பூஜை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:25 PM | Best Blogger Tips
மனிதனுக்கு வாழ்க்கையில் நிம்மதியைத் தருவது ஆன்மீகமே. இனம், மதம், மொழி பேதமின்றி நம் நாட்டு மக்கள் கோயிலாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி தினசரி பூஜைகள், விரதங்கள், ஹோமங்கள், யாகங்கள் என்று பலவாறாக தெய்வத்தை வணங்குகிறார்கள்.

இப்படி இருக்க நம் நாட்டு பெண்கள் தினமும் வீட்டில் பூஜை செய்வது என்பது ஒரு பழக்கமாக உள்ளது. பூஜையறை என்பது நம் வீட்டில் உள்ள கோவில் என்றே சொல்லலாம். பூஜையறையில் முதலில் தெய்வ படங்களை சுவரில் மாட்டும் பொழுது தெய்வத்தின் கண்கள் தரையில் படும்படியாக படங்களை மாட்ட வேண்டும்.

படங்கள் பூமியை நோக்கி இருக்க வேண்டும். சாந்தமான தெய்வங்களே வீட்டுக்கு நல்லது. குடும்பம் சந்தோஷமாக, ஐஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் என்று அனைவரும் விரும்புவது உண்டு. ஆகையால் உக்ர தெய்வங்களை வழிபடுவது உகந்தது அல்ல. தெய்வச் சிலைகளை சில பேர் வீட்டில் வைத்து பூஜை செய்வது உண்டு.

சிலைகள் எப்பொழுதுமே 2 அடிக்கு மேல் இருக்க கூடாது. மண் சிலைகளாக இருந்தாலும் சரி, விக்ரஹங்களாக இருந்தாலும் சரி, முறையாக பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் வைத்திருந்தால் நமக்கு பலன் ஏதும் இல்லை. பூஜை அறை என்று தனியாக இருந்தால் பூஜை முடிந்தவுடன் கதவுகளை சாத்தி வைப்பது நல்லது.

பெண்கள் சுத்தமாக இருக்கும் பொழுது மட்டுமே வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போது வாசனை மலர்களால் மட்டுமே அர்ச்சனை செய்வது நல்லது. கோவிலில் துர்க்கைக்கு மற்றும் அம்மனுக்கு அரளி பூ உகந்தது.

ஆனால் வீட்டில் அரளி பூவால் அர்ச்சனை செய்யக் கூடாது. சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, விநாயகருக்கு அருகம்புல் பெண் தெய்வங்களுக்கு மல்லிகை, முல்லை, மற்றும் ஜாதி, தாமரை இப்படி அர்ச்சனை செய்து பூஜை செய்தால் நல்லது.

தெய்வங்களுக்கு பொதுவாக நாம் எந்த மலரால் அர்ச்சனை செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் இப்பிறவியில் மட்டுமன்றி, மறுபிறவிக்கும் பயன் தரும். அலங்காரத்திற்காக பயன்படும் எதுவுமே பூஜையறையில் வைக்கக்கூடாது. ஒரு படம்வைத்து பூஜை செய்தாலும் அது உருப்படியாக இருக்க வேண்டும்.

தூசி, ஒட்டடை படிந்து சுத்தம் செய்யாமல் வைத்திருக்கக்கூடாது. வீட்டில் பூஜையறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு, மண் அகல் மற்றும் இரண்டு குத்து விளக்குகள் ஏற்றினால் நல்லது. மூன்று அடுக்கு வைத்த விளக்கு மிகச் சிறப்பானது. விளக்கு பூஜை செய்பவர்கள் ஒரு குத்து விளக்கில் ஐந்து முகமும் ஏற்றி பூஜை செய்யலாம்.

விளக்கு பூஜை செய்பவர்கள் ஒரு முகம் மட்டும் ஏற்றி செய்வது அவ்வளவு உகந்தது அல்ல. வீட்டில் பூஜை அறையில் எப்பொழுதும் ஒரு செம்பு தண்ணீர் இருப்பது நல்லது. அதே போல் கற்பூரம் ஆரத்திக்குப் பதிலாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆரத்தி செய்வது நல்லது. எக்காரணத்திலும் கடலெண்ணெய் தீபம் ஏற்றக் கூடாது.

இறந்தவர்கள் படங்களை பூஜையில் தெய்வ படங்களுடன் மாட்டக் கூடாது. இறந்தவர்கள், தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுவார்களே தவிர அவர்கள் தெய்வம் அல்ல. அதனால் இறந்தவர்கள் படங்கள் தனியாக வைத்து பூஜை செய்வது நல்லது.