இது மனைவிகள் அனைவருக்கும் சமர்ப்பனம்,!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:14 PM | Best Blogger Tips

ஒரு உயர் நிலை பள்ளியில் டீச்சர் ஒரு மாணவனை கூப்பிட்டு போடுல உனக்கு பிடித்த உறவுமுறைகளை 30பேரை எழுது என்றார் ,,,
மாணவன்... அப்பா, அம்மா , தாத்தா , பாட்டி ,மனைவி , மகன் ,மகள், அக்கா ,தங்கை, அண்ணன் ,தம்பி, சித்தப்பா , சித்தி ,மாமா , அத்தை , காதலி, நண்பன், ,இப்படியாக 30 பேர் எழுதினான்...
டீச்சர்... கண்டிப்பாக இதில் மூன்று பெயரை அழிக்க ,வேண்டும்.. யாரை இழக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அந்த பெயரை அழி என்றார்...
மாணவன் ...காதலி, நண்பன் , பக்கத்து வீட்டுகாரர்.. இவர்களை பெயரை அழித்தான்...
டீச்சர்... மறுபடியும் மூன்று பெயரை அழிக்க சொன்னார்,,,
மாணவன்... இப்படியாக ஒவ்வொருவராக அழித்தான்.. கடைசியாக அப்பா, அம்மா, மனைவி ,மகன்,மகள் என இவர்கள் பெயர் மட்டும் இருந்தது...
டீச்சர்... இதிலும் ரெண்டு பெயரை நீக்க வேண்டும்.. யார் நீக்குவாய் என்றார்...
மாணவன்... வருத்தத்துடன் அப்பா , அம்மா பெயரை அழித்தான்... மாணவர்கள் அனைவருக்கும் கோபம்...
டீச்சர்.. மறுபடியும் இன்னும் ரெண்டு பெயரை அழிக்க வேண்டும் என்றார்...
மாணவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம்.. யார் பெயரை அழிப்பான் என்று...
மாணவன்.. மிகுந்த சோகத்துடன் மகன், மகள் பெயரை அழித்தான்..கடைசியாக மனைவி பெயர் மட்டும் இருந்தது..
டீச்சரும்... மாணவர்களும் ,..ஆச்சரியமாக கேட்டார்கள் ,.மகன், மகள் பெயரை அழித்து விட்டு... எதற்காக மனைவி பெயர் மட்டும் அழிக்கவில்லை...
அதற்கு மாணவன்... மகள் எப்படி இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு போய் விடுவாள்... மகன் அவன் மனைவி குழந்தை என வாழ்வான்...
கடைசி காலம் வரை என்னோடு வாழ கூடியவள் மனைவிதான் என்றான்...
வாழ்க்கைத் துணை மனைவி மட்டும்தான் நாம் இறக்கும் வரை நம்முடன் வாழ கூடிய ஒரே உறவு...
இது மனைவிகள் அனைவருக்கும் சமர்ப்பனம்...

 நன்றி இணையம்