குடற்புழுவை நீக்க ஒரு சிறந்த மருத்துவம் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:16 PM | Best Blogger Tips


இயற்கை மனிதனுக்கு எந்த அளவு ஆரோக்கியம் தரும் பொருட்களை கொடுத்துள்ளதோ, அதை சீராக பயன்படுத்தி நலம் பெற நினைக்காத மனிதன் அதை தீமையாக்கி தன் ஆரோக்கியத்தைக் கெடுத்து வாழ்கிறான்.

உணவு, பாதுகாப்பற்ற குடிநீர், மாசடைந்த காற்று இவற்றால் மனிதனுக்கு பலவிதமான நோய்கள் உண்டாகின்றன. ஒரு நாட்டின் பொருளாதார நிலை, மக்களின் தனிப்பட்ட வாழ்வாதார சூழ்நிலை இவைகளைப் பொறுத்தே உடல்நிலை அமைகிறது.

மனிதனின் முறையற்ற உணவுப் பழக்கத் தாலும், உணவாலும், உடல் நோய்க்கு ஆளாக நேரிடுகிறது. இந்த வகையில் உணவின் மூலம் உடலுக்கு சென்று பல்கிப் பெருகி உடலை பாழ்படுத்தும் சிறுகுடற் புழுக்களும் உண்டு. இவை உணவின் மூலம் உடலுக்குச் செல்வதோடு, சில சமயங்களில் சருமத்தின் மூலமும், நீரின் மூலமும் செல்கிறது. இவ்வாறு உடலுக்குச் சென்று உடலில் குடித்தனம் நடத்தும் புழுக்கள் நாற்பது வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சிறுகுடற் புழு.

Ascaris lumbri coides என்னும் சிறுகுடற்புழு எல்லா நாட்டு மக்களின் உடலிலும் காணப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், சீனா போன்ற நாடுகளிலும், பசிபிக் தீவு, பகுதிகளில் வாழும் மக்களிடம் அதிகம் காணப்படுகிறது.

அசுத்தமான பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவ தாலும், சுகாதாரமற்ற குடிநீரை அருந்துவதாலும், அசுத்தம் நிறைந்த பகுதிகளில் குடியிருப்பதாலும், அசுத்தகாற்றை சுவாசிப்பதாலும், இவை மனித உடலுக்குள் செல்கின்றன.

சுகாதாரமற்ற எண்ணெய் பொருள்கள் ஒரு தடவை சமைத்த எண்ணெயை திரும்ப சமைப்பது, சுகாதாரமற்ற தண்ணீர் அருந்துவது, பல நாட்களுக்கு முன்பு சமைத்த பொருட்களை மீண்டும் மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவது போன்ற சுகாதாரக் கேடுகளால் வயிறு செரிமான சக்தி இழந்துகாணப்படும். இச்சமயத்தில் சிறுகுடல்புழு முட்டையானது வயிற்றுக்குள் சென்று வளர ஏதுவாகிறது.

சிறு குடற்புழு உடலிலே வளர்ச்சியடைந்து விடுகிறது. இந்த வகை சிறுகுடற்புழுக்களை விருந்தாளியாக ஏற்றுக்கொள்வது மனிதன் மட்டும் தான்.

மனிதனின் உணவுக் குழாய் வழியாகச் செல்லும் இந்தப் புழு முட்டையானது வயிற்றுப் பகுதிக்கு சென்றவுடன் அங்குள்ள செரிமான திரவத்தால் முட்டைகள் பொரிக்கப்பட்டு சிறு புழுக்களாக வெளியேறி சிறு குடலின் மேற்பகுதிக்குச் செல்கின்றன.

