பாரதம் தந்த புன்னியவர்கள் - வீரமும் விவேகமும் கொண்ட வீரர்கள் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 PM | Best Blogger Tips

இந்திய விடுதலைப்போரில் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய முதல் பெண் வீரங்கனை வீரமங்கைவேலுநாச்சியார் ஆவார். தென்னிந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மகத்தான போர் நடத்தி வெள்ளையரையும்,ஆற்காடு நவாப்பையும் புறங்காண செய்த வீரமங்கை வேலுநாச்சியார்தான்

44ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் "எல்லாளன்" கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே குறிப்பிடுகின்றது.

நேதாஜி (தலைவர்) என்று பாரத மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் பாரத சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான பாரதீயர்களை ஒன்றுதிரட்டி பாரத தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது பாரதத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

வீர சாவர்க்கர் பாரத விடுதலை போராட்டத்தின் முக்கிய புரட்சியாளர். மிகப்பெரிய தியாகங்களை தேசத்துக்காக ஏற்றவர். சமூக புரட்சியாளர். அவரது வாழ்வனைத்தும் தேச நலனுக்கான போராட்டமாகவே திகழ்ந்தது. வரலாற்றை உருவாக்கிய அப்பெரும் ஆளுமை தேசத்தின் சரித்திரத்தை மீட்டெடுத்து எழுதுவதிலும் அதே அக்கறையைக் காட்டினார்.

நீங்கள் பாரதத்தை புரிந்துகொள்ள வேண்டுமானால் விவேகானந்தரைப் படியுங்கள். அவரின் விவேகம் மிக்க செயல்களும் சொற்களுமே நேற்றைய, இன்றைய, நாளைய பாரதத்திற்கு வழிகாட்டி என்று சொன்னால் அதுவே பொருந்தும் !!

இதந்திரு மனையின் நீங்கி,
இடர்மிகு சிறைப்பட்டாலும்,
பதந்திரு இரண்டும் மாறி,
பழிமிகுந்து இழிவுற்றாலும்,
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்,
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே.
பாரதியால் தமிழ் உயர்ந்ததும், தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். தாலாட்டுப் பாடல் பாடாத ஒரே கவிஞன், மாறாக பாரத மாதா திருப் பள்ளிஎளுசி பாடியவன். தன் பாடல்களின் மூலம் வீரத்தை விதைத்தவன் இந்த முண்டாசுக் கவிஞன் !!

இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி , நவம்பர் 19, 1835–சூன் 17, 1858) வடமத்திய பாரதத்தின் சான்சி நாட்டின் இராணி. 1857 பாரத கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி பாரதத்தில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.

வாஞ்சிநாதன் (1886 - ஜூன் 17, 1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர்.

பால கங்காதர திலகர் சூலை 23, 1856 –ஆகத்து 1 1920 (அகவை 64), ஒரு இந்தியத் தேசியவாதியும், சமூக சீர்திருத்தவாதியும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். பாரத விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. பாரதத்திற்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் பாரதத்தில் நினைவுகூரப்படுகிறது.

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மராட்டியர் எழுச்சி தென்னிந்திய வரலாற்;றில் ஒர் முக்கிய நிகழ்வாகும். டெல்லி சுல்தானியரின் ஆட்சியை எதிர்த்து நின்று இந்துசமயம் இந்துதர்மம் என்பவற்றைத் தென்னகத்தில் பாதுகாத்தவர்கள் மராட்டியர்கள். இதற்கான அடித்தளத்தினை இட்டுக் கொடுத்தவன் மன்னன் ஷாஜிபான்ஸ்லே ஆவார். இந்த வரிசையில் மன்னன் சிவாஜியும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளான்.

பூலித்தேவன் (1715 - 1767[1]) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். பாரத விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

“ "நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே" ”

என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.

எத்தனையோ ஞானிகள் வீரர்கள் இந்த புண்ணிய பூமியில் அதனை பேருக்கும் எங்கள் வணக்கங்கள்.

 
நன்றி  தர்மத்தின் பாதையில்