தெய்வத்தின் துணை*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:56 | Best Blogger Tips

 



சகாதேவன், தனக்கு ஜோதிடக்கலை

தெரியும் என்ற ஆணவத்தில் சற்று கர்வம்

அதிகமாகிவிட்டது. துரியோதனன்,

பாண்டவர்களை அழிப்பதற்கு,

போருக்கான சிறந்த நாளை கணித்துக்

கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க,

சகாதேவனும் நாளைக்

குறித்துக்கொடுக்கிறான். அந்தளவிற்கு

தன் கலையில் உண்மையாக இருந்தான்.

போரில் கர்ணன் இறக்கும்

தருவாயில்தான், கர்ணன் தன்

உடன்பிறந்தவன் என்ற உண்மை

தெரியவருகிறது. இதனால் தான் கற்ற

கலையில் இந்த உண்மையை தெரிந்து

கொள்ளமுடியவில்லையே என்று

ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான். 18

நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர்

முடிவடைந்தபின் சகாதேவன்

கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா *ஜோதிடம் என்பது பொய்தானே* என்று

கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன்

ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே

இப்படி கூறலாமா என்று கேட்கிறார்.

ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு

ரகசியமும் என் கணிதத்தில்

தெரிந்துகொண்டேன், ஆனால் கர்ணன்

என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என்

கணிதத்தில் வரவில்லை

அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே

கிருஷ்ணா? என்று மீண்டும் கேள்வி

எழுப்பினான் சகாதேவன்.

இதை

பொறுமையாக கேட்ட கிருஷ்ணன்

சொன்னாருபாருங்க பதில்.

*அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்துகொண்டால் பிறகு நான் எதற்கு???* இந்த பதிலை கேட்டவுடன்

சகாதேவனுக்கு தூக்கிவாறிப்போட்டது.

அடங்கியது அவன் கர்வம்.எப்படிப்பட்ட

திறமையான மனிதனாக இருந்தாலும் 99% மட்டுமே தங்கள் திறமையை

காட்ட முடியும். மீதி 1% கடவுளின்

பிடியில்.....

*மனிதன் திட்டமிடும் எல்லா காரியங்களுக்கும் சூழ்நிலையும், சந்தர்ப்பமும் சாதகமாக இருந்தாலும் அதை தாண்டி "தெய்வத்தின் துணை" மிக மிக அவசியம்*

*"பாரதம்பேசுகிறது"* நூலில் இருந்து......

 

நன்றி இணையம்