மஹாபாரத யுத்தம் பதினெட்டு நாட்கள் நடந்தது. அதில் பத்தாவது நாள் யுத்தத்தில் பிதாமகன் பீஷ்மர் அர்ஜுனனால் அம்புக்கு இரையானார். பதினெட்டு நாட்கள் யுத்தம் முடிந்ததும் கௌரவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர். யுதிஷ்திரர் ( தருமர் ) ஆட்சி அமைத்தார். ஆட்சி அமைத்த பிறகு மரண படுக்கையில் மரணத்துக்காக ( உத்தராயணம் வரும் வரை ) இரண்டு மாதம் வரை அம்பு படுக்கையில் இருக்கின்ற பிதாமகன் பீஷ்மரை காண சென்றார்.
அப்போது தனக்கு இருக்கின்ற சந்தேகங்களை பிஷ்மரிடம் கேட்டார். அணைத்து கேள்விகளுக்கும் பீஷ்மர் பதில் அளித்தார். அப்போது பகவான் ஸ்ரீ விஷ்ணு வின் ஆயிரம் பெயர்களையும் கூறினார்.
யுதிஷ்திரரின் கேள்விகள் :
===================
1. யார் இந்த உலகத்தின் முக்கிய கடவுள் ?
2. யாருக்கு செய்கின்ற பிராத்தனை அனைவரின் புகலிடமாக இருக்கிறது?
3. எந்த கடவுளை வனங்குவதன் மூலம் ஒரு மனிதன் அமைதி மற்றும் நல்ல வாழ்க்கை கிடைகிறது?
4. எந்த கடவுளை புகழ்த்து படுவதால் ஒருவனுக்கு சந்தோசம் கிடைக்கும்?
5. உங்களை பொருத்தவரை எது தர்மம்,எது நல்ல செயல் ?
6. எல்லா ஜீவ ராசிகளும் பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுபட யாரை வணங்க வேண்டும் ?
பீஷ்மரின் பதில்:
=============
இந்த உலகத்தின் கடவுள் ஸ்ரீ விஷ்ணு . எல்லா கடவுளின் கடவுள். முடிவில்லாதவர். புனிதமானவர். இவருடைய ஆயிரம் நாமங்களை பூஜிப்பதன் மூலன் ஒரு மனிதன் முக்தி அடையலாம். யார் ஒருவன் அந்த கடவுளை நிலையான புத்தியுடன் பூஜிக்கிறானோ தியானிக்கிரானோ அவன் அழிவை அடைவதில்லை.
அப்படிப்பட்ட கடவுளை எவன் ஒருவன் பணிந்து நமஸ்காரம் செய்கிறானோ அவன் அவருடைய அருளை பெறுவான்.
ஸ்ரீ விஷ்ணு ஆரம்பம் முடிவு இல்லாதவர். இந்த உலகத்தின் உச்ச கடவுள்.
இந்த உலகத்தை முற்றிலும் அறிந்தவர் அவரே. துக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவருடைய நாமத்தை எவன் ஒருவன் தொடர்ந்து பூஜிப்பானோ அவன் எல்லா கஷ்டங்களில் இருந்தும் விடுபடுவான்.
..
ஸ்ரீ விஷ்ணு மிகவும் பிரகாசமானவர் . அனைத்தையும் கட்டுபடுத்துபவர். அவர் உச்சமான உண்மை. அடையப்பட வேண்டியவர்.
..
அவர் சுத்ததிற்கு எல்லாம் சுத்தமானவர். புனிதத்திற்கு எல்லாம் புனிதம். கடவுளுக்கு எல்லாம் கடவுள். அணைத்து ஜீவ ராசிகளின் தந்தை. அவர் தான் ஸ்ரீ விஷ்ணு பகவான்.
யுதிஷ்டிரர் ,ஸ்ரீ விஷ்ணுவின் அருள் பெறுவதற்கு பீஷ்மர் கொடுத்த அறிவுரை:
==========================
ஸ்ரீ விஷ்ணு தான் முதன்மை கடவுள். அவருடைய ஆயிரம் நாமங்களை பூஜிப்பதன் மூலம் பயத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுதலை பெறலாம்.
முன்னுரை :
==========
சஹஸ்ரநாமம் மூன்று பாகங்களாக சொல்லப்பட்டு இருக்கிறது. முதல் பாகம் முன்னுரை இரண்டாம் பாகம் ஸ்ரீ விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் மூன்றாம் பாகம் அந்த ஆயிரம் நாமங்களை பூஜிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்.
வியாச முனிவர் விஷ்ணு பகவானுக்கு உண்டான பிராத்தனை பற்றி எழுதி இருக்கிறார்.
தெய்வீக ரிஷி வியாசர் தன்னுடைய நமஷ்காரங்களை பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணு விற்கு செய்தார்.
..
முதன்மை கடவுளும் லக்ஷ்மி யின் இருப்பிடமும் மஹா விஷ்ணு, அவர் தான் பகவான் நாராயணன், அணைத்து பூஜையையும் அனுபவிப்பவர்.
சஹஸ்ரநாமம் சொல்வதன் மூலம் தெய்வீக சிந்தனையும் ஒழுக்கமும் நிலைத்த மனமும் கிடைக்கும். இந்த முதல் நிலை பிராத்தனை மனதை தயார் படுத்தி ஆயிரம் நாமங்களை பூஜிக்க வழி வகுக்கும்.
..
அமிர்தத்தின் சாறு என் மீது பாயட்டும் சூரிய கதிர்களை போல
தேவகியின் மகன் என் மீது சக்தியை கொடுக்கட்டும்.
தெய்வீக மந்திரங்கள் என் மீது கருணை கொள்ளட்டும் .
சங்கும் ( பேச்சு ) சக்கரமும் ( நினைப்பு ) கத்தியும் ( செயலும் ) என்னுடன் இணையட்டும்.
தெய்வீக ஆயுதங்களான வில்லும் கதையும் என்னை காக்கட்டும்.
என்னோட பார்வை தேரோட்டியான ஸ்ரீ கிருஷ்ணரின் பார்வை போல இருக்கட்டும்.
மூன்று வேதங்களும் என்னை பாதுகாக்கும் கவசம் ஆகட்டும்.
என்னுடைய வாழ்கையின் ஆதாரம் தெய்வீக அருளை பெறட்டும்.
என்னுடைய பிராத்தனைகள் உண்மையாகட்டும்.
என்னுடைய பிராத்தனை பிரபஞ்சத்தின் உண்மையை நோக்கி போகட்டும்.
நான் விஷ்ணுவை வணங்குவதற்கு இந்த ஆயிரம் நாமங்களை பூஜிக்கிறேன்.
ஹரி ஓம் நமோ பகவதே வாசுதேவாய
thanks to வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை