தரங்கம்பாடி 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து 19-ம் நூற்றாண்டு வரை தரங்கம்பாடி டச்சு நாட்டினரின் காலனியாகவும், முக்கியமான துறைமுகமாகவும் ஒளி வீசிக் கொண்டிருந்தது.
1845-ம் ஆண்டு இத்துறைமுக நகர் ஆங்கிலேயர்களுக்கு விற்கப்பட்டாலும், 1808 மற்றும் 1814-ம் ஆண்டுகளின் ஐரோப்பாவின் நேப்போலியன் போர்க்காலங்களில் இப்பகுதி ஆங்கியேர்களின் வசத்தில் இருந்தது.
நாகப்பட்டினத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்ட போது, இந்நகரம் ஒரு சுறுசுசுறுப்பான துறைமுக நகரம் எனற பெருமையை இழந்தது.
தரங்கம்பாடியைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்
கடலையொட்டி அமைந்துள்ள தரங்கம்பாடி நகரத்தில், இன்று அதன் அலைகளின் கீதங்களும் கூட குறைவாகவே ஒலிக்கின்றது. இன்னமும் யாரும் கிளராத இடமாகவே உள்ள தரங்கம்பாடி, தமிழக கடற்பகுதிகளில் மிகவும் குறைவாகவே ஆராங்ந்து பார்க்கப்பட்ட இடமாக உள்ளது.
தரங்கம்பாடிக்கு வருவதற்கு மற்றும் ஒரு முக்கிய காரணமாக அங்குள்ள டேனிஷ் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களைச் சொல்லலாம். இந்தியாவில் வேறெங்கும் எளிதில் கிடைக்காத டேனிஷ் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ள டேன்ஸ்போர்க் (டேனிஷ் கோட்டை) இதில் முக்கியமான ஒன்றாகும்.
பெருமளவிலான கிறித்தவ மிஷனரி அமைப்புகள் தரங்கம்பாடியில் தங்கள் தளத்தை அமைத்துக் கொண்ட காரணத்தினால், தரங்கம்பாடி நகரத்தில் நிறைய தேவாலாயங்களையும் காண முடியும். இங்கிருக்கும் பிற சுற்றுலா தலங்களாக டேனிஷ் மியூசியத்தையும் மற்றும் தரங்கம்பாடி கடற்கரையையும் சொல்லலாம்.
தரங்கம்பாடியை அடையும் வழிகள்
நல்ல போக்குவரத்து வசதியை உடைய தரங்கம்பாடி நகரம், சென்னைக்கு அருகிலேயே உள்ளது.
தரங்கம்பாடியின் பருவநிலை
தரங்கம்பாடியின் பருவநிலை தமிழ்நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வெப்பமாகவும், அனலாகவும் வருடத்தின் பெரும்பாலன நாட்கள் இருந்தாலும், மழைக்காலங்களில் சற்று நல்ல சீதோஷ்ணத்துடன் காணப்படும்.
thanks to Thatstamil.com