ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:00 AM | Best Blogger Tips


சத்வ குண பக்தன் மிகவும் ரகசியமாக தியானம் செய்வான்.சிலவேளைகளில் கொசுவலைக்குள் உட்கார்ந்தும் தியானம் செய்வான்."இவன் தூங்குகிறான்.ஒருவேளை இரவெல்லாம் தூக்கம் இல்லைய என்னவோ? அதனால்தான் இன்னும் படுக்கையிலேயே கிடக்கிறான்"என்று மற்றவர்கள் நினைப்பார்கள் .பசியைப் போக்கும் அளவுக்குத்தான் உடல்மீது கவனம் செலுத்துவான்.இவனுக்குச் சோறும் கீரையும் கிடைத்தாலே போதும்,சுவையாக சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் எதுவும் இல்லை.உடையிலும் ஆடம்பரம் இருக்காது.வீட்டுச் சாமான்களும் சாதாரணமாகத்தான் இருக்கும்.
சத்வகுண பக்தன் ஒருபோதும் பிறரை முகஸ்துதி செய்து பணம் சம்பாதிக்க முயல மாட்டான்.
'ரஜோகுண பக்தன் பொட்டு வைத்துக்கொள்வான்.ருத்திராட்ச மாலை அணிந்திருப்பான்.அதில் இடையிடையே தங்கமணிகள் கோர்க்கப்பட்டிருக்கும்.(எல்லோரும் சிரித்தனர்) பூஜை செய்யும்போது பட்டு உடுத்திக் கொள்வான். ..
'தமோகுண பக்தனிடம் நம்பிக்கை கொழுந்துவிட்டு எரியும்.பணத்தைப் பிடுங்குகின்ற கொள்ளைக்
காரனைப்போல் இந்த பக்தன் இறைவனை வற்புறுத்துவான்.
'
அடி,உதை,கட்டு' என்று கொள்ளைக்காரனது வழியே இவனிடம் காணப்படும்.'
... ...ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்