தேவலோகத்தைச்
சேர்ந்த
ஐந்து
தெய்வீக
விருட்சங்களில்
ஒன்று
வில்வம்.
பாதிரி,
வன்னி,
மா,
மந்தாரை
ஆகிய
ஐந்து
விருட்சங்களைப்
பஞ்ச
விருட்சங்கள்
என்று
போற்றுகின்றன
புராணங்கள்.
இந்த
ஐந்து
மரங்களில்
ஒன்றான
வில்வத்தை
நாம்
தொட்டாலே,
அது
நம்மைப்
புனிதப்படுத்தும்
தன்மை
கொண்டது.
இதை
ஸ்பரிசித்து
உட்கொண்டாலே
மோட்சம்
கிட்டும்
என்பது
இந்துக்களின்
நம்பிக்கை.
வில்வம்
சிவபெருமானின்
அம்சம்
என்பது
மட்டுமல்ல,
முருகனுக்கும்
மிகவும்
பிரியமானது.
முருகனின்
அர்ச்சனை
நாமங்களில்,
'வில்வ
பிரியா'
என்பதும்
ஒன்று.
பெரும்பாலான
சிவாலயங்களில்
வில்வ
விருட்சமே
தலவிருட்சமாக
அமைந்திருக்கிறது.
ஒரே
ஒரு
வில்வ
இலையை
எடுத்து
பக்தி
சிரத்தையுடன்
உட்கொள்ள,
பிறவியின்
தோஷங்கள்
அனைத்தும்
நிவர்த்தி
ஆகிவிடும்.
திரிதளஞ்ச;
திரிகுணாகாரம்;
திரிநேத்ரஞ்ச;
திரியாயுதம்;
திரிஜன்ம
பாப
சம்ஹாரம்
ஏக
பில்வம்
சிவார்ப்பணம்.
என்ற
மந்திரத்தை
உச்சரித்து
உண்பது
பெரியோர்களின்
வழக்கம்.
வில்வத்தின்
விஞ்ஞான
குணம்:
ஆங்கிலத்தில்
வில்வத்துக்கு
ஆங்கில
பெயர்
Aegle marmelos.
ஒரு
தேவதையைப்
போல்
அதீத
சக்திகள் வாய்ந்தது
இந்த
மரம்.
வில்வ
இலைகளில்
சுழலும்
எலெக்ட்ரான்,
தீட்சண்யமான
அதிர்வலைகளை
வெளியிட
வல்லவை.
வில்வ
இலைகளை,
குறைந்தது
பன்னிரெண்டு
மணிநேரம்
தண்ணீரில்
ஊறவைத்து,
அந்த
நீரைப்
பருகுவதால்
உடலின்
ஒவ்வோர்
அணுவும்
புத்துயிரூட்டப்படுகிறது.
வில்வ
இலை
நீருக்குள்
செலுத்திய
மின்காந்த
அலைகள்,
நம்
உடலுக்குள்
புகுந்து
செயல்படுவதே
இதற்குக்
காரணம்.
செப்புக்குவளையில்
வைத்த
நீரில்
வில்வ
இலையை
ஊறப்
போடும்போது,
அதிர்வலைகளின்
செயல்வேகம்
மேலும்
அதிகரிக்கிறது.
நிலத்தில்
ஆழமாக
வேரோடும்
வில்வமரத்தின்
வேர்கள்,
மண்ணைக்
கவ்விப்
பற்றி
நிலச்சரிவு
ஏற்படாமல்
காக்கின்றன.
காலம்காலமாக
மண்ணின்
இறுக்கத்துக்குப்
பெரிதும்
உதவி
உள்ளன
வில்வ
வனங்கள்.
மருத்துவ
குணம்:
வில்வமரத்தின்
வேர்
முதல்
நுனி
வரை
அனைத்து
பாகங்களும்
மருத்துவப்
பயன்
கொண்டவை.
வில்வ
இலைகள்
ஊறவைக்கப்பட்ட
நீரில்
குளித்து,
சோப்பு
போடாமல்
பாசிப்பருப்புப்
பொடி
தேய்த்துக்
கொண்டால்,
தோல்
சம்பந்தப்பட்ட
நோய்கள்
ஏற்படாது.
வில்வ
இலைத்
தளிர்களை
லேசாக
வதக்கி,
இமைகளில்
ஒத்தடம்
கொடுக்க,
கண்
தொடர்பான
நோய்கள்
நீங்கும்.
வில்வ
வேரை
இடித்து
ஒரு
குவளை
நீரில்
கொதிக்கவைத்து,
அதை
காய்ச்சிய
பசும்பாலில்
சேர்த்து
தினமும்
உண்ணும்
ஆண்களுக்கு
உடல்
ஆரோக்கியம்
மேம்படும்.
*ஆரோக்ய
வாழ்வுக்கு
பாரம்பரிய
மூலிகை
மருத்துவ
முறை
அவசியம்
என்பதை
அனைவருக்கும்
பகிர்ந்து
ஆரோக்ய
பாரதத்தை
உருவாக்குவோம்.....!*
நன்றி இணையம்