திருமீயச்சூர் நெய்க்குள தரிசனம்!*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:53 | Best Blogger Tips

 




திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குள தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது. கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்துக்கு வாழையிலையைப் பரப்பி,அதில் சர்க்கரைப் பொங்கலை நிரப்பி பரப்பிடுவர்.அத்துடன் புளிசாதம்,தயிர்சாதம் போன்றவற்றைத் தயாரித்து தேவியின் சந்நிதியின் முன்னால் வாழையிலை,மட்டை, தென்னைஓலை ஆகியவற்றின்மீது 15அடி நீளம்,4 அடி அகலம்,ஒன்றரையடி உயரத்தில்படையலாகப் படைத்திடுவர்.

*சர்க்கரைப்பொங்கல் நடுவே குளம்போல் அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக்கொண்டு நிரப்புவர்.அதன் பின்னர் கருவறையின் திரையைவிலக்கினால், அலங்கரிக்கப்பட்ட அம்மனின் திருவுருவம் நெய்குளத்தில் பிரதிபலிக்கும்.இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.*

திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாதசுவாமி திருக்கோயிலில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம்இது.

*அகிலம் சிறக்க தனது திவ்ய நாமங்களைக் கொண்டே வசினீ தேவதைகள் மூலமாக ஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமத்தை உருவாக்கிய தலம் திருமீயச்சூர்.இங்கு லலிதாம்பிகை ஸ்ரீசக்ரபீடத்தில் மனோன்மணி ரூபமாக அமர்ந்த கோலத்தில் காட்சிதருகிறாள். திருவாரூர் மாவட்டம் பேரளத்திலிருந்து 2 கி.மீ.தொலைவில் உள்ளது இந்தத்தலம்.*


நன்றி இணையம்