……………………………………………..
வால்மீகிராமாயணம் …உத்தரகாண்டம்
…………………………………………………………….
அத்தியாயம் 95.
………………………………………
ஸ்லோகம் 95.. ஸ்ரீராமர் பரிசுத்தமான தூதர்களை அழைத்து நீங்கள் இங்கிருந்து வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சென்று என்னுடைய வார்த்தையை அவரிடம் தெரிவியுங்கள்.
96.ஸீதை களங்கமற்றவளாகவும் மாசற்ற நடத்தையுடையவளாகவும் இருப்பதுபற்றி மகாமுனிவரின் அனுமதி பெற்று இங்கு வந்து ஆத்ம சுத்தி செய்துகொள்ளட்டும் என்றும்
.முனிவரின் அபிப்பிராயத்தையும் ஸீதையின் மன அபிப்பிராயத்தையும் அறிந்து கொண்டு ஸீதை சபதம் செய்ய விரும்பினால் பிறகு எனக்கு தெரிவியுங்கள் என்றும்.
.மைதிலீ ஜானகி தன்னுடைய சுத்திக்கும் என்னுடைய சுத்திக்கும் மத்தியல் நாளை சபதம் செய்யட்டும்.
அத்தியாயம் 96
………………………………………………
10.எல்லோரும் கூடிய சபையில் முனிவருடன் சீதை வந்தாள்
11.அந்த ரிஸிக்குப்பின் தலை குனிந்து கை கூப்பி கொண்டு கண்ணீர் வடிய ஸ்ரீராமரை தியானித்துக்கொண்டு இருந்தாள்.
15.முனிவர் ஸ்ரீராமரனிடம் பின்வருமாறு கூறினார்
16. ஸ்ரீராமா!மகாவிரதா!உலக மக்களின் தவறான பேச்சுக்களால் என் ஆஸ்ரமத்திற்கு கொண்டுவந்து விடப்பட்டாள்
17. ஸ்ரீராமா! உலகமக்களின் தவறான பேச்சுக்கு அஞ்சிய சீதை உனக்கு நம்பிக்கை வார்த்தை கூறுவாள்.அதை நீ அனுமதிக்க வேண்டும்.
18.அடக்கத்துக்குரிய வீரர்களான இவ்விருவரும்(லவன், குசன்) இரட்டையர்களாய் ஜானகிக்கு பிறந்தவர்கள்,இவர்கள் உன்னுடைய புத்திரர்களே,இது சத்தியம் என்று நான் உனக்கு உறுதி கூறுகிறேன்
23.இவள் தூய்மையான நடத்தை கொண்டவள்,பாவமற்றவள்,கணவனை தெய்வமாக கொண்டவள்,உலக மக்களின் தவறாக பேச்சுக்கு அஞ்சி உன்முன் சபதம் செய்கிறாள்.
அத்தியாயம் 97
………………………………..
2. ஸ்ரீராமர் முனிவரைப்பார்த்து பின்வருமாறு சொன்னார்்
3.நீங்கள் எப்படி கூறினேீர்களோ அப்டியே சீதை களங்கமற்றவள்.உங்கள் மாசற்ற வாக்கியங்களைப்போவே சீதையும் குற்றமற்வள் என்பது தான் என் நம்பிக்கை. முன்பு தேவர்கள் முன்னிலையில்(ராவணனை கொன்ற பின்பு) வைதேகி குற்றமற்வள் என்று நிரூபிக்கப்பட்டது.அங்கு சபதமும் செய்யப்ட்டது.அதன் பிறகு வீட்டிற்கு அழைத்துவந்தேன்
4.உலக மக்களின் சந்தேகத்தின் காரணமாக சீதை வனத்தில் விடப்பட்டாள்.மகா முனிவரே இப்படிப்பட்ட சீதை பாவமற்வள்,குற்றமற்றவள் என்று நன்றாக தெரிந்தும் உலகமக்களின் தவறான பேச்சுக்கு அஞ்சியே என்னால் சீதை வனத்தில் விடப்பட்டாள்.அதை நீங்கள் மன்னித்தருள வேண்டும்
5.லவகுசர்கள் என்னுடைய புத்திரர்கள் என்பதை நன்கு அறிவேன்.பரிசுத்தமான ஸீதையிடம் நான் கொண்டுள்ள அன்பை உலகத்தோர் காணட்டும்.
14.காவியுடுத்த சீதை வந்திருந்த எல்லோரையும் பார்த்து கை கூப்பி தலை குனிந்து பன்வருமாறு கூறினாள்
15. ஸ்ரீராமரையல்லாது மனதாலும் வேறொருவரை நான் எண்ணாதது உண்மையானால் மாதவனுடைய தேவியாகிய பூதேவி எனக்கு புகலிடம் அளிக்க வேண்டும்
17. ஸ்ரீராமருக்கப்பால் ஒருவரையும் நான் அறியேன் என்று நான் கூறிய இது ஸத்தியமானால் மாதவனுடைய தேவியாகிய பூதேவி எனக்கு புகலிடம் அளிக்க வேண்டும்
18.அவ்வாறு வைதேகி சபதம் செய்கையில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது.ஒப்புயர்வற்ற தெய்வீக சிம்மாசனம் மேலெழுந்தது.
20. பூதேவியானவள் மைதிலியை இரு கைகளாலும் தழுவியெடுத்து நல்வரவு கூறிக்கொண்டே அந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தாள்.
21.ஸீதை சிம்மாசனத்தில் வீற்று ரஸாதலத்தில் புகுவதைப் பார்த்து தேவர்கள் சீதைமேல் பூமாரி பொழிந்தார்கள்.
24.அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள்
அத்தியாயம் 98
……………………………………………
கண்ணீரால் கலங்கிய கண்களுடன் எழுந்து நிற்கவும் சக்தியற்றவனாக ஸ்ரீராமன் துக்கத்துடன் காணப்பட்டார்
3. ஸ்ரீராமர் வெகுநேரம் அழுது கண்ணீரை நிறைந்த கண்களோடு பின்வருமாறு கூறினார்
4. லக்ஷ்மியே உருகொண்டாற் போன்ற சீதை நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே என் கண்எதிரிலிருந்து மறைந்து போனாள்.என்றும் இல்லாத சோகம் என்மனத்தை ஆட்டிபடைக்கிறது.
5.காணாமல் போன சீதை கடலுக்கப்பால் லங்கையிலிருந்து என்னால் கொண்டுவரப்பட்டாள் பூதேவியின் மடியிலிருந்து கொண்டுவர இயலாதா?
6.பகவதி! பூதேவி!ஸீதையை எனக்கு திருப்பி கொடு.இல்லாவிட்டால் என் சக்தியை நீ தெரிந்து கொள்ளும் வரை என் கோபத்தை காட்டுவேன்.
8.சீதையோடு சேர்ந்து வாழ எனக்கு புகலிடம் கொடு.நாங்கள் ஒன்று சேர்ந்து வாழவிடு.
11. ஸ்ரீராமர் இவ்வாறு கோபத்துடன் கூறியதைக்கேட்ட பிரம்மதேவர்
12. ஸ்ரீராமா!நீ துக்கப்படுவது தகாது உன் பூர்வ நிலையை நியாபகப்படுத்திக்கொள்
13.உன்னுடைய ஒப்புயர்வற்ற விஷ்ணு ஸ்வரூபத்தை ஞாயபகப்படுத்திக்கொள்.
14.ஸீதை மாசற்றவள்,முன்பு உன்னைவிட்டு பிரியாதவள்,இப்போது அவள் நாகலோகம் போய்விட்டாள்.மீண்டும் ஸ்வர்க்கத்தில் நீங்கள் இருவரும் சேர்ந்து இருப்பீர்கள்.இதில் சந்தேகமில்லை.