வால்ப்பாறை - தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:52 | Best Blogger Tips

தமிழகத்தின் மிக அழகிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் வால்ப்பாறை, கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் ஆணைமலை மலைத்தொடரின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. வால்ப்பாறையில் முதன் முதலில் மனிதன் குடிபுகுந்து 170 ஆண்டுகள் நிறைவு அடைந்த பிறகும், இந்த மலைப்பிரதேசத்தின் கீழ் வரும் பெரும்பான்மையான மலை இடங்கள் இன்னும் மக்கள் வசிப்பதற்கு உகந்ததாக இல்லை. அடர்ந்த காடுகள், காட்டு அருவிகள் மற்றும் மெல்லிய ஓசையெழுப்பும் ஓடைகளுடன் தேனீர் மற்றும் காபி தோட்டங்களும் இந்த மலைப்பிரதேசத்தில் காணப்படுகின்றன.
வால்ப்பாறை புகைப்படங்கள் - தேயிலை தோட்டம் 

வால்ப்பாறையில் இருந்து ஆழியாறு வரை ஏறத்தாழ 40 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. வால்ப்பாறையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் பொள்ளாச்சி நகரம் அமைந்துள்ளது. அதோடு கோயம்புத்தூர் வால்ப்பாறையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

வால்ப்பாறையிலும் அதை சுற்றிலும் இருக்கும் சுற்றுலா தளங்கள்

வால்ப்பாறையின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, நீரார் அணை, கணபதி கோவில், அன்னை வேளாங்கன்னி ஆலயம், சோலையார் அணை, புல் குன்று ஆகியவை அறியப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான காட்டுப் பகுதிகள் இன்னும் சுற்றுலாப் பயணிகளால் அணுக முடியாத இடத்தில் இருக்கின்றன.
மழைப்பொழிவு மற்றும் புல்நிறைந்த மலைகளின் காரணமாக 'தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி' என்று வால்ப்பாறை அழைக்கப்படுகிறது. இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான சின்னக்கல்லாரை இதற்கு ஒரு உதாரணம். இவ்விடம் தோட்டங்களுக்கும், தேனீர் தொழிற்சாலைகளுக்கும், அணைகளுக்கும் பெயர்பெற்றதாக இருக்கின்றது.
தேனீர் தோட்டங்களின் வழியாக காலையில் நடைபயில்வது உங்கள் ஆன்மாவை இயற்கையின் மடியில் விழித்தெழச் செய்யும் அற்புத உணர்வு. இவ்விடத்தின் காட்டு வாழ்க்கையும், இயற்கை அழகும் புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

வால்ப்பாறையை எப்படி அடைவது?

சாலைவழியாகவும், தொடர்வண்டி வழியாகவும் வால்ப்பாறை நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. வால்ப்பாறைக்கு நெருக்கமான விமானநிலையம், 107 கி.மீ. தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் விமானநிலையம்.
சாலை வழியாக வால்ப்பாறைக்கு செல்வது மிகவும் சுலபம். கோயம்புத்தூரில் இருந்து சொகுசு வாகனங்கள் ஏற்கக்கூடிய கட்டணத்தில் உங்களை வால்ப்பாறைக்கு அழைத்துச் செல்லும்.
வால்ப்பாறையின் பனிக் காலங்களிலும், மழைக் காலங்களிலும் குளிர் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இந்தக் காலங்களிலும் நீங்கள் வால்ப்பாறைக்கு சுற்றுலா வரலாம். எனினும் கோடை காலங்களில் நிலவும் இதமான தட்பவெப்பநிலை சுற்றுலாவுக்கு மிகவும் பொருத்தமானது.
Thanks to Thatstamil.com