சுவாமிஜி ! விவேகந்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips
கேத்ரி மன்னராக இருந்தவர் ராஜா அஜித் சிங். அவரிடம் சுவாமிஜியைப்பற்றி தெரிவித்தார் ஜக்மோகன். சுவாமிஜியைத் தாமே சென்று காண்பதாகக் கூறினார் மன்னர். இதனை கேள்விப்பட்ட சுவாமிஜி தாமதிக்காமல் நேராக அரண்மனை சென்றார். அவரை மன்னர் அன்புடன் வரவேற்று உபசரித்தார். பிறகு அவர் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி, என்பது என்ன?' என்று கேட்டார். அந்தக் கேள்விக்கு அற்புதமானதொரு விளக்கம் அளித்தார் சுவாமிஜி.

'தன்னை அழுத்தத் துடிக்கின்ற சூழ்நிலைகளில் ஓர் உயிர் தன்னை வெளிப்படுத்தவும் பூரணமாக்கவும் முயல்வதே வாழ்க்கை.' இந்த விளக்கம் மன்னரை மிகவும் கவர்ந்தது. தொடர்ந்து, 'சுவாமிஜி, கல்வி என்பது என்ன?' என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, 'சில கருத்துக்கள் நமது நாடி நரம்புகளில் ஊறிப் போவதுதான் கல்வி' என்றார்.

இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது 1891 ஜூன் 4யில் சுவாமிஜிக்கும் கேத்ரி மன்னருக்கும் இடையில் இவ்வாறு தொடங்கிய நட்பு சுவாமிஜியின் வாழ்க்கையில் கேத்ரி மன்னர் ஒரு விலக்க முடியாத அங்கமாக ஆகுமளவிற்கு வளர்ந்தது.

சுவாமிஜியால் கவரப்பட்ட மன்னர் ஒரு நாள், 'சுவாமிஜி, நீங்கள் என்னுடன் என் தலைநகருக்கு வந்து வசிக்க வேண்டும். நான் இதயபூர்வமாக உங்களுக்குச் சேவை செய்வேன்' என்று கேட்டுக் கொண்டார். ஒரு கணம் யோசித்தார் சுவாமிஜி. பிறகு சம்மதித்தார். ஜூலை 24ம் நோள் மன்னருடன் புறப்பட்டு ஆகஸ்ட் 7ம் நாள் கேத்ரியை அடைந்தனர். வழியில் சுவாமிஜியிடம் பல்வேறு விஷயங்களைப் பேசவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் மன்னருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

ஒரு நாள் கேத்ரி மன்னர் சுவாமிஜியிடம், 'சுவாமிஜி உண்மை என்றால் என்ன?' என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, 'இரண்டற்ற ஒன்றே உண்மை. இடையீடின்றி மனிதன் அதை நோக்கியே சென்று கொண்டிருக்கிறான். அவன் உண்மையிலிருந்து உண்மைக்குப் பயணிக்கிறான். தவறிலிருந்து உண்மைக்கு அல்ல' என்றார். தொடர்ந்து இதன் பொருளை விளக்க ஆரம்பித்தார். அறிவு, அனுபவம் வழிபாட்டு முறைகள் எல்லாமே அந்த ஒரே உண்மையை நோக்கித்தான் செல்கின்றன என்பதை விளக்கினார். துறவியும் சரி, இல்லறத்தானும் சரி, அவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் எந்தப் பாதை வழியாகவும் அந்த உண்மையை அடைய முடியும் என்பதையும் எடுத்துக் காட்டினார்.