக்கத்து மனிதரிடம் "இவன் இன்னும் மூன்றே முக்கால் நாழிகைக்குள் இறந்து போவான். இவனைச் சீக்கிரம் வீட்டிற்குப் போகச் சொல்லுங்கள்" என்று சொன்ன படியே அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான். அவனும் அப்படியே இறந்தான் என்று தமிழ் வைத்தியத்தில் ஆதாரத்துடன் கூறப்படுகிறது.(ஒருவனின் குரலின் ஒலி வைத்தே அவனது உடல் நிலை சொல்லும் உயர்ந்த முறை பெற்றது தமிழ்)

இன்றைக்கு உயர்ந்த வைத்தியர்கள் என்று சொல்லுகிற டாக்டர்களெல்லாம் போதிக்கின்ற சுகாதாரத்தை 'ஆசாரக் கோவை" என்ற சிறுநூல் அன்றே போதித்திருக்கின்றது.

பஸ்பம்,சுண்ணம்,திராவகம்,கஷாயம், செந்தூரம் என்ற முறைகள் அனைத்தும் தெளிந்து தேர்ந்து அதுமட்டுமல்லாமல் உலோகங்களை மாற்றும் திறமையும் பெற்றிருந்தது தமிழ்.

- திரு.பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவர் (13.2.1949-ல் "கண்ணகி" எனும் இதழிலில் எழுதிய கட்டுரை)

ஆதாரம்:
"பசும்பொன் தேவர் கட்டுரைகள் (குமரன் பதிப்பகம்),
கட்டுரை தலைப்பு "இல்லாதது இல்லாத முதுமொழி - தமிழ்"

-ஆர்.தியாகு