இத்தகைய சிறு புழுவானது (Larvae) சிறுகுடலின் மெல்லிய சவ்வுகளைத் துளைத்துக்கொண்டு, கல்லீரலுக்குச் செல்கிறது. இது இரத்த நாளங்கள் வழியாக நடைபெறுகிறது. கல்லீரலில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் விருந்தாளியாகத் தங்கவிட்டு அதே இரத்தக்குழாய் வழியாக இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து நுரையீரலை அடைகிறது. பிறகு நுரையீரலிலிருந்து மூச்சுக்குழல் வழியாக முன்பக்கம் உந்தித் தள்ளி உணவுக் குழலுக்குள் சென்று இரைப்பையைத் தாண்டி, பழையபடி சிறுகுடலின் மேற்பகுதிக்குச் சென்றுவிடுகிறது. இந்த சிறிய புழு பெரிய புழுவாக மாற ஆறு வாரங்கள் முதல் பத்து வாரங்கள் ஆகும்.

நன்கு வளர்ச்சியடைந்த புழு, மண் புழுவைப் போன்று உருவத்தைப் பெற்று நீண்ட உருண்டை வடிவமாக காணப்படும். இதன் இரு முனைப் பகுதிகளும் குவிந்து காணப்படும்.

சிறுகுடற் புழுக்களால் உண்டாகும் நோய்கள்

சிறு குடல் புழுக்கள் அதிகத் தொல்லை கொடுப்பவை. இதனால் சளி, மேல்மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும். உடலெங்கும் நமைச்சல் உண்டாகும். இதனால் ஈசனோபீலியா என்னும் கிருமி ரத்தத்தில் பரவு காரணமாகிறது.

நன்கு வளர்ந்த புழுவினால் டைபாய்டு போன்ற காய்ச்சல், உடல் நமைச்சல், முக வீக்கம், கண் நோய் போன்றவை உண்டாகும். மேலும் இந்தப் புழுக்களால் குடல்வாத நோய், கல்லீரல் கட்டி, மஞ்சள் காமாலை போன்றவையும் ஏற்பட வாய்ப்புண்டு.

சிறு குழந்தைகளுக்கு நெஞ்சுப் பகுதி சதைப்பற்று இன்றி கூடுபோல காணப்படும்.

குழந்தைகள் தூங்கும்போது பல் கடிக்கும். அரைக்கண் கொண்டு தூங்கும். எந்நேரமும் உதட்டைக் கடித்துக் கொண்டே இருக்கும்

குழந்தைகள் உணங்கிப்போய் காணப்படும். முகத்தில் இலேசான வெள்ளைத் தழும்புகள் தோன்றும்.

பள்ளி செல்லும் குழந்தைகளின் கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.

உடல்கூறுகளுக்குத் தகுந்தவாறு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும், காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காமல் மாலையில் மட்டுமே மலம் கழிக்கும்.

குழந்தைகள் காலை எழுந்தவுடன் மலம் கழிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும். ஒருசில குழந்தைகள் காலை உணவுக்குப்பின் மலம் கழிக்கும். அல்லது பள்ளிக்குச் சென்றபின் மலம்கழிக்கும். இதற்கு சிறுகுடற்புழுக்கள்தான் முக்கிய காரணம்.

ஒரு சில குழந்தைகளுக்கு மலத்துவாரத்தில் அரிப்பு ஏற்படும். குழந்தைகள் சொல்லத் தெரியாமல் அழுதுகொண்டே இருக்கும்.

சிறுகுழந்தைகளுக்கு சிறுகுடற்புழுக்களால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவை கண்களைத் தாக்கி கண்களுக்கு கண்ணாடி போடும் சூழ்நிலை உருவாகும். கல்லீரல் பாதித்தால் கண்பார்வைக் கெடும். இந்த சிறு குடற்புழுக்கள் பற்றி அதிகம் கண்டறிய முடியாது. இதனால் வரும் நோய்களை குணப் படுத்தினாலும், மீண்டும் மற்றொரு நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த புழுக்களை முழுவதுமாக அழிப்பதுதான் சிறந்த வழியாகும்.

சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சூப் கொடுப்பது நல்லது.

சின்ன வெங்காயம் -2

நல்ல மிளகு - 2

சீரகம் - 1/2 ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு


தேவையான அளவு - கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)

பூண்டு - 1 பல்

சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை
வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்