முகத்தின் சரும பிரச்சனைகளை தீர்க்கும் மஞ்சள் மாஸ்க் - இயற்கை அழகு மருத்துவம்
நீங்கள் மஞ்சள் பேக் வாரம் ஒருமுறை உபயோகித்தால், எண்ணெய் வழியாது, முகப்பருக்களுக்கு தடா போட்டுவிடும். சுருக்கங்கள் நீங்கி விடும். கண்களில் உண்டாகும் கருவளையம் மறைந்துவிடும்.
எப்போது கடைகளில் மஞ்சள் பொடியை வாங்கி உபயோகிக்க வேண்டாம். அதில் ரசாயனம் இருப்பதால் அவற்றை உபயோகித்தால் சருமத்திற்கு நல்லதல்ல. மஞ்சள் கிழங்கு வாங்கி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. அதேபோல் தேனையும் ஒரிஜினலா என பரிசோதித்து உபயோகபபடுத்துங்கள்.
மஞ்சள் பொடி - 3 டீஸ்பூன்
யோகார்ட் - டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
யோகார்ட் - டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
முதலில் யோகார்ட்டை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து நன்றாக கலக்கி பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். பின்னர் தேன் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, அதில் மஞ்சள் 2 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது மஞ்சள் மாஸ்க் தயார். இதனை கண்களை தவிர்த்து முகம் முழுவதும் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
வாரம் ஒரு முறை இதுபோல் செய்யவும். முகப்பரு, மாசு, கருமை ஆகியவை நீங்கி முகம் பொலிவாக இருக்கும். நீங்களும் வீட்டில் முயன்று பாருங்கள்.
நன்றி
Karthikeyan L